
ஒரே செய்தியை நேரெதிரான இரு வேறு கோணத்தில் பத்திரிகைகள் எழுதுகின்றன. இரண்டில் எது மக்களுக்கானது – நாட்டு நலனுக்கானது என்பதை பிரித்துப் பார்ப்போம்.
சங்கிகளுக்கு‘மாமா’ வேலை பார்க்கும் நியூஸ் 18 தமிழ்நாடு!
மார்ச் 6ஆம் தேதி அன்று நியூஸ் 18 தமிழ்நாட்டின் daily hunt பக்கத்தில் ஒரு கட்டுரையை பதிவிட்டுள்ளார்கள். “தாயின் நகைகளை அடமானம் வைத்த மகன்… 45 நாட்களில் 30 கோடி சம்பாதித்து சாதனை… முதலமைச்சர் பாராட்டு” என்று தலைப்பிட்டுள்ளனர்.
ஒரு படகோட்டி கும்பமேளாவில் 30 கோடி சம்பாதித்ததாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புகழ்ந்து தள்ளி இருந்தார். அந்த பிண்டு என்ற நபரை போற்றித்தான் கட்டுரை வந்துள்ளது.
“பிண்டு கூறுகையில், 45 நாட்கள் நீடித்த மகா கும்பமேளா நிகழ்வின்போது அவரது குடும்பத்தினர் தங்கள் 130 படகுகளை இயக்கியதன் மூலம் சுமார் 30 கோடி ரூபாய் சம்பாதித்தனர். அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து கேட்டபோது, அவர்கள் அரசாங்கம் நிர்ணயித்த கட்டணங்களை மட்டுமே பின்பற்றுவதாகவும், ஒருபோதும் அதிக கட்டணம் வசூலிப்பதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.” என்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு. ஆனால் உண்மை எதற்கு நேர் மாறானதாக இருந்துள்ளது.
நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியுடன் முரண்படும் இந்து தமிழ் திசை!
இந்து தமிழ் திசையும் நேற்று யோகியால் புகழப்பட்ட பிண்டுவை பற்றி ஒரு கட்டுரையை பதிவேற்றியுள்ளது.
“மகா கும்பமேளாவில் 30 கோடி ஈட்டியவர் என முதல்வர் யோகியால் புகழப்பட்டவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள்” என தலைப்பிட்டுள்ளது. அதில் விவரித்துள்ளவை நியூஸ் 18 தமிழ்நாட்டின் கட்டுரைக்கு நேர் எதிரான ஆதாரங்களாக அமைந்துள்ளன.
“பிண்டு மீது 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் கொலை, கொலை முயற்சி, கலவரம், குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2009-ல் நைனியின் லோக்பூரில் நடந்த பரபரப்பான இரட்டைக் கொலை வழக்கிலும் பிண்டு முக்கிய அக்யூஸ்டு ஆவார். இந்த வழக்கில், பிண்ட்டுவுடன் அவரது மற்றொரு சகோதரர் அர்விந்த் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கைதாகி சிறை சென்றனர்.
மகா கும்பமேளாவில் படகோட்டிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பிண்ட்டு மெஹ்ரா உட்பட 8 பேர் மீது பிப்ரவரி 11-ல், கும்பமேளா காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவாகின.
படிக்க:
🔰 பீதியில் மோடி! முட்டுக்கொடுக்கும் மீடியாக்கள்!
🔰 இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை பரப்பும் மீடியாக்கள்!
மகா கும்பமேளாவில் படகை இயக்க விரும்பினால், அனைவரும் தலா ரூ.50,000 தினமும் செலுத்த வேண்டும் என்று மிரட்டியதாகப் பிண்ட்டு மீது புகார் அளிக்கப்பட்டது.
பணம் தர மறுப்பவர்கள், கொலை செய்யப்பட்டு, தூக்கி எறியப்படுவார்கள் என படகோட்டிகளை மிரட்டியதாக அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது” என்றும் விவரிக்கிறது இந்து தமிழ் திசை.
ஒரு கிரிமினலை யோகி புகழ காரணம் என்ன?
காவி பாசிஸ்டுகளுக்கு கிரிமினல்களின் தேவை மிக மிக அதிகம். பசுக்காவலர்களாக வெட்டிக் கொல்லவும், விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று மசூதியின் மீது கல்லெறியவும், மத வெறியை தூண்டி மதச் சிறுபான்மையின மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களை மானபங்கப்படுத்தவும், அரசின் கார்ப்பரேட் நல திட்டங்களை எதிர்க்கும் மக்களை அச்சுறுத்தவும், மக்கள் போராட்டங்களை வழிநடத்துபவர்களை படுகொலை செய்யவும் கிரிமினல்களின் தயவு தேவை.
அரசு டெண்டர்களை எடுப்பது, ரியல் எஸ்டேட், கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து, போதை கடத்தல், கனிம வளக்கொள்ளைகளில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு அதிகாரத்தில் உள்ள நபர்களின் தயவு தேவை. தனிப்பட்ட கமிஷன்களோ, நன்கொடைகளோ, தேர்தல் நிதி பத்திரங்களோ இதற்காகத்தான் வாரி வழங்கப்படுகின்றன.
நாட்டைக் கொள்ளையிடும் கார்ப்பரேட்டுகளும், ஊரை நாசமாக்கும் கேடி கிரிமினல்களும், கார்ப்பரேட்டுகளுக்கு விசுவாசமாக சேவை செய்யும் ஆர் எஸ் எஸ் – பாஜக காவி கும்பல்களும் கைகோர்த்து களமாடுகின்றன.
உண்மையின் உரைகல் எது?
பிண்டு மெஹ்ராவை பற்றி நியூஸ் 18 தமிழ்நாடு ஒரு கண்ணோட்டத்திலும் இந்து தமிழ் திசை அதற்கு நேர் எதிரான கண்ணோட்டத்திலும் செய்திகளை முன் வைத்துள்ளது. ஒப்பீட்டளவில் நியூஸ் 18 தமிழ்நாடு வகைப்பட்ட கோடி மீடியாக்களின் எண்ணிக்கையும் தாக்கமும் சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாகவே உள்ளது.
சமூக வலைத்தளங்களில் செய்திகள் குப்பைகளை போல் கொட்டப்படுகின்றன. அதில் உண்மைகளும் உண்டு; பொய்களும் உண்டு;பாதி உண்மை பாதி பொய் கலந்த கலப்படங்களும் உண்டு.
விமர்சனங்களாக முன்வைக்கப்படும் செய்திகளில் உண்மை தரவுகளின் அடிப்படையில் வரும் விமர்சனங்களும் உண்டு அவதூறுகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு முன்வைக்கப்படுவதும் உண்டு.
ஒரு வாசகன் தான் பார்க்கும், கேட்கும் படிக்கும் விஷயங்களில் இருந்து உண்மையை கண்டறிய மெனக்கெட்டாக வேண்டும். ஏனெனில் உண்மையை சொல்லும் ஊடக அறம் அற்றதாக கோடி மீடியாக்களாக பலவும் வலம் வருகின்றன. இவற்றையெல்லாம் ஒப்பிட்டு உரைகல்லில் உரசிப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவது தான் சரி.
கோடி மீடியாக்களை புறக்கணிப்போம்! மக்கள் நலனில் அக்கறை கொண்டு உண்மையை எழுதும் மீடியாக்களையும், பத்திரிகைகளையும் ஆதரிப்போம் .
- இளமாறன்
நியூஸ் 18 தமிழ்நாடு பத்திரிக்கை கொடுக்கும் குப்பைகளை நாம் கவனமாக அலச வேண்டியுள்ளது பொய் செய்திகளை நிராகரித்து உண்மையான செய்திகளை படிக்க வேண்டும் என இந்தக் கட்டுரை உணர்த்துகிறது