மீண்டும் தேவாரம், திருவாசகம்! மக்கள் அதிகாரம் துணையுடன் தில்லை சிற்றம்பல மேடையேறியது !

தில்லையில் தமிழ் முழங்குவோம்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் மக்கள் அதிகாரம் தலைமையில் தமிழில் தேவாரம் பாடப்பட்டது!!

தமிழக அரசு நேற்றைய தினம் அரசாணை ஒன்றை வெளியிட்டது.
அது சிவனடியார் ஆறுமுகசாமி அவர்களின் வழக்கில் கிடைக்கப்பெற்ற உத்தரவையும் சமீபத்தில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தில்லையில் தமிழில் முழங்குவோம் என்ற கோரிக்கையின் அடிப்படையில் நடந்த போராட்டத்தின் விளைவாகவும் தற்போது புதிய ஆணை வந்துள்ளது.

அந்த வகையில் இன்று (22/06/2022) காலை 11:00 மணி அளவில் மக்கள் அதிகாரம் தோழர்கள் தோழர் பாலு (மாவட்ட செயலாளர்),

மக்கள் அதிகாரம் அவர்களின் தலைமையில் சிவபக்தர்கள் ராவணன், ஏழுமலை அம்சாராணி உள்ளிட்டவர்கள் கனகசபை சிற்றம்பல மேடையில் ஏறி தமிழில் தேவாரம் திருவாசகம் பக்தி பரவசம் முழங்க பாடினார்கள்.

மேலும் தீட்சிதர்கள் தமிழில் தேவாரம் பாட வரும் பக்தர்களுக்கு முறையாக தீபாரதனை காட்டுவதில்லை, கட்டணங்கள் வாங்காமல் அனைவருக்கும் தீபாராதனை தரிசனம் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டது

இந்நிகழ்ச்சியில் தோழர் செந்தாமரைகந்தன் நகர செயலாளர் மக்கள் அதிகாரம், தோழர் ஷகிலா, தோழர் மணிகண்டன், தோழர் அருள், தோழர் ஆடியபாதம், தோழர் ரவி,
தோழர்கள் மணியரசன், கமல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிசார், சிதம்பரம் சப் கலெக்டர், சிதம்பரம் வட்டாட்சியர் ஆகியோர் இருந்தனர்.

பொதுமக்கள் பலரும் கனகசபை சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் திருவாசகம் பாடினார்கள்.

தகவல்:

தோழர் பாலு
மாவட்ட செயலாளர்
மக்கள் அதிகாரம்
கடலூர் மாவட்டம்.

தொடர்புக்கு:
81108 15963

2 COMMENTS

  1. 140 வருட தீட்சிதர்களின் தீண்டாமையையும்
    ஆணவத்தையும் ஆதிக்க திமிரையும் தோலுரித்த தோழர்களுக்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள்

  2. தமிழில் பாடியது சரி! தீட்சிதர்களை கைது செய்ய முடியாத திமுகவை கண்டிக்காதது ஏன்?
    ஹி ஹி .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here