2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்திய மக்கள் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக மக்களால் பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட் காவி பாசிச கும்பலால் மக்கள் சூறையாடப்பட்டார்கள். அதற்கு எதிராக போராடுபவர்கள் பாசிச கொடுங்கோன்மையின் மூலம் ஒடுக்கப்பட்டார்கள்.
இந்த பாசிச கொடுங்கோன்மையில் இருந்து விடுபட இந்த தேர்தலில் பாசிச பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் களத்தில் பாசிசத்தை எதிர்த்து களமாடுகின்றன.
இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறுகிறது பாசிச பாஜக. தான் 10 மக்களுக்கு ஏதாவது செய்திருந்தால் அதை சொல்லி ஓட்டு கேட்கலாம். ஆனால் 1 சதவீத முதலாளிகளுக்கு ஆதரவாக இந்த 10 ஆண்டு ஆட்சி இருந்தது.
அதனால் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரமும், பொய் பித்தலாட்டம் மூலமும் பிரச்சாரம் செய்து வருகிறது பாஜக. அதில் குறிப்பாக இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடா பேசியதை திரித்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறது பாஜக.
இதனை அம்பலப்படுத்தும் விதமாக மக்கள் அதிகாரத்தின் மாநிலப்பொருளாளர் தோழர் காளியப்பன் பேசிய காணொலியை வெளியிடுகிறோம்.
பாருங்கள்… பகிருங்கள்…