
விஜய் டிவியில் ஒளிப்பரப்பப்படும் நீயா நானா நிகழ்ச்சி தமிழக மக்களிடையே வரவேற்பு பெற்ற ஒன்று. சில ஆக்கப்பூர்வ விவாதங்கள் சமூகத்தில் பேசுபொருளாக மாறியதும் உண்டு. இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்திற்கும் அதில் பங்குண்டு எனலாம். ஆனால் ஒரு நிகழ்ச்சி அதன் அரசியல் காரணமாக தடை செய்யப்பட்டது கிடையாது.
தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. இருமொழிக் கொள்கையில் தமிழக மக்கள் உறுதியாக இருப்பதன் காரணமாக அரசியல் கட்சிகளும் அதில் கவனம் செலுத்துகின்றன. இந்தி திணிப்புக்கு எதிராக போராடியதில் முன்னுதாரமான வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு.
சமீபத்தில் பள்ளி கல்விக்கு நிதி ஒதுக்காமல் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் தான் நிதி ஒதுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமிர்தனமாக பேசியதன் விளைவாக தமிழ்நாடு அரசியலில் இந்தி எதிர்ப்பு மீண்டும் சூடு பிடித்துள்ளது. இருமொழிக் கொள்கைதான் என்பதில் மக்களும் தமிழகத்தை ஆளும் திமுக அரசும் உறுதியாக உள்ளது.
இந்நிலையில் இதுபற்றிய விவாதங்கள் செய்தி சேனல்களை ஆக்கிரமித்து வருகின்றன. விவாதங்களில் முற்போக்காளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் சங்கிகளும் நடுநிலை முகமூடி அணிந்திருக்கும் மறைமுக சங்கிகளும் திணறி வருகிறார்கள்.
இதே விவாதத்தை நீயா நானாவில் இருமொழிக் கொள்கை – மும்மொழிக் கொள்கை என சங்கி தரப்பு – தமிழ்நாட்டு மக்கள் தரப்பு என இரு தரப்புக்கு இடையேயான விவாதத்தை நடத்தியுள்ளது விஜய் டிவி சேனல். விவாதத்தில் சங்பரிவார் கும்பல் பதில் சொல்ல முடியாமல் திணறியதாகவும் மொத்த விவாதமும் இருமொழிக் கொள்கையே சரி என்ற அளவில் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
சங்கிகள் பொதுவாக வாட்சப் பார்வேர்டு செய்திகளையே ஆதாரமாக கொண்டு பேசுவார்கள். செய்தி விவாதங்களில் சரியான ஆதாரம் கேட்டால் தருகிறேன் என்று சொல்பவர்கள் கடைசிவரை தராமலேயே பொய்யை உண்மையாக்க முயற்சிப்பார்கள். தேவையற்ற பேச்சுகளின் மூலம் நாய் போல கத்துவதின் மூலமும் விவாதத்தை திசை திருப்பவும் செய்வார்கள். இது விவாத நிகழ்ச்சிகளில் அவர்களின் உத்தி.
ஆனால் எதிர் தரப்பில் அமர்ந்திருப்பவர்கள் சரியான ஆதாரங்களை கொண்டு பதிலளிப்பார்கள். இதன் காரணமாக பாஜகவினர் ஒரு நேரத்தில் விவாதத்தில் கலந்துக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்த ‘வீரவரலாறும்’ உண்டு. பாதியிலேயே ஓடியதும் நடந்திருக்கிறது.

இதே நிலைமை தான் நீயா நானாவிலும் நடந்திருக்கும். அதே நேரத்தில் இது பதிவு செய்யப்பட்டு குறிப்பிட்ட நாட்களில் ஒளிப்பரப்படும் நிகழ்ச்சி. நேரலை நிகழ்ச்சியாக இருந்திருந்தால் சங்கிகளின் கையாலாத்தனம் வெளிப்பட்டு நாறியிருக்கும். பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பதால், ஏற்கனவே மும்மொழிக் கொள்கையில் மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து கையெழுத்து வாங்கியது, வலுக்கட்டாயமாக கையொப்பம் இடவைத்தது, மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேச வைத்து காணொளி பரப்பியது என பல இடங்களில் அம்பலப்பட்டு நாறிப் போயுள்ள தமிழ்நாட்டு சங்கிகள் மீண்டும் அவமானப்பட தயாராயில்லை. அடுத்து இருமொழிக் கொள்கை தான் சரியென்ற கருத்து இந்த நிகழ்ச்சியை காணும் கோடிக் கணக்கான மக்களுக்கு சென்று விடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்குறது பாசிச கும்பல். அதன் காரணமாக தான் நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளது. விஜய் தொலைக்காட்சி நிர்வாகமும் அதனை ஏற்று அமைதியாகிவிட்டது.
வடமாநிலங்களில் உள்ள பெரும்பாலான சேனல்கள் கோடி மீடியாவாக பாசிச கும்பலின் பொய்யை பரப்பும் தளமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் அப்படி செய்தால் அந்த சேனல் மக்களால் புறக்கணிக்கப்பட்டு காணமல் போய்விடும் என்ற பயத்தினால் கார்ப்பரேட் ஊடகங்கள் தங்களது தொழில் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் தேவை ஏற்படும் போது மட்டும் வரம்புக்கு ஏற்ப மோடிக்கு ஆதரவான செய்திகளை ஒளிப்பரப்புகின்றன.
சில நேரங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பும் போது பாஜக தலைவர் தற்குறி அண்ணாமலையால் மிரட்டப்பட்டதும் உண்டு. பாசிஸ்டுகளின் ஆட்சியில் இப்படி நடக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
படிக்க:
♦ “ கோடி மீடியா க்களால்” சந்தி சிரிக்கும் பத்திரிக்கைகளின் நம்பகத்தன்மை!
♦ இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை பரப்பும் மீடியாக்கள்!
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி மக்களிடம் நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நடப்பதல்ல. முழுக்க முழுக்க டிஆர்பி ரேட்டிங்காகவும் வியாபார நோக்கத்துடன் நடத்தப்படும் ஒன்று. ஆகையால் சங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பாசிஸ்டுகளை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதால் நிறுத்தியிருக்கலாம்.
தமிழ்நாடு என்பதால் நீயா நானா மும்மொழிக் கொள்கை விவாதத்திற்கான தடை மிகப்பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. மேலும் மும்மொழிக் கொள்கை தொடர்பான பிரச்சினை என்பதால் தமிழக அறிவுஜீவிகளும் விடுவதாயில்லை. இந்த விவாதத்தை நிறுத்துவதன் மூலம் ஜனநாயகம் மறுக்கப்பட்டு பாசிஸ்டுகளின் சர்வாதிகாரம் அம்பலமாகியுள்ளது.
இதனை அனுமதித்தோமானால் வடமாநிலங்களை போல் தமிழ்நாட்டிலும் செய்தி சேனல்கள் உட்பட அனைத்தும் பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டு அது ஏட்டளவில் மட்டுமே உள்ளது. யூ டியூப் சேனல்களில் சங்கிகளுக்கு எதிரான காணொளிகள் தடை செய்யப்படுவதும், அதனை நடத்துபவர்கள் கொல்லப்படுவதும் சமீப காலங்களில் நடந்து வருகிறது. ஆகையால் ஜனநாயகம் மறுக்கப்படும் இடத்தில் அதற்கான போராட்டம் அவசியமானது என்பதை உணர்ந்து போராடுவோம். பாசிஸ்டுகளிடமிருந்து கருத்துரிமையை மீட்போம்.
- நலன்