1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. மொழிவழி மாநிலம் உருவாக்கப்பட்ட 66ஆம் ஆண்டு நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் 01-11-2022 அன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது.

மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு அன்றைய பிரதமர் நேரு அவர்கள் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும் அங்கீகரிக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனடிப்படையில் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப் பட்டுவருகிறது. பல்வேறு காலகட்டங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியில் தொடர்ந்து நடுவணரசு முயற்சித்து தோல்வியையே கண்டுள்ளது. உயர்கல்விகளில் படிக்கவும் , தேர்வு எழுதவும், வேலைவாய்ப்பிற்கும் இந்தி கட்டாயம் என்று மீண்டும் ஒரு மூர்க்கத்தனமான இந்தி திணிப்பை மோடிஅரசு அமல்படுத்த துடிக்கிறது. தற்போது தமிழ் மொழி உள்ளிட்ட தாய்மொழிகள் புறக்கணிக்கபடுகிறது.

பொதுமொழி என்ற கண்ணோட்டத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் உருது கலந்த இந்தி புறக்கணிக்கணிக்க படுகிறது. சமஸ்கிருதம் கலந்த இந்தியை இணைப்பு மொழியாக்க சனாதனிகள் எத்தனிக்கின்றனர். சமஸ்கிருதத்தையும், சனாதனத்தையும் இந்திய கலாச்சாரமாக்க முயற்சியின் ஒரு பகுதியே இந்த இந்தி திணிப்பு. இது இதற்கு முன்னால் இருந்த நடுவணரசுகள் அமல்படுத்த எடுத்த நடவடிக்கையிலிருந்து வேறுபட்டது.

இந்திய அரசியல் சாசனம் எட்டாவது பிரிவின் படி தமிழ்மொழி உள்ளிட்ட 22 மொழிகள் இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்கப்பட வேண்டும், மொழிகள் வளர்ச்சிக்கான நிதியினை சமமாக பிரித்து அளிக்க வேண்டும். பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும், தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் பண்பாட்டுக்கு எதிராக பேசி, தமிழ்மக்களை அவமதிப்பு செய்யும் ஆளுநர் ஆர். என். ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட செய்திகளை பங்கேற்ற கருத்துரையாளர்கள் பதிவுசெய்தனர்.

தமிழ் வழி கல்வியை உயர்த்திப்பிடிப்போம், இந்திமொழி திணிப்பை ஏற்க மாட்டோம், என்று நிகழ்வில் உறுதி ஏற்கப்பட்டது .

உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்

மக்கள் அதிகாரம். மாநில பொருளாளர் தோழர் காளியப்பன், மாவட்ட செயலாளர் தோழர் தேவா, 

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் இணை பொதுச் செயலாளர் தோழர் இராவணன், 

மாநகர தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எழுத்தாளர் தஞ்சை சாம்பான்,

இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் தோழர் துரை.மதிவாணன்,  

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் முத்து உத்திராபதி, 

மாநகரச் செயலாளர் தோழர் ஆர். பிரபாகரன்,  

சிபிஐ(எம்) மாநகர செயலாளர் தோழர்எம்.வடிவேலன்,      

மாவட்ட நிர்வாகி தோழர் என்.குருசாமி, 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்டதலைவர் வெ.சேவையா,  

ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் ரமேஷ்,  

அரசு போக்குவரத்து சங்க நிர்வாகி தி.கஸ்தூரி, 

அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாதுரை, 

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு சு.பழனி ராஜன்,   

விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு முகிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஜெய்சங்கர், தமிழ்முதல்வன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தகவல்:

மகஇக தஞ்சை      

01-11-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here