கர்னாடக இசைமேடை டி.எம்.கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருது வழங்கியுள்ளது. இதனை அவாள் கூட்டம் ‘கடுமையாக’ எதிர்த்துள்ளது.
கர்னாடக இசை பார்ப்பனர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற திமிரிலும், இது ஒசத்தியான இசை வேறு சமூகம் அண்டக் கூடாது என்பதிலும் தெளிவாக உள்ளார்கள் பார்ப்பன சிந்தனையாளார்கள்.
டி.எம்.கிருஷ்ணாவும் அதே சமூகத்தை சார்ந்தவர் தானே பிறகு என்ன பிரச்சினை என்றால் அவர் பிறப்பால் பிராமண வகுப்பை சார்ந்தவர் என்றாலும் பார்ப்பனிய கருத்தியலை ஏற்காமல் விலகி நிற்கிறார்.
அதோடு மட்டுமல்ல அதற்கு எதிராகவும் தன்னுடைய துறையின் மூலம் போர் புரிகிறார். பெரியார் குறித்து ‘சிந்திக்க சொன்னார் பெரியார்’ என்று பாடலும் எழுதியுள்ளார். இது அவாளின் மனதை புண்படுத்திவிட்டது.
இதையும் படியுங்கள்:
மேலும் அனைத்து சமூகத்தினரும் இந்த இசையை கற்க வேண்டும் என்று போராடுகிறார். உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். இளையராஜாவை மட்டும் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று? இளையராஜா வேறு சமூகத்தினராக இருந்தாலும் அவருடைய கண்ணோட்டம் பார்ப்பனியமே!
ஒருவருக்கு விருது அளிக்கப்படுவது அவரது திறமை மதிப்பீட்டை வைத்து தான். ஆனால் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது கொடுக்கக் கூடாது என்று பார்ப்பனிய கூட்டம் முன் வைக்கும் கருத்து தான் அபாயமானது. டி.எம்.கிருஷ்ணா பெரியார் குறித்து பாடுகிறாராம். எவ்வளவு வன்மத்தோடு இவ்வளவு காலம் டி.எம்.கிருஷ்ணாவை பார்த்திருப்பார்கள் என்று இதிலிருந்து புரிந்துக் கொள்ளலாம்.
இது குறித்து மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் அவர்களின் காணொளியில் இது குறித்து தெளிவாக பேசியுள்ளார் பாருங்கள்… பகிருங்கள்..