திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனுதர்ம வேத ஆகம எரிப்பு போராட்டத்தை ஒட்டி மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய போராட்டத்தில் தோழர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கலந்துக்கொண்டனர்.

போராட்டத்திற்கு வருவதற்க்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் மாவட்ட செயலாளர் உட்பட மூவரை சின்ன தாரபுரம் பேருந்து நிறுத்தத்தில் கைது செய்தது காவல்துறை.

இதையும் கடந்து பல்வேறு தோழர்கள் உணர்வுமிக்க இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ராஜூ அவர்கள் நாம் ஏன் தற்போது மனுதர்ம வேத ஆகம எரிப்பு போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம் என்றும், மனுதர்மத்தை எரிக்க வேண்டிய அவசுயம் குறித்தும் விளக்கிப் பேசினார்.

போராட்டத்தின் தொடர்ச்சியாக மாலை அணிவிக்க சென்ற தோழர்களை காவல்துறை அனுமதிக்காமல் அராஜக போக்கை கையாண்டது. மாலைப் போட சென்றால் அனைவரையும் சோதனையிட்டு தான் அனுப்புவோம் என கூறியது.

போராட்டத்தில் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களும், தலைவர்களும் கலந்துக் கொண்டனர்.

சென்னை

சென்னை மவுண்ட்ரோடு சாலையில் உள்ள பெரியார் சிலையின் முன் போராட்டம் துவங்கியது. போராட்டத்திற்க்கு மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் தலைமை தாங்கினார்.

பேரணியாக சென்று பெரியாரின் சிலைக்கு தோழர்கள் மாளை அணிவித்தனர். பின்னர் மே தின பூங்கா அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய தோழர் காளியப்பன் மனுதர்ம வேத ஆகமங்கள் மனிதர்களை எவ்வளவு கீழானவனாக நடத்துகிறது எனவும், தற்போது ஏன் மனுநூல் எரிக்கும் போராட்டம் நடக்கவில்லை எனவும் விளக்கி பேசினார்.

மேலும் மீண்டும் நடக்கும் மனுதர்ம எரிப்பு போராட்டத்தில் மற்ற ஜனநாயக சக்திகள் கலந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் விளக்கினார்.

மக்கள் அதிகாரம் ஊடகக் குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here