ரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி தமது கட்சியின் தலைமையில் 400 இடங்களுக்கு மேல் உறுதியாக கைப்பற்றப் போவதாக ஊரூராக போய் கூவுகிறார். ஆனால், அவர் தோல்வி பயத்தில் இருப்பதையே அவரின் பாசிச நடவடிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது பாசிச பாஜக. இந்த கைது, எதிர்க்கட்சிகளை தேர்தலில் செயல்படவிடாமல் முடக்கும் பாசிச பாஜக –வின் சதிதான் என எதிர்ப்புகளும் கண்டனங்களும் வெளிவந்த வண்ணமுள்ளது.

இதற்கு யார் எப்படி முட்டுதந்தனர் என்பதற்கு ஒரு சோற்றை பதம் பார்ப்போம். முதலில், கெஜ்ரிவால் கைதானவுடன் தினமணி தனது (23.02.24) தலையங்கத்தில் இதை கண்டித்து எழுதியது. என்னடா கரடியே காறித்துப்புகிறதே என அசந்து நிற்கையில், அதே தினமணி இன்று (25.03.24) நடுப்பக்க கட்டுரையில் மோடியை நியாயப்படுத்திவிட்டுள்ளது.

”உப்பை தின்றால் தண்ணீர் குடித்தாக வேண்டும்!” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரையை  ‘ஊடகவியலாளர்’ எழுதியுள்ளார். எதிர்கட்சியினர் குற்றமே செய்யாத உத்தமர்களா? காங்கிரசார் ஆண்டபோது எதிர்கட்சியான பாஜகவினரிடம் எப்படி நடந்துகொண்டனர்? மோடியை எப்படி நடத்தினார்கள் தெரியுமா? அமித்ஷாவை குஜராத்துக்குள் நுழையக்கூடாது என்று தடுக்கவில்லையா? என்றெல்லாம் அதில் அறச்சீற்றம் கொள்கிறார் கோதை ஜோதிலட்சுமி.

அவரே சொல்வதுபோல ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானாவை சேர்ந்த பாரதீய ராஷ்டிர சமிதியின் கவிதா போன்றோர் உப்பை தின்றதாகவே இருக்கட்டும். எதிர்கட்சியின் வரிசையிலிருந்து அணிவிலகி பாஜகவிலோ அல்லது அதன் கூட்டணியிலோ அங்கமானவர்கள் மட்டும் ’உப்பை தின்றதாக’ பாஜக அரசால் – அதன் துறைகளால் குற்றம்சாட்டப்பட்டும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது ஏன்?

அதாவது பத்திரிக்கையில் காலம்(column) அளவில் பாஜகவின் மீது மென்மையான கண்டனத்தையும், அதற்கு நேர்மாறாக நடுப்பக்க கட்டுரையில் மோடியின் அரசுக்கு விரிவான புகழ்மாலையையும் சூட்டும் அக்கிரகாரத்து ஜால்ராக்களின் ஊடக அறத்தை நினைத்தால் மெய்சிலிர்க்கிறது

உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு பின்னர் தேர்தல் பத்திர ஊழல் விவரங்கள் வெளிவந்து பாஜகவின் வேசத்தை முழுவதுமாக கரைத்துவிட்டுள்ளது. தான் அம்பலப்படுகிறோம், பொய்களையே உடையாக உடுத்தியுள்ள  தான் அம்மணமாக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து வெறிகொண்டு பாய்கிறார்கள் பாசிஸ்ட்டுகள்.

தற்போது டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவைக்கான தேர்தலில் மண்ணைக்கவ்வி உள்ளது சங்கிகளின் ABVP. வெற்றிக் கொண்டாட்டத்தில் இடதுசாரிகளும், அம்பேத்கரியவாதிகளும் மூழ்கி உள்ளனர். வானரப்படையோ பின்புறத்தில் மிளகாயை அரைத்து அப்பியதுபோல அலறிக்கொண்டிருக்கும்.  எனவே அங்கு இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக சங்கத்தினர் மீது ஒரு கலவரத்தையோ அல்லது முகமூடி அணிந்து, மின்சாரத்தை துண்டித்து நடத்தப்படும் ’வீர’த்தாக்குதலையோ நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

மாநிலத்திலும், ஒன்றியத்திலும் ஆட்சியில் இருக்கும்போதே கலவரங்களை நடத்த தயங்காதவர்கள், நாளை  ஆட்சி அதிகாரத்தை இழந்தால் எந்த எல்லைக்கு போவார்கள்? JNU வில் உள்ள இளம் வானரங்களின் வழியில் அழிவு சக்தியாகத்தான் பயணிப்பார்கள்.

தற்போது மோடி தோல்வி பயத்தில் இருப்பதால்தான் சட்டப்படியான பாசிச அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன. அந்த பயத்திற்கு எடுத்துக்காட்டு டெல்லியிலும் குஜராத்திலும் பாஜகவால் அறிவிக்கப்பட்டவர்கள் பின்வாங்குவதும் நிற்கிறது.  அதை மூடிமறைக்கவே கோடி மீடியாக்கள் சுற்றிச்சுழல்கின்றனர். தேர்தல் வாக்குப்பதிவு நெருங்க, நெருங்க இன்னும் அதிகமாகவே அம்பலமாவார் மோடி. உலக வரலாற்றில் பொய்களின்மீது நின்று வெற்றிக்கொடியசைத்த பாசிஸ்ட்டுகளின் முடிவு எப்படிப்பட்டதாக இருந்துள்ளது என்பதை மோடிக்கும் உணர்த்துவோம். சட்டபூர்வ – சட்டவிரோத பாசிச தாக்குதல்களை தகர்ப்போம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here