கும்பமேளா விழாவில் நேற்று (29.01.2025) நடந்த நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திர பிரதேசம் தலைநகர் ப்ரயாக்ராஜ்-ல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்ப மேளா நடந்து வருகிறது. இதில் உள்ள பிற்போக்கு தனங்களையும், கார்ப்பரேட் அரசியலையும் அம்பலப்படுத்தி நமது தளத்தில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.
நேற்று (29.01.2025) அதிகாலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ‘புனித’ நீராட சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் பலியானதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆறு வாரங்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கங்கை, யமுனை, கண்ணுக்கு தெரியாத ‘சரஸ்வதி’ ஆகிய இரண்டு நதிகள் சங்கமிங்கும் இடத்தில் ‘புனித’ நீராடினால் மக்கள் தாங்கள் செய்த பாவங்களில் இருந்து விடுபடுவதாகவும், வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுவதாகவும் பார்ப்பன கும்பலால் அவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதைகளை நம்பி இன்று அப்பாவி மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
அம்பானி, அதானி, யோகி ஆதித்தியநாத் உள்ளிட்ட பல மோசடி கும்பல்கள் தங்கள் பாவத்தை கரைக்க இங்கு ‘புனித’ நீராடி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஐபிக்களுக்கு என தனியாக இடம் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த பகுதியில் இவர்கள் தங்கள் பாவத்தை ஸ்பெஷலாக கரைத்து சென்றுள்ளனர்.

ஆனால் சாதாரண மக்களுக்கு அப்படியில்லை. எல்லோரும் ஒரே இடத்தில் தான் நீராட வேண்டும். 40 கோடி மக்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே 30 பேரின் மரணம் சுட்டிக் காட்டுகிறது.
புதன் கிழமை மட்டும் 10 கோடி பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் மக்களை தனது மதவெறிக்கு பலிக் கொடுத்துள்ளது உத்திர பிரதேச யோகி ஆதித்தியநாத் அரசு.
“இந்த சோக சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளூர் மோதிலால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு உடல்கள் கொண்டு வரப்பட்டன. இருப்பினும் அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை அறிவிக்கவில்லை.” என்கிறது ராய்டர்ஸ் செய்தி நிறுவனம்.
படிக்க:
♦ மகாகும்பமேளா: சனாதனத்தின் அழுக்குகளைக் எதைக்கொண்டு கழுவுவது?
♦ மகாகும்பமேளா: காவிகளுடன் கைகோர்க்கும் கார்போரேட் பாசிஸ்டுகள்!
கிட்டத்தட்ட 40 உடல்கள் பிணவறைக்கு கொண்டு வரப்பட்டதாக மூன்று போலிஸ் வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. ராய்ட்டர்ஸ் சாட்சி ஒருவர் பிணவறைக்குள் 39 உடல்களை கணக்கிட்டதாக கூறுகிறது. 39 பேரும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
”இன்னும் உடல்கள் உள்ளே வருகின்றன. எங்களிடம் கிட்டத்தட்ட 40 உடல்கள் உள்ளன. நாங்கள் அவற்றையும் குடும்பங்களுக்கு ஒவ்வொன்றாக ஒப்படைத்து வருகிறோம்” என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்தது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

தொலைந்த சொந்தங்களை மக்கள் தேடுவதும், கை மற்றும் கால்கள் முறிந்த நிலையில் பலர் வருவதும் என கும்பமேளா கலவர பகுதி போல காட்சியளிப்பதாக பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தெற்கு நகரமான பெலாவியில் இருந்து கும்பமேளாவிற்கு பயணம் செய்த சரோஜா என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் மரணத்திற்கு காவல்துறையை குற்றம் சாட்டினார்.
உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கையில் “கூட்டத்தை சரி செய்ய போடப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டிக் குதிக்க முயன்ற போது தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக” கதையளக்கிறார். இந்திய பிரதமர் மோடியோ “தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு இரங்கல்”என தெரிவித்துள்ளார்.
படிக்க:
♦ கும்பமேளா யாருக்கு லாபம்?
♦ மகா கும்பமேளா: மக்கள் வரிப்பணத்தில் மூடத்தனத்தை வளர்க்கும் பாஜக அரசு!
ஒரு மாத காலமாக மகா கும்பமேளாவுக்காக விளம்பரங்கள் செய்துக் கொண்டிருந்த பாசிச மோடி அரசு இன்று 30 பேர் கொல்லப்பட்ட காரணத்தால் அதனை சமாளிக்க மொன்னையான காரணங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறது. திரிவேணி சங்கமம் என்ற பெயரில் இல்லாத சரஸ்வதி நதியிலே நீராடுங்கள் என மக்களை முட்டாளாக்கி பலிகொடுத்துள்ளது.
மதத்தின் பெயரால் மக்களை முட்டாளாக்குவது ஒரு புறம் என்றால் கார்ப்பரேட்டுகளின் விளம்பர சந்தையாய் கும்பமேளாவை பயன்படுத்தி விளம்பரப்படுத்துவதன் மூலம் லட்சம் கோடி வியாபாரத்திற்கு கார்ப்பரேட் கும்பலுக்கு உதவி செய்துள்ளது. இதனை உணராமல் மக்கள் தங்கள் உறவினர்களை பலிக் கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் நேற்றுவரை திரிவேணி சங்கமிக்கும் இடத்தில் குளித்தால் தான் பாவங்கள் தீரும் எனக் கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்ட இந்துமதவெறி கும்பல் இன்று “2025 மஹா கும்பத்திற்கு வந்துள்ள அன்பான பக்தர்களே, நீங்கள் இருக்கும் கங்கை அன்னையின் கரையில் நீராடுங்கள், சங்கு மூக்கு நோக்கி செல்ல முயற்சிக்க வேண்டாம்…” என தான் உருவாக்கிய கட்டுக்கதையை தகுந்த சந்தர்ப்பத்தில் உடைத்துள்ளது.
பக்தியின் பெயரால் மக்களிடையே மூட நம்பிக்கைகளை விதைப்பதும், இதனை பயன்படுத்தி மதவெறியை உருவாக்கி அரசியல் செய்வதும் தான் இந்துமதவெறி பாசிச கும்பலின் நோக்கம். இதனை உணர்ந்து அப்பாவி மக்கள் இதிலிருந்து விடுபடுவதும் மக்கள் தங்களை அன்றாடம் பாதிக்கும் பிரச்சினைக்காக ஒன்று கூடுவதுமே இன்றைய அவசியமான நிலைமை.
- சுவாதி
அப்பாவி இந்து மக்களின் பாமரத்தனமான கடவுள் பக்தியால் கோர மரணத்தை த்
தழுவியமைக்காக கண்ணீர் சிந்துவோம்!
இரங்கல் தெரிவிப்போம்!
அதே நேரத்தில் ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ பாசிச காவி கூட்டம் பல்வேறு விளம்பரங்களை செய்து இந்த கும்பமேளாவிற்கு அழைத்த விதம் கேவலமானது! இழிவானது! கோடிக்கணக்கான மக்கள் திரள்கின்ற இம்மூட நம்பிக்கை நிகழ்வுக்காக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ராணுவம் மற்றும் காவல் துறை மூலமாக மேற்கொள்ளப்படவே இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அறியாத நிலையில் இருக்கக்கூடிய பாமர உழைக்கும் மக்கள் இப்படி பக்தியின் பெயரால் உயிரிழப்பை வரவழைத்துக் கொள்வது இந்த அறிவியல் உலகில் மிகவும் கேடானது. இனிமேலாவது பகுத்தறிவு கொண்டு சிந்திக்க முன்வர வேண்டும் உழைக்கும் மக்கள்!
ஒரு திரைப்படத்தில் பாமரர்களாக நடிக்கும் பக்திமான்களை அதாவது மைல் கல்லை குலதெய்வம் என்று கும்பிடுகின்ற பொழுது நகைச்சுவை நடிகர் விவேக், ‘உங்களை எல்லாம் ஹண்ட்ரட் பெரியார் அல்ல; 1000 பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாதுடா’ என்னக் கேலி செய்வார். அதனை உழைக்கும் இந்து மக்கள் நகைச்சுவையாகக் கருதாமல்
சீரியசாக உணர வேண்டும் என்பதே நமது அன்பு வேண்டுகோள்! இதனை மையப்படுத்தி கட்டுரை வெளியிட்டுள்ள தோழருக்கு பாபாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
பக்தியின் பெயரால் மக்களின் உயிரைப் பறிக்கும் பாசிச பாஜக அரசு!
கார்ப்பரேட்டுகள் கல்லாகட்ட ஆன்மீகப் பொருளாதாரம்!
பார்ப்பன இந்து மத புரட்டுக்கு அப்பாவி மக்கள் பலிகடா!