மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டக் களத்தில் மக்கள் அதிகாரம்.


ள்ளக்குறிச்சி கனியமுர் சக்தி மெட்ரிக் பள்ளியில் நடந்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மக்கள் அதிகாரம் சார்பில் தோழமை அமைப்புகள், ஜனநாயக சக்திகளை இணைத்துக் கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால் தமிழக அரசு ஒரே மாதிரியான பதிலை முன்வைத்து தமிழகம் முழுவதிலும் நடக்க இருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுத்தது. கடலூர் உள்ளிட்ட சில இடங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு முன்பே முன்னணி தோழர்களை கைது செய்தது.

மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் போராளிகளின் உணர்வை போலீசின் தடைகள் தடுத்து விடுமா என்ன?

போலீசின் தடைகளை மீறி தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, சென்னை, கோவை, கரூர், சிவகங்கை மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்ட பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் போர்க்குணத்துடன் நடத்தப்பட்டது.

திருச்சி

கோயம்புத்தூர்

புதுச்சேரி

கடலூர்

மக்கள் அதிகாரம் மாநில பொதுச் செயலாளர் தோழர் ராஜூ தலைமையில் போராட்டம்

நீலகிரி மாவட்டம்

காளையார்கோவில்

தஞ்சாவூர்

மயிலாடுதுறை

போராடிய தோழர்களை கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளார்கள்

சென்னை திருவள்ளூர் மாவட்டம்

மாணவியின் மரணத்திற்கு காரணமான சக்தி மெட்ரிக் பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும்.

மரணத்திற்கு காரணமான ரவிக்குமார், சாந்தி ரவிக்குமார் உள்ளிட்ட குற்றவாளிகளை கொலை வழக்கின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

கொலைகார பள்ளிக்கு பின்னணியாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஆர் எஸ் எஸ்- பாஜகவை தடை செய்ய வேண்டும்.

மாணவியின் மரணத்தை பின்னுக்குத் தள்ளிய, கலவரத்தை தூண்டிய பாசிச இந்து மத மதவெறி குண்டர்களையும் கூலிப்படையையும் கைது செய்ய வேண்டும்.

நீதி கேட்டுப் போராடிய அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முழக்கங்களாக எழுப்பப்பட்டன.

உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சந்தர்ப்பவாத முறையில் அணுகும் திமுக அரசை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நடந்த போராட்டம் மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை ஓயாது.

செய்தி:
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here