ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் வேலை செய்து வந்த 350 பேரின் வேலையை பறித்த மோடி அரசு!

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கண்டனம்!

ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின்  கீழ் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் (Integrated Child Development Services) வேலையில் தமிழகம் முழுவதும் வட்டார திட்ட உதவியாளர் பணியில் ஒப்பந்த பணி நியமனம் செய்யப்பட்டிருந்த 350 பேரை 31.10.2022 அன்று நிரந்தரமாக பணிநீக்கம்  செய்துள்ளது. அவர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கான தொகையை ஒன்றிய அரசு பொறுப்பேற்காது என தெரிவித்துள்ளது. இதனால் 350 படித்த இளைஞர்கள் வேலையில்லாதவர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்‌. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாட்டின் குழந்தைகள் ஊட்டச்சத்து இன்மையால் பரிதவித்து வரும் நிலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மோடி அரசு தொடர்ந்து குறைத்து வந்துள்ளது.

இன்னொரு புறம், ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவதாக வாய்சவடால் அடித்து வரும் மோடி  350 பேரை வேலையை விட்டு அனுப்பி உள்ளது. இது தமிழ்நாட்டு கணக்கு மட்டுமே. நாடு முழுவதும் கணக்கிட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்து இருக்கக்கூடும். மேலும், அதே துறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணப்பாளர் வேலையில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலையும் பறிபோகும் அபாயத்தில் உள்ளது.

இந்த வேலை பறிப்பை புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

வட்டார உதவியாளர் பணிகளில் இருந்தவர்களை மீண்டும் பணி நியமனம் செய்!

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்திற்கான நிதியை உயர்த்து!

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் அனைவரையும் நிரந்தரமாக்கு!

தோழர். ச.அன்பு
மாநில பொதுச் செயலாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தமிழ்நாடு


 

All BPA termination order

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here