ஆர்.எஸ்.எஸ்டவுசரை எரித்துப் போராட்டம்! கர்நாடக NSUI மாணவர் அமைப்புக்கு வாழ்த்துகள்!

ஆர்.எஸ்.எஸ்டவுசரை எரித்துப் போராட்டம்!
கர்நாடக NSUI மாணவர் அமைப்புக்கு வாழ்த்துகள்!


ர்நாடக மாநிலத்தில் ரோகித் சக்ரதீர்தா தலைமையிலான பள்ளி பாடநூல் மறு ஆய்வுகுழு பாடநூல்களை காவிமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. குறிப்பாக, சமூக சீர்திருத்தவாதிகள் பற்றிய பாடத்திலிருந்து பெரியார், நாராயணகுரு ஆகியோர் பற்றிய பகுதிகளை நீக்குவது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான ஹெட்கேவரின் பேச்சை பாடத்தில் சேர்த்தது ஆகியவை கவனம் பெற்றது. இதை தொடர்ந்து எழுத்தாளர்கள் S.G சித்தராமையா, சிவருத்ரப்ப பிரதிஷ்டா, ராகவேந்திர ராவ், நடராஜ புதலு, சந்திரசேகர் நாங்லி உள்ளிட்டவர்கள் அரசு பதவிகளில் இருந்து விலகுவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதினர். அரசியல் சட்டத்துக்கு விரோதமாகவும் மத வெறுப்பை தூண்டும் வகையில் நடக்கும் செயல்கள் மீது அரசு பாராமுகமாக இருப்பதாக குற்றஞ்சாட்டினர். மேலும், மூத்த வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் இணைந்து பாடநூல் மறு ஆய்வு குழுவுக்கு எதிராகவும், ஆரம்ப மற்றும் இடை நிலை பள்ளிக் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், காங்கிரசு மாணவர் அமைப்பான NSUI ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளிக் கல்வி அமைச்சர் வீட்டுக்கு முன்பாக ஜுன் 1 ம் தேதி போராட்டம் நடத்தியுள்ளார்கள். அந்த போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.–யின் சீருடையான காவி டவுசரை கொளுத்தி காவி பசிசத்திற்க்கு எதிராக போராடியுள்ளார்கள். கல்வியை காவிமயமாக்கும் RSS – BJP க்கு எதிராக போராடும் கர்நாடக மாநில ஜனநாயக சக்திகளின் போராட்டம் வெல்லட்டும்! நாடு முழுவதும் காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டமாக பற்றிப் பரவட்டும்!
பாசிச எதிர்ப்பு மாணவர் – இளைஞர் முன்னணியை கட்டியமைப்போம்!
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!

தோழமையுடன்;
ச. அன்பு,
மாநில பொதுச் செயலாளர்,
பு.மா.இ.மு. தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here