இந்து சாஸ்திரங்கள் பெண்ணை இழிவுபடுத்துகிறது. சுயமரியாதை உள்ள ஒவ்வொரு பெண்ணும் இதை கொளுத்த வேண்டாமா?
மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ள விசயங்கள் நாகரீகமற்றவையாகவும் இழிவினும் இழிவானவையாகவும் உள்ளன. இதை கணக்கிலெடுத்துக் கொண்டு அவற்றை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கண்டனத்துக்கு அறிகுறியாக அவற்றாஇ தீயிட்டு கொழுத்தத் தீர்மானிக்கிறோம். – டாக்டர் அம்பேத்கர்
ஒரு சாதியர் தான் படிக்க வேண்டும். பார்ப்பனர் தான் படிக்க உரிமை உண்டு என்ற தத்துவம் கொண்டது தான் மனுதர்ம சாஸ்திரம். எவன் சூத்திரனுக்கு படிப்பு சொல்லித் தருகிறானோ அவனே பாவி சூத்திரன் படித்தால் ஒழிந்தே போய்விடுவான். இது தான் மனுதர்மத்தில் காணப்படுவது. – தந்தை பெரியார்
பெண்கள் நிலையற்ற புத்தியுடையவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள் பெண்களின் நட்பு நீடித்தது அல்ல. அவர்கள் கழுதைப் புலிகளின் தன்மையுடையவர்கள். (ரிக்வேதம்)
குடும்பத்தில் பெண் பிறந்தால் அந்த குடும்பம் மகிழ்ச்சிக்குரியது அல்ல. வருத்தத்திற்குரியது (அதர்வணவேதம்)
நாசகாலன், ஊழிக்காற்று, பாதாள கடவுளாகிய எமன் இடைவிடாமல் நெருப்பை கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்புகள், நெருப்பு ஆகியவை ஒன்றாய் சேர்ந்தால் எத்தனை கேடு விளையுமோ அத்தனை கேடு உடையவர்கள் பெண்கள் (மகாபாரதம்)
ஒரு பெண் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்க்கு கணவனையோ பெற்ற குழந்தையையோ சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்வாள் (பாகவத ஸ்கந்தம்)