பாசிச மோடியின் ஆட்சியைப் பற்றியும் மக்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை பாசிச மோடி நிறைவேற்றும் லட்சணங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ள மோடியின் வாரணாசி தொகுதியில் மோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களின் தற்போதைய நிலையைப் பற்றி பார்த்தாலே போதுமானது.

SAGY திட்டத்தின் கீழ் தத்தெடுக்கப்படும் கிராமங்களில் ஸ்மார்ட் பள்ளிகள், வீடற்ற கிராம மக்களுக்கு “பக்கா” வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் மேலும் அடிப்படை சுகாதார வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அந்த கிராமங்கள் மாதிரி கிராமங்களாக வளர்ச்சி பெற செய்யப்படும் என்றும் 2014 இல் பிரதம் மோடி தனது முதல் சுதந்திர தின உரையில் வாக்குறுதிகளை அள்ளி வீசி இருந்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், பாசிச மோடி “சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா “(SAGY) என்ற திட்டத்தின் கீழ் வாரணாசி தொகுதியில் எட்டு கிராமங்களை தத்தெடுத்திருந்தார்.

மண், சுடப்படாத செங்கல்கள், மூங்கில் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றால் கட்டப்பட்ட குட்சா வீட்டில் வசித்து வந்த கிராம மக்கள், தங்களுக்கு நல்ல வீடு கிடைக்கும், குழாய் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்கும், மோடியால் கழிவறைகள் கட்டித் தரப்படும் என்று நம்பிக் கொண்டிருந்தனர். மோடியின் சுய ரூபத்தை அறியாதவர்களன இந்த அப்பாவி மக்களை தொடர்ந்து ஏமாற்றி ஓட்டுப் பொறுக்கும் விதமாக,

2014 இல் SAGY அறிவித்த பிறகு, பாரதிய ஜனதா கட்சி தனது 2019 தேர்தல் அறிக்கையில், 2022 க்குள் குட்சா வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் பக்கா வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், 2024 க்குள் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தது. மேலும் அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் பாரத்நெட் மூலம் டிஜிட்டல் இணைப்பு கொடுக்கப்படும் என்றும், பரந்த அளவில் சாலை இணைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் மற்றும் 100% திரவ கழிவுநீர் அதாவது சாக்கடை தண்ணீர் அகற்றப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது.

இந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஓட்டு போட்டனர். பாஜகவி-னரோ அவர்களின் வாக்குறுதிகளை குப்பையில் போட்டுவிட்டனர். வாரணாசியில் மோடியால் தத்தெடுக்கப்பட்ட பெரும்பாலான கிராமங்களில் இந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

மோடி தத்தெடுத்த முதல் கிராமமான ஜெயப்பூரில், பல தலித்துகளுக்கு வீடுகள் இல்லை; செயல்படும் நிலையில் கழிப்பறைகள் இல்லை. நாகேபூர் என்ற கிராமத்திலும் இதே நிலைதான் உள்ளது – மேலும், சாலைகளும் மோசமான நிலையில் உள்ளன. பரம்பூர் என்ற கிராமம் முழுவதும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஆனால் அந்த குழாய்களில் தண்ணீர் வருவது இல்லை. ஜோகபூர் என்ற கிராமத்தில் உள்ள பல தலித்துகளுக்கு குழாய்கள் இல்லை. கைப்பம்புகளில் உள்ள நீர் மிகவும் மாசுபட்டுள்ளது என்பதை வெறும் கண்களால் கூட பார்க்க முடியும். புரேகான் என்ற கிராமத்தில் ஏராளமான தலித்துகள் மற்றும் யாதவர்கள் மண் வீடுகளில் வசிக்கின்றனர்.

குச்சா வீடுகள், மண் வீடுகள் என்று சொல்லும் பொழுது தமிழ்நாட்டில் உள்ள குடிசை வீடுகளையோ மண் வீடுகளையோ நீங்கள் நினைவில் கொள்ளக்கூடாது. வாரணாசி தொகுதியில் உள்ள ஏழைகள் குடியிருக்கும் குட்சா வீடுகளை விட தமிழ்நாட்டில் மாட்டுக் கொட்டகைகள், ஆட்டுக் கொட்டகைகள் கூட நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

குடிசை என்றோ, மண் வீடு என்றோ சொல்லத் தகுதியற்ற வீடுகளில் தான் அங்கு ஏழை மக்கள் வசித்து வருகின்றனர். இது பற்றிய புகைப்படத்தை பாருங்கள் அப்பொழுதுதான் அந்த வீடுகள் என்பது எப்படிப்பட்டவை என்ற எதார்த்த நிலை உங்களுக்குப் புரியும்.

"தனது வாரணாசி தொகுதியில் மோடி கொண்டு வந்த வளர்ச்சி"
மகேஷ் சவுகன் என்பவரின் குச்சா வீடு தோம்ரி கிராமம் வாரணாசி

இப்படிப்பட்ட நிலையில் உள்ள மோடியின் வாரணாசி தொகுதியில்
கிராமப்புற சாலைகளை நகர்ப்புறங்களுடன் இணைக்கும் திட்டத்தை எந்த லட்சணத்தில் இவர்கள் நடைமுறைப்படுத்தி இருப்பார்கள் என்பதை இப்பொழுது நீங்களே யூகித்திருக்க முடியும்.

பாசிச மோடி தனது சொந்தப் தொகுதியான வாரணாசியில் தன்னால் தத்தெடுக்கப்பட்ட எட்டு கிராமங்களுக்கு கூட வாக்குறுதி அளித்தபடி நவத்திட்டங்களை செய்து முடிக்காத நிலையில் நாட்டுக்கு என்ன செய்திருப்பார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதையும் படியுங்கள்: 

ஆனால் மோடியின் பக்தர்களிடம் கேட்டுப் பாருங்கள் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அடித்துப் பேசுவார்கள். அதற்கு உதாரணமாக ஜிஎஸ்டி வசூல் உயர்ந்து கொண்டே போகிறது அல்லவா, இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது அல்லவா, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மோடி நீக்கிவிட்டார் அல்லவா, ராமர் கோவிலை கட்டி விட்டார் அல்லவா, இதிலிருந்து நாடு முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியவில்லையா என்று எதிர் கேள்வி கேட்பார்கள்.

இவர்கள் மோடி சுடும் வடைகளை உண்மை என்று நம்பி தின்னும் முட்டாள்களா? அல்லது நம்மை முட்டாள்கள் ஆக்கப் பார்க்கிறார்களா? என்பதை நீங்கள் கண்டறிய வேண்டுமாயின் மிகுந்த சிரமப்பட வேண்டி இருக்கும்.

இவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்காவிட்டால் நாடு நாசமாகிவிடும். இதை உணர்ந்து மக்கள் அனைவரும் இவர்களின் பொய் பிரச்சாரத்திற்கு எதிராகவும் பாசிச பாஜக-வை வீழ்த்துவதற்காகவும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தாக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

குமரன்

செய்தி ஆதாரம்: Thewire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here