சென்னை R.A புரம் கோவிந்த சாமி நகர், இளங்கோ தெருவில் உள்ள மக்கள் வாழ்ந்து வரும் குடியிருப்புகளை (வீடுகளை) 29/4/22 அன்று வருவாய் துறை, சென்னை மாநகராட்சி ஊழியர்கள், போலீஸ் படையுடன் வந்து இடிக்க துவங்கியது.

 

இது ஒரு தனிநபர் போட்ட வழக்கில்  நீதிமன்றம் வழங்கிய அநீதியான தீர்ப்பு. 50,60 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு எந்தவித மாற்று இடமும் ஏற்பாடு செய்யாமல் ஆடு,மாடுகளைப் போல நீதிமன்ற உத்தரவு எனக்கூறி போலீசை வைத்து அப்பகுதி மக்களை அப்புறப்படுத்துகிறது.

தனிநபர் வழக்கு என்பதே கோவிந்த சாமி நகரை ஒட்டியுள்ள அடுக்குமாடிக் குடியிப்புக்கு பின் பக்க வழித் தேவைக்காக சேட்டு ஒருவரால் போடப்பட்ட வழக்கு என்பதே அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு. வழக்கில் குறிப்பிட்டுள்ளதை போல் பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பு இல்லை. அப்பகுதி குடியிருப்பு மக்கள் சொத்து வரி,தண்ணி வரி, கழிவு நீர் வரி என அனைத்து வரிகளையும் சென்னை மாநகராட்சிக்கு செலுத்துகிறார்கள். குறிப்பாக இதுபோன்ற ஆக்கரமிப்பு குடியிருப்புகள் அகற்றம் என்பது இந்தியாவெங்கும் நகரமயமாக்கல் திட்டத்தின் அடிப்படையில் நகரங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து உழைத்த மக்களை அப்புறப்படுத்துவது  கார்ப்பரேட்டுகளின் தேவைக்காகவே. அதுதான் இந்த ஆர்.ஏ புரம் கோவிந்த சாமி நகர் பகுதி உழைக்கும் மக்களின் வீடுகளை இடிப்பதும். இது 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களை உச்ச நீதிமன்ற உத்தரவு எனக்கூறி போலீசை வைத்து விரட்டியடிப்பதை உடனே நிறுத்த வேண்டும்.

தகவல்:

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here