‘ஊரோரம் புளியமரம்..’ பாடலுக்குக் குடிபோதையில் ஆபாச குத்தாட்டம் போட்ட பார்ப்பன அர்ச்சகர்கள்!
காரி உமிழும் மக்கள்!


விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் அமையப்பெற்றது தான் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பெரிய முத்து மாரியம்மன் கோவில். இக்கோவிலில் பணி புரியும் பார்ப்பன அர்ச்சகர்கள் நால்வர் (கோமதிநாயகம், சுந்தர், கணேசன், வினோத்) 2025 ஜூன் 26-ல் அடித்த ஆபாச – அருவருக்கத்
தகுந்த கூத்துக்கு அளவே இல்லை.

ஆம். ‘ ஊரோரம் புளியமரம்… உலுப்பி விட்டா சலசலக்கும்… நான் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையா…’
திரைப்படப் பாடலை போட்டுக் கொண்டு மேற்கண்ட நால்வரும் குடிபோதையில் குத்தாட்டம் போட்டு மக்கள் வழிபடும் ‘கோவில் கர்ப்பகிரக’ த்தையே அசிங்கப்படுத்தியுள்ளனர். வெகுமக்கள் பெரிதும் முகம் சுழிக்கத் தகுந்த வகையில், காரி உமிழும் வகையில் இழிவான முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
பூணூல் அணிந்து கொண்டு, உச்சிக்குடுமியை கட்டிக்கொண்டு காவி, மஞ்சள், பச்சை நிற வேஷ்டிகளை தொடைக்கு மேல் கட்டிக்கொண்டு முன்னும் பின்னும் தூக்கி காண்பித்துக் கொண்டு அரை நிர்வாணமாக ஆடிய கேவலமான ஆட்ட பாட்டங்கள் சகிக்கவொண்ணா காட்சிகளை ஊடகங்களில் பார்க்க சகிக்க முடியவில்லை.
வழிபட வந்த பெண் பக்தர்கள் முகத்தில் ஆபாசமான முறையிலே விபூதியை அடித்து இருக்கிறார்கள்.

பார்ப்பன அர்ச்சகர்கள் குறித்து தந்தை பெரியார் சொன்னது இதுதான்:

‘பார்ப்பனர்களுக்கு கோவில் கருவறையில் இருப்பது கடவுளோ சாமியோ அல்ல;
அது வெறும் கல்லு தான் என்பது நன்கு தெரியும். அதனால் தான் அவர்கள் கோவில் கும்பாபிஷேகம் நடத்துகின்ற பொழுது கோவில் கும்பத்தில் தண்ணீரை ஊற்றும் பொழுதே அதோடு அடக்க முடியாமல் இருந்த தனது சிறுநீரையும் கலந்து விடுவான்; கீழே நிற்கும் நமது பாமர மக்கள் ஒட்டுமொத்தமாக தீர்த்தமாக வாங்கி குடிப்பார்கள்; கோவில் கர்ப்ப கிரகத்திற்குள்ளேயே தூப்பாக்குழி வழியாக மூத்திரத்தை அடிப்பான்; துப்பாக்குழி வழியாக வரும் அந்தக் கழிவை நமது சூத்திர பஞ்சமர்கள் வெளிப்புறம் நின்று தீர்த்தம் என்று வாங்கி வாயில் ஊற்றிக் கொள்வார்கள். இது தவிர கோவிலுக்குள் என்னென்ன லீலைகளை செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து கொள்வார்கள்.

நமது சூத்திர பஞ்சமர் மக்கள்தான் அவனிடம் ஏமாந்து பணத்தையும் நகைகளையும் கொட்டி அழுவார்கள்; ஆனால் பார்ப்பானுக்கு கடவுள், சாமி என்பது வெறும் கல்லு தான் என்பது மிக நன்றாகவே தெரியும்…’ என்று தந்தை பெரியார் கூறிய கூற்று எவ்வளவு உண்மையானது என்பதனை 26-06-2025ல் திருவில்லிப்புத்தூர் முத்து மாரியம்மன் கோவில் நிகழ்வு மூலமாக பார்ப்பன அர்ச்சர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்கள்.

‘முருக பக்தர்கள் மாநாடு’ நடத்திய எந்தப் பயலும் இதற்கு வாய் திறக்கவில்லை!

இவ்வளவு அக்கிரமம் திருவில்லிப்புத்தூரில் நடந்திருக்கின்ற பொழுது, இக் கேவலம் குறித்து ‘முருக பக்தர்கள் மாநாடு’ என்ற பெயரில் அரசியல் அறுவடைக்கான மாநாடு நடத்திய பார்ப்பன மற்றும் சூத்திரத்’தலைவர்கள்’ எந்தப் பயலும் அல்லது சிறுக்கியும் வாய் திறக்கவில்லை.

இந்த லட்சணத்தில் முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒன்று: ‘இந்து கோவில்கள் அனைத்திலிருந்தும் இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும்’ சொல்லவே வேண்டாம். அனைத்து கோவில்களையும் பாலியல் தொழில் செய்யும் கூடாரமாக மாற்றி விட்டு தான் மறு வேலை பார்ப்பார்கள் இந்தப் பார்ப்பனக் கூட்டம்.

ஏனெனில் ஆர்எஸ்எஸ் – பாஜக – இந்துத்துவ – சங் பரிவார் கூட்டத்தில் சங்கமம் ஆகிவிட்ட அனைவரது நடத்தைகளுமே ஒருசேரப்பட்டது என்பதினால் யாரை இகழ்வது? அல்லது யாரைப் புகழ்வது? எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

பாஜகவில் முன்னணி நட்சத்திரமாக இருந்த கே. டி. ராகவன் ‘கடவுள்’ முன் ஆபாசமாக நடந்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு இன்று மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டான். ஆனால் அப்படிப்பட்ட கயவன் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றவாளியான முன்னாள் சங்கராச்சாரி விடுதலை செய்யப்பட்டான்.

சில ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் கோவிலில் லட்சுமி என்ற தலித் இளம் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய தீட்சிதர்கள் தண்டிக்கப்படவில்லை.

காஞ்சியில் பக்தைகளான இளம் பெண்களை சீண்டிய தேவநாதன் தப்பித்துக் கொண்டான்.

அதே காஞ்சியில் வழிபடச் சென்ற அனுராதாவை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க முயன்ற பார்ப்பனர்கள் பிடியிலிருந்து தப்பித்து சென்னை வந்து சேர்ந்த பின்பும், அவரை காஞ்சிமட அடியாட்கள் விரட்டி வந்து மிரட்டி சென்றதும் பழங்கதையாகப் போய்விட்டது.

முன்பு காஞ்சிக் கோயில் அர்ச்சக பார்ப்பனன் ஒருவன் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்கின்ற பொழுது பெண் துப்புரவுப் பணியாளர் மீதுமோதியதில் காயம் பட்ட அப்பெண், அர்ச்சகப் பார்ப்பானை மூர்க்கத்தனமாக தாக்கி ரத்தம் கொட்டச் செய்துவிட்டார்.

படிக்க:

 குமார வயலூரில் தொடங்கிய போராட்டம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வரை ஓயாது!

♦ அனைத்து சாதி அர்ச்சகர் தீர்ப்பு | தேவை புதிய சட்டத்திருத்தம்!

மறுநாளே பார்ப்பனக் கூட்டம் ஒன்று சேர்ந்து காஞ்சிமடம் முன்னர் ‘திமுக ஆட்சியில் அப்பாவி அர்ச்சர்களுக்கே பாதுகாப்பில்லை’ என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் போலீஸ் கிடுக்குப்பிடியில் மாட்டிக்கொண்ட அந்த அர்ச்சக பார்ப்பான் முழு உண்மையையும் வாக்குமூலமாக கொடுத்து மொத்தக் கூட்டமும் அம்பலப்பட்டுப் போனது.

ஆகம விதி குறித்தும், குழந்தைத் திருமணம் குறித்தும் ஆர். என். ரவியும், எச். ராஜாவும் ஆடாத ஆட்டமா?

கோவில்களில் அர்ச்சனை செய்வதற்கு ஆகம விதி மிக முக்கியம்; எனவே பார்ப்பனத்தி வயிற்றில் பிறந்தவர்கள் மட்டுமே அர்ச்சகர்கர்களாகும் தகுதி படைத்தவர்கள் ஆவர். சூத்திர பஞ்சமர்கள் அங்கு நுழையவே முடியாது… என்று பட்டாச்சாரியார்கள், தீட்சிசதர்கள், பார்ப்பன அர்ச்சகர்கள் மட்டுமல்ல; காரைக்குடி எச்ச.ராஜா பார்ப்பனன் எந்நேரமும் குரைத்துக் கொண்டே இருக்கின்றான்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை பார்ப்பணக் கூட்டம் ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றம் வரை சென்று ஊளையிடுகிறது. இவ்வளவு கட்டுப்பாடு மிகுந்த ஆகம விதியின்கீழ் நடந்து கொள்ளும் பார்ப்பன அர்ச்சர்கள் கூட்டம் தான் மேற்கண்ட இழி செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட வண்ணம் உள்ளனர். இதற்கு எச்ச ராஜா, நிர்மலா சீதாராமன் வகையறாக்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

இதே நிர்மலா சீதாராமன் தான், முன்பு தூத்துக்குடியில் திருச்செந்தூர் முருகன் கோயிலை வழிபட்டு விட்டு பக்தர்களைப் பார்க்கின்ற பொழுது ‘நீங்கள் உண்டியலில் செலுத்தும் தொகை அனைத்தையும் அர்ச்சகர்களின் தட்டுகளில் போடுங்கள்; உங்களுக்கு புண்ணியம் நிச்சயம் கிடைக்கும்…’ என்பதாக உபதேசம் செய்தார். ஊறுகாய் மாமி நிம்மி திருவில்லிபுத்தூர் சம்பவத்திற்கு மொத்தமாக பதில் சொல்ல வேண்டும்.

தந்தை பெரியார் கூறினார். திருமண வயது பெண்களுக்கு 22 என்றும் ஆண்களுக்கு 25 என்றும் சட்டம் இயற்ற கோரினார். ஆனால் குறைந்த பட்சமாக 18, 21 என்ற அளவில் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது.

ஆனால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தீட்சிதர் பார்ப்பனர்கள் குழந்தை மணம் செய்து வைப்பதை அறிந்து நடவடிக்கை எடுக்க முற்பட்ட பொழுது, அதையும் தடுத்து நிறுத்தியது நீதிமன்றம். அதற்குப் பக்கவாத்தியம் வாசித்தார் நமது தமிழ்நாட்டு ஆளுநர் ஆர். என். ரவி. அது மட்டுமா? தானே குழந்தை திருமணம் செய்து கொண்டவன் தான் என்று துளியும் வெட்கமில்லாமல் வெளிப்படுத்தினார் ஆர். என். ரவி. குற்றவாளிகளாய் சிறையின் உள்ளே இருக்க வேண்டியவர்கள் எல்லாம் ‘மேதகு’ பதவிகளை நாடங்கும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவமான கரமாகியுள்ளது.

எனவே தான் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின உழைக்கும் மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து முற்றாக விடுபட வேண்டும்; இப்படிப்பட்ட ஏமாற்றுக்கார – மோசடி – மொள்ளமாரித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடும் தீய சக்திகளான பார்ப்பனக் கூட்டத்தை தண்டிக்கவும் ஒதுக்கி வைக்கவும் போராட முன் வர வேண்டும்.

தமிழ்நாடு அரசே, திருவில்லிபுத்தூர் பெரிய முத்து மாரியம்மன் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் கோமதிநாயகம் சுந்தர், கணேசன், வினோத்… நால்வரையும் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும். தக்க தண்டனை வழங்க வேண்டும்.

  • எழில்மாறன்

2 COMMENTS

  1. திருவல்லிப்புத்தூர் பெரிய முத்து மாரியம்மன் கோவில் பார்ப்பன அர்ச்சகர்கள் நால்வரும் இவ்வளவு இழிவான நிகழ்வுகளை அரங்கேற்றிய பின்னரும் தமிழ்நாடு அரசும, காவல்துறையும் அவர்கள் நால்வரையுமே இதுவரை கைது செய்து சிறையில் தள்ளாதது மிகவும் கண்டனத்திற்குரியது. எது எதற்கோ தாமாக முன்வந்து வழக்கினை எடுத்து நடத்தும் நீதித்துறை குறிப்பாக ஜி.ஆர். சுவாமிநாதன் ஆனந்த் வெங்கடேஷ் லட்சுமி நாராயணன் போன்ற சங்கி நீதிபதிகள் ஒரு கோயிலுக்கு அர்ச்சகர்களாக இருக்கும் இந்தப் பார்ப்பனர்கள் இவ்வளவு ஆபாசத்தை அரங்கேற்றிய பின்னரும் ஏன் தாமாக முன்வந்து வழக்கினை துடித்திருக்கக் கூடாது? அதிலும் கொடுமை ஒரு பெண் பத்தர்மீது முகத்தில் விபூதியை அதிக அளவில் விசிறி அடித்து கேவலப்படுத்தியது மட்டுமல்லாமல் அப்பெண்மணி கண்ணை கசக்கி கொண்டு துன்பப்படுகின்ற காட்சியை பார்த்து இந்த பார்ப்பன அர்ச்சகர்கள் கும்மாளம் போட்டு சிரித்து ரசித்திருக்கிறார்கள் என்றால் இவர்களை செருப்பாலும் விளக்கமாற்றாலும் அடிக்க வேண்டுமா? வேண்டாமா? சென்னை மாநகராட்சி கவுன்சிலர் திமிர் பிடித்த பார்ப்பனத்தி வாயைத் திறந்தாலேயே சாக்கடையாக கொட்டும் ‘கோவில்களில் பிராமணாளைத் தவிர வேறு எந்தப் பயலுக்கும் அர்ச்சராகும் தகுதியே கிடையாது’ என்று ஓங்காரக் குரல் எழுப்பும்
    இந்த சிறுக்கி திருவில்லிபுத்தூர் இந்நிகழ்வுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    இனி எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு அரசு இந்த நால்வருக்கும் அர்ச்சகர் பணி நியமனம் எக்காலத்திலும் வழங்கப்படக் கூடாது. டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மேலும் தற்போது அந்த நால்வருக்கு பதிலாக அர்ச்சகர் பயிற்சி பெற்று வேலையில்லாமல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அர்ச்சகர் மாணவர்களைக் கொண்டு நியமனம் வழங்கப்படல் வேண்டும். இதில் அரசு மெத்தனம் காட்டக்கூடாது. இவ்விடயத்தில் தமிழ்நாட்டு மக்கள் ஒரு முகமாக நின்று குரல் எழுப்பி போராட முன் வர வேண்டும்.

  2. பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தும் கட்டுரை சிறப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here