புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பாக தலைவர் தோழர் சிவா மற்றும் ம.க.இ.க மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமையில் தோழமை அமைப்பு தோழர்களுடன் இணைந்து மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசான பா.ஜ.க -வின் பாசிச மோடி அரசை கண்டித்து திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ விஸ்வநாதன் பள்ளி அருகிலிருந்து தோழர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என 100 -க்கும் மேற்பட்டோர் பேரணியாக கோட்டை இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு இரயில் மறியல் செய்ய முற்பட்ட போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஏன் தடுக்கிறீர்கள்? என கேட்ட நமது வழக்கறிஞர் தோழர் ஆதி -யின் நெஞ்சில் கைவைத்து காவல்துறை அதிகாரியான தில்லைநகர் AC தங்க பாண்டியன் தள்ளி விட்டார். உடனடியாக தோழர்கள் அதிகாரியை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு, காவல்துறை அதிகாரிகள் நம்மை சமாதானப்படுத்தி பேரணியாக கோட்டை இரயில் நிலையம் முன்பு வரை செல்ல அனுமதி அளித்தனர்.
பு.ஜ.தொ.மு மாவட்ட இணைச் செயலாளர் தோழர் மணலிதாஸ் இரயில் மறியலின் நோக்கத்தை விளக்க உரையாற்றி பேரணியை துவங்கி வைத்தார்.
பறையிசையுடன் ஒன்றிய அரசை கண்டித்து விண்ணதிர தோழர்கள் லதா, சீனிவாசன், ஆதி தலைமையில் முழக்கமிட்டபடி பேரணியானது இரயில் நிலையம் நோக்கி சென்றது.
கோட்டை இரயில் நிலையம் முன்பு காவல்துறையினர் தோழர்களை தடுத்தனர். கோட்டை இரயில் நிலையம் என்ற பெயர் தமிழ், ஆங்கிலம், இந்தி என எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்த பேனரில் இந்தி எழுத்தை கறுப்பு மையால் தோழர்கள் அழித்தனர். பெண் தோழர்கள் முன்வந்து இந்தி எழுத்தை அழித்தனர்.
படிக்க:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அதன்பிறகு தோழர்கள் அனைவரும் இரயில் நிலையம் நோக்கி செல்ல முற்பட்டபோது. காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தது.
இப்போரட்டத்தில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன், மாவட்ட இணைச் செயலாளர் தோழர் மணலிதாஸ், தோழர் ஆனந்த், தோழர் செந்தில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா, மாவட்ட பொருளாளர் தோழர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் லதா, மக்கள் அதிகாரம் மாநில இணைச் செயலாளர் தோழர் செழியன், மாவட்ட செயலாளர் தோழர் கார்க்கி, மாநகர செயலாளர் தோழர் மணிமாலை, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் சிவா, பொருளாளர் தோழர் செல்வராஜ், முன்னாள் தலைவர் செல்வராஜ், ஊடகப் பிரிவு தோழர் பிரதீப், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர்.கமலக்கண்ணன், ரெட் பிளாக் கட்சியின் மாவட்ட தலைவர் தோழர் ஏ.சி.இராமலிங்கம், தோழர்.கோபால்,தோழர்.அசோக் வழக்கறிஞர்கள் ஆதி, தாஜிதீன், ராஜன், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை மீட்டர் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இப்போராட்டத்தில், ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, ஆ.ஓ.பா.ச, அ.த.வி.பா.ச, சு.தொ.பா.ச, ஜெ.சி.பி எர்த் மூவர்ஸ், மக்கள் அதிகாரம், த.பெ.தி.க, ரெட் பிளாக் கட்சி என அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெண் தோழர்கள் உட்பட 100 -க்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்றனர்.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருச்சி மாவட்டம்.
மெச்சத் தகுந்த முன்னெடுப்பு! போராளிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! பாசிசக் காவி(லி)க் கூட்டத்தின் சதியை முறியடிப்போம்!!!