நந்தன் ஸ்ரீதரன் :

அல்லோவ்..

என்னா..?

ஒரு வேலன்டைன்ஸ் டே கார்டு குடு..

அதுக்கு எதுக்குய்யா மொய் வச்ச மாதிரி பதினோரு பேரு வந்திருக்கீங்க..?

எல்லா கடையிலயும் தேடிட்டோம்.. உங்க கடையிலதேன் இருக்குதாம்.. எடுத்துக் குடுய்யா..

நீங்க அம்புட்டு பேருமா லவ் பண்ணுறீங்க..?

தோள்ல கிடக்குற துண்டைப் பாத்தா தெரியல.? நாங்கள்லாம் சுத்த விந்து மக்கள் கட்சி..

மொத்தம் பத்து கார்டு அஞ்சு வருசமா விக்காம கிடக்கு.. ஒரு கார்டு இருவத்தஞ்சு ரூவா..

இந்தா எறநூத்தம்பது.. குடு..

தெய்வமே.. இந்தாங்க..

என்றதும் அந்த தெய்வம் கார்டுகளை கிழித்து வேலன்டைன்ஸ் டேயை அழித்து விட்டோம் என்று வெற்றி வெற்றி.. டண்டணக்கா டணக்கு நக்கா வெற்றி வெற்றி.. டண்டணக்கா டணக்கு நக்கா என்று கூவிக் கொண்டே போகிறது.

********

கடைக்காரன் உடனே போன் செய்கிறான்.

மச்சி..  உங்கையில பழைய வேலண்டைன்ஸ்டே கார்டு இருக்கா.?

இருக்குடா.. இருவத்தி சொச்சம்..

என்ன விலை.?

ஒண்ணு ஏழு ரூவா மச்சி. வேணா ஆறு ரூவா குடுத்தா கூட உனக்கு தந்துடறேன்.

லூசு.. நா கிராக்கிய அனுப்புறேன். அவங்ககிட்ட ஒண்ணு மட்டும் சொல்லு. இந்த கார்டை வாங்க ஸ்கூல் பசங்க.. இல்ல இல்ல. ஸ்கூல் பொண்ணுங்க கெஞ்சிக்கிட்டு இருக்காங்க. இத யாருக்கு தரன்னு கேளு..

கேட்டா.?

தயவு செஞ்சு எங்களுக்கே குடுத்துருங்க.. எம்புட்டு விலையானாலும் வாங்கிக்கிறோம்னு சொல்லுவானுக..

டேய் யாருடா அந்த முட்டாக் கூகைங்க..?

அனுப்பி விடுறேன். நீயே பாத்துகக. ஒரு கார்டுக்கு அம்பது ரூபா விலைக்கு குறைஞ்சிடாத. நா கொஞ்சம் ஏமாந்துட்டேன்..

இந்தா.. உடனே எடுத்து வைக்கிறேன் மச்சி..

உனக்கு தெரிஞ்ச ஃபிரண்ட்ஸ் இருந்தாலும் கோர்த்து விடு மச்சி..

தாராளமா.. இதோ. இப்பவே செய்யுறேன். நீ அந்த முட்டாக்கூகைங்கள மட்டும் இந்தப் பக்கம் அனுப்பி விடு. வாட்ஸ் ஆப் இன்ஸ்டா வந்தப்புறம் இப்பல்லாம் எவன் கார்டு வாங்கி கையெழுத்துப் போட்டு ஒட்டி கூரியர் இல்லன்னா போஸ்ட்டுல அனுப்புறான். வீணாப் போறத தானா வந்து வாங்குறானுக.. அந்த தெய்வத்தை எல்லாம் இங்கிட்டு  டேக் டைவர்ஷன் போட்டு அனுப்பிவிடு தங்கம்..

ண்ணேய்.. அங்கிட்டு போற அண்ணே..

என்னப்பா…

இந்த சிட்டில இன்னொரு கடையில வெலண்டைன்ஸ் கார்டு வேணும்னு நாலு ஸ்கூல் படிக்கிற பொண்ணுங்க வந்து நிக்குதாம்ண்ணே.. ஃபிரண்டு கால் பண்ணாப்புல.. குடுத்துறச் சொல்லவா.?

அய்யய்யோ.. வேணாம்ப்பா. இந்தா. நாங்க அங்க போறோம். அந்த கார்டையும் வாங்கி கிழிக்கிறோம். இந்தா கிளம்பிட்டோம்.

என்று கிளம்பிப் போகிறார்கள்.

******

ஆக மொத்தம் இது அவர்களுடைய வெற்றி. வெற்றி வேல். வீரவேல்..

முகநூலில்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here