மார்ச் 23 பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவு நாளில்!
இந்தி திணிப்பு,தேசிய கல்விக் கொள்கை ஏற்க மறுக்கும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பு!
RSS- சங்பரிவங்களே உங்கள் பாசிச சர்வாதிகரத்திற்க்கு
அடிபணியாத தமிழ்நாடு !
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர மாநில தன்னாட்சியே ஒரே தீர்வு என்ற தலைப்பில்
மார்ச் 23 காலை 10:30 மணிக்கு சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து கடந்து 1 மாதமாக தமிழகம் தழுவிய அளவில் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என மாணவர்கள் – இளைஞர் மக்கள் மத்தியில் வீச்சான பிரச்சாரத்தை மேற்க்கொண்டு அதன் அடிப்படையில் மார்ச் 23 காலை 10: 30 மணியளவில் கலைஞர் ஆர்ச்சி அருகில் ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். விண்ணதிர எழுப்பிய முழக்கங்களை அப்பகுதி வாழ் மக்களும், வியாபாரிகளும் கூர்ந்து கவனித்து சென்றனர். இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய தோழர்கள் ஆர்.என்.ரவியின் எதேச்சதிகார போக்கை அம்பலப்படுத்தியும், பாசிச பாஜகவின் மாநில உரிமை பறிப்பே பாசிசம் என்பதையும், அதனை வீழ்த்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து பேசினார்கள்.
இந்த போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மணியரசன் அவர்கள் தலைமை தாங்கினார்.
கண்டன உரை
தோழர். சஞ்சய், மாவட்ட பொருப்பாளர், DSF சென்னை.
தோழர். நாசர் புரூனே, இளைஞர் அரண், மாவட்ட பொருப்பாளர் , சென்னை.
தோழர். மதூர் சத்யா, சமுக செயற்பாட்டாளர்,
தோழர். அம்பேத்கர், வி.வி.மு. மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு.
தோழர். சித்தார்த்தன், மாநில பொருளாளர், மகஇக தமிழ்நாடு.
தோழர். தெய்வீகன், மாநில இணைச் செயலாளர், மக்கள் அதிகாரம். தமிழ்நாடு.
தோழர்.லோகநாதன் , மாநில பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு. தமிழ்நாடு.
தோழர். ச. அன்பு, மாநில பொதுச் செயலாளர் பு.மா.இ.மு. தமிழ்நாடு.
ஆகியோர் பாசிச BJP கும்பலின் பாசிச தாக்குதல்களையும் குறிப்பாக கல்வி துறையில் மீதான தாக்குதல்களை கண்டித்து உரையாற்றினர்.
இறுதியாக தோழர். தமிழ் செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர், பு.மா.இ.மு. அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் – இளைஞர்கள் தோழர்கள் பங்கேற்றனர்.
தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
9500792976.