மோடியின் பொய்களைப் அம்பலப்படுத்தி உண்மையை பரப்பி வருபவர்களை தேச துரோகிகள் என்றும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும் முத்திரை குத்துவது பாஜகவினரின் வழக்கம்.

  • சுவிட்சர்லாந்து வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வந்து இந்திய மக்கள் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவேன்.
  • ​ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை கொடுப்பேன்.
  • வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுப்பேன்.
  • ​இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், தண்ணீர், கழிப்பறை வசதி செய்து கொடுப்பேன்.
  • ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்கியே தீருவேன்.
  • ஊழலை ஒழித்தே தீருவேன்.

இதையும் படியுங்கள்: ஓயாத மோடியின் வாய்சவடால்! சாதித்தது என்ன?


என்பன போன்ற மோடியின் வாய்ச்சவாடல்கள், பொய்கள் நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானவை.

இப்படிப்பட்ட மோடியின் கூற்றுக்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை அப்படியே ஏற்றுக் கொள்ளத் தக்கவை என்று சங்கிகள் கூவிக்கொண்டே இருக்கிறார்கள்.

அப்படி கூவிக் கொண்டிருக்கும் சங்கிகளின் தொண்டைக் குழியில் ஒரு ஆப்பை இறக்கி இருக்கிறார் ஒன்றிய அரசின், அதாவது, மோடி அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD) இணைந்து எழுதிய “இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024: இளைஞர் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் திறன்கள்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய திரு. நாகேஸ்வரன், வேலைவாய்ப்பு துறையில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்? என்றார். மேலும் அவர் “எதார்த்த உலகில் வணிகத்துறை தான் வேலைவாய்ப்பை வழங்க முடியும்” என்றார்.

அதாவது , வேலை வாய்ப்பை உருவாக்குவது என்றால் அது தொழில் துறை மற்றும் வியாபாரத் துறை மூலமாகத்தான் உருவாக்க முடியுமே தவிர அரசால் உருவாக்க முடியவே முடியாது என்றார்.

இப்படி பேசும்பொழுது துக்ளக் சோ.ராமசாமி எழுதி இயக்கிய 1970களின் நையாண்டித் திரைப்படமான “முகமது பின் துக்ளக்”-கை மேற்கோள் காட்டி, அந்தப் படத்தின் கதாநாயகன், கற்பனையான நாட்டின் பிரதமராகி, ஊழல், வேலையின்மை போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முற்படும் பொழுது அந்த கதாநாயகன் சொல்வதில் “உண்மையின் ஒரு கூறு” இருப்பதாகக் கூறினார்.

அத்துடன் நில்லாமல் “வேலையின்மை பற்றி அந்த கதாநாயகன் சாதாரணமாக சொல்கிறான்: ‘வேலையின்மை பிரச்சனையை தீர்ப்பதற்காக நான் செய்யக்கூடியதெல்லாம் ஒன்றுதான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மேடையிலும் இதைப்பற்றி பேசிக் கொண்டே இருப்பது தான் அது. ஏனென்றால் இது நான் பேசக் கூடிய விஷயம் அல்ல’ “. என்று இந்தக் கதாநாயகன் பேசிய வசனத்தையும் ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பேசினார்.

இதைக் கேட்கும் பொழுது இவர் நரேந்திர தாமோதரன் தாஸ் மோடியை நக்கல் செய்வதாகவே நமக்குத் தோன்றுகிறது. மோடியும் ஒவ்வொரு மேடையிலும் வேலை வாய்ப்பு உருவாக்குவேன் வேலையின்மையை போக்குவேன் என்று பேசிக்கொண்டே இருந்தார் என்பதும் இப்பொழுது தான் அப்படி பேசுவதை நிறுத்திவிட்டார் என்பது நமக்கு நினைவுக்கு வருகிறதா இல்லையா.

இதையும் படியுங்கள்:

நாட்டை முன்னேற்றுவதற்காக நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்பதற்காக தான் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள் கொடுப்பதாக அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக மோடியின் ஆதரவாளர்கள் அதாவது சங்கிகள் கூவிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் வேலைவாய்ப்பும் உருவாகவில்லை. அரசால் வேலைவாய்ப்பை உருவாக்கவும் முடியவில்லை.

நாட்டு மக்களின் நலனில் உண்மையான அக்கறை இருக்கும் அரசால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். நாட்டு மக்களின் வாழ்க்கையை வளப்படுத்த முடியும் என்பது தான் உண்மை.

அப்படி தாங்கள் செய்யப் போவதில்லை என்று தெரிந்தே நாட்டு மக்களை மோடி ஏமாற்றிக் கொண்டு இருந்திருக்கிறார் என்பதை பாஜகவின் ஆதரவாளர்கள் தற்பொழுதாவது உணர்ந்து பாஜக விற்கு சொம்படிப்பதை நிறுத்த வேண்டும்.

  • குமரன்
    செய்தி ஆதாரம்: The Hindu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here