தென்னங்க கேள்வி? இந்தியாவின் பெரும்பான்மையான மக்களை சூத்திரன் என்று ஒதுக்கி எந்தவிதமான உரிமைகளும் இல்லாத அடிமைகளாக மாற்றும் மனுநீதியை அமல்படுத்த வெறிகொண்டு அலையும் பார்ப்பனர்களும், தாங்கள் ஒடுக்குவதற்காக கீழ்சாதிகளைப் படைத்து சாதிய படிநிலையை அமைத்துக்கொடுத்த மனுதர்மத்தை ஆதரிக்கும் சாதிவெறியர்களும், வராக்கடன் தள்ளுபடி, வரித்தள்ளுபடி, பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்பனை, நாட்டின் வளங்களை வரைமுறை இல்லாமல் சூறையாட அனுமதி, தேர்தல் பத்திரங்கள் மூலம் கமிஷன் வாங்கிக்கொண்டு அரசின் அனைத்து ஒப்பந்தங்களையும் தாரைவார்த்து, அம்பானி அதானிகளை கூட்டிக்கொண்டு நாடுநாடாகச் சுற்றி ஒரு புரோக்கராக அந்நாடுகளின் ஒப்பந்தங்களை பெற்றுத்தந்தது என்று இந்த பத்தாண்டுகளில் கொழுத்துத் திரிந்த கார்ப்போரேட்களும், இதெயெல்லாம் புரிந்துகொள்ள முடியாத மாட்டுச்சாணி சங்கிகளும், ரெய்டுகளுக்குப் பயந்த கூட்டணி கட்சியினரும், பெட்டி வாங்கிக்கொண்ட துரோகிகளும்தான் “வேண்டும் மோடி! மீண்டும் மோடி!” என்பார்கள். இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே என்கிறீர்களா?

சரிதான். ஆனால் இவர்கள் எல்லாம் பாசிஸ்டுகளின் வெளிப்படையான ஆதரவாளர்கள். ஆனால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மறைமுகக் கூட்டாளிகள் யார்னு தெரியுமா?

யாரு? பாஜக எதிர்ப்பு ஓட்டுகள் திமுகவுக்கு போய்டக்கூடாதுன்னு பாஜகவின் ஆணைக்கிணங்க தனிக்கூட்டணி அமைத்துள்ள அதிமுக தானே? கரெக்ட்! ஆனா இன்னும் யோசிச்சுப் பாருங்க!

ஒன்றியத்துக்கு நடக்கும் தேர்தலை சட்டமன்றத் தேர்தலாக மடைமாற்றி நரம்புப் புடைக்க திமுகவைத் தாக்கி ஊரிலுள்ள தம்பி, தங்கைகளை தேர்தல் களத்தில் பலியிடப்போகும் சீமான் தானே!

சரிதான்! இன்னும் முயற்சி பண்ணுங்க!

CAA சட்டத்துக்கு ஆதரவாக ஓட்டுப்போட்ட எடப்பாடியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அச்சட்டத்துக்கு எதிராகப் போராடிய கம்யூனிஸ்டுகளை விமர்சித்து வாங்கிய காசுக்குமேலே கூவும் SDPI கூமுட்டைகளா?

அதுவும் சரிதான்! ஆனா இன்னும் ஒரு கும்பல் இருக்குங்க!

இன்னுமொரு கும்பலா? ஆங்! இந்த தமிழ்தேசியம் பேசிட்டு தமிழ் இந்துன்னு பேசித்திரியிற தமிழ்தேசிய குடிபெருமைக்கோமாளிகளா?

எல்லாமே சரிதான். ஆனா இன்னுமே ஒரு கும்பல் இருக்கு, உங்களுக்கு வேணா “சில க்ளூ” கொடுக்கிறேன் கண்டுபிடிக்க முடியுதான்னு பாருங்க. அவங்க சாதாரணமா இடதுசாரிகள் மாதிரி தெரிவாங்க, இடதுசாரிகள்னு சொல்லிக்குவாங்க, ஆனா மோடி மறுபடியும் ஆட்சிக்கு வரணுமா வேண்டாமான்னு கேட்டா பதில் சொல்லமாட்டாங்க, சரி இந்த தேர்தலில் மக்கள் என்ன பண்ணனும், யாருக்கு ஓட்டுப்போடணும்னு கேட்டா அதுக்கும் பதில் சொல்லாம அது அவங்கவங்க இஷ்டம்னு சொல்லுவாங்க. “பாசிச பாஜக-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படின்னு” புக்கு போட்டுட்டு ஏதோ ஒரு உலகமகா சூத்திரத்தைக் கண்டுபிடிச்சுட்டமாதிரி பில்டப் கொடுத்து பாசிச பாஜகவை எதிர்த்து களத்தில் வேலைசெய்யும் அமைப்புகள், கட்சிகளுக்கு பாடம் எடுப்பாங்க…

இப்படியும் ஒரு கும்பல் இருக்குங்குளா?

ஆமாங்க இவங்ககூட சேர்ந்து அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் SDPI கட்சிக்கு மட்டும் ஆதரவு, INDIA கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்டுகள், விசிக-வுக்கு மட்டும் ஆதரவு, இன்னும் ரெண்டு, மூணு சுயேச்சைகளுக்கு ஆதரவு என்று இதுவரை உலகமே பார்த்திராத தேர்தல் நிலைப்பாட்டை எடுத்து குறுக்குசால் ஒட்டிக்கொண்டிருக்கும் மே17 இயக்கம், ஆர்எஸ்எஸ், பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக என்று எல்லாக்கட்சிகளையும் ஒரே கோட்டில் வைத்துப் பார்க்கிற இன்னபிற புரட்சிகர இயக்கங்களும் இருக்காங்க. சரி இவங்க என்னதான் சொல்லவர்றாங்கன்னு கேக்குறீங்களா? அதாவது மோடி மீண்டும் ஆட்சிக்கு வரணும், வந்து இன்னும் மிச்சமிருக்கும் ஆர்எஸ்எஸ்-சின் திட்டங்களை அமல்படுத்தனும் அதன்மூலம் நாட்டில் ரத்த ஆறு ஓடணும், அப்போதான் மக்கள் கிளர்ந்தெழுவாங்க, அந்த “கேப்பில்” நாம் வந்து புரட்சியை சாதிச்சுடலாம்னு சொல்றாங்க.

இதையும் படியுங்கள்:

ஏங்க மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தா சாதாரண மக்களுக்கே ஆபத்துன்னா புரட்சி பேசும் இவங்களை மட்டும் சுதந்திரமாக இருக்க விட்டுருவாங்களா? என்னங்க இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு?

ஆமாங்க. அப்படிதான் அவங்க நினைச்சுட்டு அவங்களை நம்பிட்டு இருக்குறவங்களையும் மண்டையைக்கழுவி வெச்சிருக்காங்க.

சரிங்க. அப்போ மோடி மறுபடியும் வந்தா புரட்சியை சாதிச்சுரலாம்னு வெளிப்படையா சொல்லிறவேண்டியதுதானே?

அதெப்படி சொல்லுவாங்க?, சொன்னா செருப்படிதான் கிடைக்கும். அதுனால எப்படி சொல்லுவாங்கன்னா, நீங்க பாஜக-வையும், மோடியையும் மட்டுமே விமர்சிக்காதீங்க, காங்கிரஸும், திமுக மட்டும் யோக்கியமா? இதுநாள் வரைக்கும் தேர்தல் புறக்கணிப்புதான் எங்களோட கொள்கையா இருந்துச்சு, அதுதான் உண்மையான புரட்சியாளர்களின் அடையாளம், இப்போ அப்படியென்ன பெரிய மாற்றம் வந்திட்டுது, இப்பவும் தேர்தல் புறக்கணிப்புதான் சரின்னு என்னவோ இவங்கபோய் பிரச்சாரம் பண்ணிதான் தேர்தல் புறக்கணிப்பை ஒரு சில கிராம மக்கள் செய்வதைப்போல உருட்டுறாங்க.

இதென்னங்க யாரோ பெத்த புள்ளைக்கு தன்னோட இனிஷியல் வெக்குறமாதிரியில்ல இருக்கு?

ஆமாங்க. இப்படித்தான் செய்யுறாங்க, வசூல்ன்னு வந்துட்டா நாங்கதான் அவங்கன்னு கொஞ்சம்கூட கூச்சப்படாம மக்கள்கிட்டே வேசம் போடுறாங்க. பாசிச பாஜகவை அதிகாரத்திலிருந்து விரட்டி நாட்டை மீட்பதற்கு பரந்துபட்ட மக்களுக்குத் தெரிந்த ஒரு வழியாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் மாறிவிட்டதை ஜீரணிக்க முடியாத இக்கும்பல் தேர்தல் புறக்கணிப்பு பேசி தனித்துவிடப்பட்டதால் தங்களது இருப்பைக் காட்டிக்கொள்ள குறுக்கும் நெடுக்குமாக ஓடித்திரிகிறது. அதுனாலதான் “பாசிச பாஜக-வை தேர்தலில் வீழ்த்துவது எப்படின்னு” தலைப்பை மட்டும் போட்டுட்டு உள்ளே அவன் சரியில்லை, இவன் சரியில்லை என்று பழைய பல்லவியைப்பாடி, தேர்தலில் பாஜகவை வீழ்த்தமுடியாது, மக்கள் போராட்டங்களே வீழ்த்தும், எதிர்க்கட்சிகள் கவர்ச்சிகர வாக்குறுதிகள் கொடுக்கக்கூடாது, உலக வர்த்தகக் கழகத்திலிருந்து இந்தியா வெளியேவரவேண்டும், அரசியலமைப்பை மாற்றவேண்டும், எல்லாத்துக்கும் தீர்வு “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்று உருட்டோ உருட்டென்று உருட்டி வைச்சுருக்காங்க. புத்தகத்தின் தலைப்பை மட்டும் பார்த்து வாங்கும் கட்சிக்காரர்கள் படிப்பார்களோ இல்லையோ, இக்கும்பலுக்கு இப்போ இதுதான் தேர்தல் நேரத்து வியாபாரம்!

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here