
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கோவிந்த் பன்சாரே 2015 பிப்ரவரி 16 அன்ற நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது இந்து மத வெறியர்களால் சுடப்பட்டு 2015 பிப்ரவரி 20ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி உமா சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
‘தேதி குறித்த’ காவிப் பயங்கரவாதிகள்
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பன்சாரே போன்றே, நடைபயிற்சி சென்று திரும்பும் போது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நரேந்திர தபோல்கர் மோட்டார் சைக்கிள் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை நடத்தி வந்த தபோல்கர் அதன் மூலம் மக்களிடம் பகுத்தறிவை ஏற்படுத்தினார். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவரது இயக்கமும் போராட்டமும் அவருடைய செயல்பாடுகளும் காவிக் கும்பலை கோபமடைய செய்தது.
அவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு முன்பு அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் “அடுத்து நீங்கள்?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மகாராஷ்டிரா மாநில அரசியல் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியுடன் பின்னிப்பிணைந்தது. சிவாஜியை இந்துத்துவத்தின் தலைவராக சித்தரித்து ஆர்எஸ்எஸ் – சிவசேனா – பாஜக பிரச்சாரம் செய்து வந்தது.
அதே நேரத்தில் “சிவாஜி யார்?” என்ற பன்சாரேவின் புத்தகம் சிவாஜியை இந்துத்துவ பேராண்மையின் சின்னமாக திரிக்கும் சிவசேனா – ஆர்எஸ்எஸ் முயற்சிக்கு எதிராக இருந்தது. அதனால் பன்சாரேவும் தபோல்கரும் இந்து விரோதிகள் என முத்திரை குத்தப்பட்டு அவர்களால் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
இந்து மதவெறியர்களின் வெறி அத்தோடு நிற்கவில்லை. யாரெல்லாம் கார்ப்பரேட் – காவிக் கும்பலுக்கு எதிராக களமாடுகிறார்களோ, அவர்களெல்லாம் கொல்லப்பட்டார்கள். பொய் வழக்குகள் வழக்குகளில் நிரந்தர சிறை கைதிகளாகப்பட்டார்கள். அதே காவி பயங்கரவாதிகள் தான் கௌரி லங்கேஷ், கல்புர்கியை கொன்றார்கள்.
பயங்கரவாத அமைப்பு சனாதன் சன்ஸ்தாவும், குற்றவாளிகள் விடுதலையும்
இந்நிலையில் இத்தொடர் கொலைகளுக்கு காரணம் சனாதன் சன்ஸ்தா என்ற பயங்கரவாத அமைப்பு என விசாரணையில் தெரியவந்தது. அமைப்பின் சமீர் கெய்க்வாட் என்பவரை கைது செய்தது மகாராஷ்டிரா காவல்துறை.
போலீஸ் விசாரணையில் சமீர்க்கெய்க்வாட் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தபோல்கர், பன்சாரே மற்றும் கல்புர்கி ஆகியோரது படுகொலைகளில் சனாதன் சன்ஸ்தா பங்கு உறுதி செய்யப்பட்டதோடு சனாதன் சன்ஸ்தா மற்றும் ஜன் ஜாகிருதி சமிதி ஆகிய அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த வீரேந்திர சிங் தவாடே என்ற காது மருத்துவருக்கும் பங்கிருப்பதை உறுதி செய்தது. மூன்று கொலைகளுக்கும் திட்டம் தீட்டியதும் அம்பலமானது.
படிக்க:
♦ கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளி பாஜகவின் கவுன்சிலர்
♦ கௌரி லங்கேஷ் கொலையாளிகள் விடுதலையும், பார்ப்பன பாசிஸ்டுகளின் வரவேற்பும்!
இந்நிலையில் கடந்த 2025 அக்டோபர் மாதம் பன்சாரே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் மூவருக்கும் மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதில், 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட வீரேந்திர தவாடே மற்றும் ஷரத் கலாஸ்கர், அமோல் காலே ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சச்சின் அந்தூரே, கணேஷ் மிஸ்கின், அமித் தேவ்கர், அமித் படி, பரத் குரானே, மற்றும் வாசுதேவ் சூர்யவம்சி ஆகிய ஆறு பேருக்கு நீண்ட நாட்களாக சிறையில் இருக்கிறார்கள் என்ற காரணத்தைக்காட்டி 2025 ஜனவரியில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
2015 பன்சாரே, 2015 தபோல்கர், 2017 கௌரி லங்கேஷ், 2019 கல்புர்கி என இந்துத்துவ பார்ப்பனிய கண்ணோட்டத்திற்கு எதிராக களமாடியவர்களை வரிசையாக சுட்டு வீழ்த்திய காவி பயங்கரவாதிகள் இன்று உயர்நீதிமன்றத்தின் தயவால் வழங்கிய சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.

அதே நீதிமன்றம் தான் விசாரணையே நடைபெறாமல் குற்றம் நிரூபிக்கப்படாத ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித்தை சிறையில் வைத்துள்ளது.
இந்த படுகொலைகளுக்கு ஒரு வகையில் அதிகார வர்க்கமும் உடந்தை தான். 2016 லேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், அதன் பின்பும் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளார்கள். எல்லாமே திட்டமிட்ட செயல் என்பது நிரூபணம் ஆகியும் அவர்களுக்கு நீதிமன்றம் ஏன் ஜாமீன் வழங்கியது என்பதை நம் கேள்வி.
பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டு இந்நாளோடு 11 வருடங்கள் ஆகிவிட்டதும் படுகொலையாளர்கள் நீதிமன்றத்தையே தங்களுக்கு ஏற்ப மாற்றிவிட்டார்கள் என்பதும் அக்கும்பலின் வளர்ச்சி ஆபத்தானது என்பதையே காட்டுகிறது.
- நலன்






