ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை!
முதல்வர் கவனிப்பாரா?

பல்லக்கிற்கு பாதுகாப்பு!
படுகொலைக்கு நீதி கேட்கக் கூடாதா?

தூத்துக்குடி என்ன காஷ்மீரா ?
அரசியல் சட்டம் மே.22 அன்று செயல்படாதா?

சிபிஐ-க்கு எதிராய் 1மணி நேர ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாதாம்!
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நெருக்கடி!

000

நாளை மே22- ஸ்டெர்லைட் படுகொலை நினைவு தினத்தையொட்டி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதியும் – ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றக் கோரியும் பேரணி – கூட்டம் நடத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் அனுமதி கோரப்பட்டு, காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

அதனையும் ஏற்றுக் கொண்டு, மோசடியான , கொலைக் குற்றவாளிகள் – சதிகாரர்களுக்கு ஆதரவான குற்ற அறிக்கை தாக்கல் செய்துள்ள சிபிஅய்- யைக் கண்டித்து மறுவிசாரணை கோரி ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால் அதனை தூத்துக்குடி எஸ்.பி, நெல்லை சரக டி.அய்.ஜி மறுக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, நீதி கேட்டு 1 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினால் என்ன நடந்து விடும்? பிரச்சனைக்கான சூழல் தூத்துக்குடியில் ஒருபோதும் இல்லை.

எடப்பாடி அரசின் உளவு காவல்துறையினர்தான் ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக மே.22,2018-ல் திட்டமிட்டு பிரச்சனையை உருவாக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அன்று முதல் இன்றுவரை மே22-யை நெருக்கடி நாளாக காவல்துறை தான் உருவாக்கி வருகிறது.காவல்துறைதான் பதட்டத்தை அதிகரிக்கிறது.

ஆர்ப்பாட்டம் நடத்துவது அரசியல் சட்டப்படியான அடிப்படை உரிமை என்பது காவல்துறைக்குத் தெரியாதா? அரசியல் சட்ட உரிமையை பயன்படுத்தும் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே காவல்துறையின் பணி. தடுப்பது அல்ல. மனிதனை மனிதன் சுமக்கும் இழிவான பல்லக்கு நிகழ்வுக்கு அனுமதி வழங்கி, காவல்துறை பாதுகாப்பும் வழங்கும் தமிழக அரசு, ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு (வெறும் 1 மணி நேரம்) முழக்கமிட அனுமதி மறுப்பது யாரை பாதுகாக்க?

 

காவல்துறை முடிவெடுக்கும் முன் கீழே உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்ற புகைப்படங்களை பார்க்கவும்.

 

சே.வாஞ்சி நாதன், வழக்கறிஞர்.
சட்டஆலோசகர்,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here