விழுப்புரத்தில் நடைப்பெற்ற டிராக்டர் பேரணியில் விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அம்பேத்கர் மற்றும் விவிமு தோழர்கள் கலந்துக் கொண்டார்
பாசிச மோடி அரசின் விளைப்பொருட்களை சந்தைபடுத்தலுக்கான புதிய கொள்கை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடு தழுவிய டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனை ஏற்று விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்பான மக்கள் அதிகாரம் மற்றும் தொழிலாளர் அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் இணைந்து இந்த பேரணியில் பங்கேற்றனர்.
விழுப்புரத்தில்…
வேளாண் சந்தைப்படுத்துதல் தேசிய கட்டமைப்பு திட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி எழுச்சியுடன் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்ட தலைநகரத்தில் நான்கு முனை சந்திப்பிலிருந்து நகராட்சி மைதானம் வரை எழுச்சிமிகு போர்க்கணத்துடன் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
பேரணியில் 25க்கும் மேற்பட்ட டிராக்டர் மற்றும் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் கலந்து கொண்டது. மேலும் இந்த ஊர்வலத்திற்கு தோழர் கலியமூர்த்தி தாங்கினார். இறுதியில் தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் பெ.சண்முகம் விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அம்பேத்கர் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். மற்றும் மக்கள் அதிகார தோழர்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டோம். சென்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு ட்ராக்டர் பேரணிஎழுச்சியுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி
விழுப்புரம்
திருவண்ணாமலையில்…
ஒன்றிய மோடி அரசின் விளைபொருட்களை சந்தைபடுத்துதலுக்கான புதிய கொள்கை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி…
நாடு தழுவிய டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி ஆர்ப்பாட்டம் இன்று (26.01.2025) காலை திருவண்ணாமலை போளூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை பேரணியில் மக்கள் அதிகாரம் மற்றும் விவிமு தோழர்கள்!
நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தோழர்.ஜெகன் உரையாற்றினார்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர்.தமிழ் செல்வன், மற்றும் மக்கள் அதிகாரம் மாவட்ட செயற்குழு தோழர்கள் மாலினி, ஞானவேல், பாபு, மகாதேவி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம்
திருவண்ணாமலை மாவட்டம்.
தொடர்புக்கு: 94436 47412.
திருச்சியில்…
SKM தலைமையில் டிராக்டர் மற்றும் வாகன பேரணி!
ஒன்றிய மோடி அரசே !
ஒரே நாடு ஒரே சந்தை என விவசாயிகள் முன்னணி தொழிலாளர்கள் சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் நலன்களை அழிக்கின்ற வேளாண் சந்தைப்படுத்தலுக்கான (NPFAM) வரைவு கொள்கை திட்டத்தை ரத்து செய் !
திருச்சி பேரணியில் மக்கள் அதிகாரம் தோழர்கள்
என்ற முழக்கத்தின் கீழ் இன்று (ஜனவரி 26) குடியரசு தினத்தன்று காலை 10.30 மணி அளவில் திருச்சி வயலூர் சாலையில் இரட்டை வாய்க்கால் துவங்கி அல்லித்துறை வரை தேசம் தழுவிய டிராக்டர் மற்றும் வாகன பேரணி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடைபெற்றது.
° வேளாண் விளை பொருளுக்கு C 2 +50% படி
° விலை நிர்ணயம், அரசு கொள்முதல் உத்திரவாத சட்டம் நிறைவேற்ற !
° மின்சார தனியார் மையத்தை கைவிடு !
° விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்திடு !
° நிரந்தர நிதியம் ஏற்படுத்திட !
° 60 வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 /- ஓய்வூதியம் வழங்கிடு !
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
இந்த தேசம் தழுவிய பேரணியில் மக்கள் அதிகாரம் திருச்சி மாவட்டத்தின் சார்பில் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில இணைச் செயலாளர் தோழர் செழியன் இந்த பேரணியின் அவசியம் குறித்தும் மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவு தர வேண்டிய தேவை குறித்தும் விளக்கிப் பேசினார்.
தகவல்: மக்கள் அதிகாரம்
திருச்சி மாவட்டம்.
தொடர்புக்கு: 94454 75157.
ஜனவரி 26