நாட்டின் முதல் தனியார் ரயில் போக்குவரத்து அமலானதை எதிர்த்து தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணமிக்க போராட்டம்!

பாசிச மோடிஅரசின் கார்ப்பரேட்-காவி கொள்கையில் ஒன்றான பொதுத்துறைகளை விற்று “பணமாக்கல்” திட்டத்திற்கேற்ப உலகின் முதல்பெரும் ரயில்வேவான 17 மண்டலங்களை கொண்டுள்ள இந்திய ரயில்வேயை தனியாருக்கு விற்க முயன்றபோதெல்லாம், நாடெங்கும் கடுமையான எதிர்ப்பு எழுந்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஆர்எஸ்எஸ் பாஜக, ஒன்றிய அரசின் மானங்கெட்ட “பாரத் கௌரவ்” எனும் திட்டத்தின் வழியே தந்திரமாக தெற்கு ரயில்வே மூலம் “சவுத் ஸ்டார் ரயில்” என அறிவித்து, போட்டியிட்ட ஏழு நிறுவனங்களில் கோவையை சேர்ந்த இதற்காக ஒரு கோடி ரூபாயை வைப்புத்தொகையாக செலுத்தியுள்ள (எம் & சி பிராப்பர்டி டெவலப்பர்ஸ்) எனும் தனியார் நிறுவனத்தின் மூலம் “சாய் எக்ஸ்பிரஸ்” என பெயர்சூட்டி கடந்த ஏப்ரல் மாதமே பயணிக்கவிருந்த ரயில் இன்று (14.06.2022) செவ்வாய் கிழமை மாலை இதுவரையில் பயணிகளுக்காக எந்த சிறப்பு ரயிலும் நிற்காது என்றிருந்த இடவசதி கொண்ட வடகோவை (மத்திய உணவு தானிய கிடங்கு அமைந்துள்ள) ரயில்சந்திப்பிலிருந்து திருப்பூர்- ஈரோடை கடந்து, கர்நாடகாவின் பெங்களூர்- ஆந்திராவின் மந்த்ராலயம் வழியாக மராட்டியமாநிலத்தின் “சீரடி” யில் உருவாக்கப்பட்டுள்ள “சாய் சந்திப்பை” இரண்டு நாட்களில் (1458 கி. மீ) அடைகிறது.

நேற்று கோவையில் இருந்து புறப்பட்ட தனியார் ரயில்

இதற்கான டிக்கெட்டை மேற்கண்ட தனியார் நிறுவனமே தனக்கான நான்கு வணிக மையங்களில் விற்கிறது. ஏற்கெனவே தெற்குரயில்வேயில் (சென்னையிலிருந்து- புதன்தோறும்) இதற்கான கட்டணம் குறைந்தபட்சம் ரூ.600. லிருந்து அதிகபட்சமாக ரூ.1200. வரைதான் இருந்தது. ரயிலை குத்தகை எடுத்துள்ள M&C நிறுவனமோ குறைந்தபட்சமே கொள்ளை கட்டணமாக ரூ.2500.லிருந்து அதிகபட்சமாக ரூ12,999. வசூலிக்கிறது. இடையில் மந்த்ராலயம் என்ற இடத்தில் நெடுநேரம் நிறுத்தி அங்கேயும் தனியாக ஒரு தொகையை வழிப்பறி செய்கிறது.

ரயில்நிலைய சந்திப்பு, நடைமேடை, ரயில்பாதை என எல்லாமும் நூற்றாண்டின் உழைப்பில் மக்களால் உருவான பொதுத்துறை சொத்து. இதை பக்திபயணம் என்கிற போர்வையில் டாடா மற்றும் ஹூன்டாய் போன்ற கார்ப்பரேட் தரகர்களுக்கு மோடி அரசின் காவி பாசிஸ்டுகள் தானம் செய்வதை ஏற்கமுடியாது. இது வசதிபடைத்த மற்றும் பக்தர்களுக்கான சிறப்பு ரயிலுக்கு மட்டுமே என சின்னபுத்திக்குள் சுருக்கிவிடக்கூடாது.

மாறாக இந்த தனியார்மய சதியானது இந்திய தீபகற்பத்தை சுற்றிவளைக்கும் மிகநீண்ட கோர தனியார் ரயில் போக்குவரத்து அபாயம் ஆகும்.

படிக்க

ஏனெனில் இந்த கோவை-சீரடி ரயிலை தொடர்ந்து சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி என தமிழக பெருநகரங்களிலும் இந்தியாவெங்கும் நடைமுறைக்கு வருகிறது. எதிர்ப்பை மட்டுபடுத்தவே சீரடிக்கான பக்திமார்க்க ரயில். நாளடைவில் பயணிகள் ரயில் உட்பட ஒட்டுமொத்த ரயிலுமே பறிபோக உள்ளது.

அப்படி நேரும்போது பிழைப்புதேடி நாடெங்கிலும் இடம்பெயரும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் பயணக்கட்டணம் அவர்களை முடக்கி பட்டினிசாவுக்கு தள்ளும். சிறு-குறு தொழில்கள் அழியும்.

நாட்டின் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள், திருநங்கைகள், போலீஸ் மற்றும் ராணுவத்தினருக்கான சலுகைகள் அனைத்தும் பறிபோகும். ரயில்வேதுறையிலும் ரயில்பெட்டி தயாரிப்பிலும் பணிபுரியும் கோடிக்கணக்கானோர் நடுத்தெருவில் தள்ளப்படுவர்.

டீ – காபி, சுண்டல் மற்றும் சிற்றுண்டி விற்று பிழைப்போர் வாழ்வு சிதையும். வேறுவழியே இல்லாமல் துப்புரவு பணிசெய்வோரும் தப்பமுடியாது. லாபவெறியே நோக்கமான போட்டாபோட்டி கோர ரயில்விபத்தை நடத்தி எண்ணற்ற உயிர்களை காவுகேட்கும்.

எனவே நாசகார ரயில் தனியார்மயத்தை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைந்து உறுதியாக போராடவேண்டும்.

உடனே தென்னக ரயில்வே சாய் எக்ஸ்பிரஸை திரும்ப பெற்று தானே(SR) சீரடிக்கு இயக்கவேண்டும்.

இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் வரலாற்று சிறப்பு வாய்ந்த மதுரை-கீழடிக்கு முழுதும் சொசகுசான மக்கள் ரயிலை எல்லா நாட்களிலும் இயக்கவேண்டும்.

மேற்கண்ட நோக்கில் இன்று (14.06.2022) காலை 11 மணியளவில் கோவையில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்வமுடன் பங்கேற்று உரையாற்றினர்.

மக்கள் அதிகாரம்.
கோவை மண்டலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here