ர்நாடகாவில் லங்கேஷ் நியூஸ் என்ற செய்தி ஊடகத்தின் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்த கௌரி லங்கேஷ் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக அமைப்புகளின் கொலைகாரப்படையான சனாதன் சன்ஸ்தா மூலம் படுகொலை செய்யப்பட்டதை நாடே அறியும்.

2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, கெளரி லங்கேஷ் பெங்களூருவில் அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு பெங்களூரு காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி – SIT) இந்த வழக்கை விசாரித்தது.

இந்தக் கொலைக்கு காரணமான 18 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐபிசி பிரிவுகள் 302, 120(பி), 114, 118, 109, 201, 203, 204, 35 ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்திய ஆயுதச் சட்டம், 1959 இன் 25(1), 25(1B), 27(1) மற்றும் COCA சட்டத்தின் 3(1)(i), 3(2), 3(3) மற்றும் 3(4) 2000 (டிஜி மற்றும் ஐஜிபியின் ஆணை எண்.CRM/01/158/BC/2017-18 தேதி 06-09-2017) குற்ற எண். 221/2017. இந்த வழக்கில் கவுரி லங்கேஷின் சகோதரி கவிதா லங்கேஷ் முதல் தகவல் அளித்தவராவார்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் ‘தாதா’ என்று அழைக்கப்படும் விகாஸ் படேல் இன்னும் தலைமறைவாக உள்ளார். இந்த கொலைக் குற்றவாளிகள் அனைவரும் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் 16 பேருக்கு ஜாமீன் கிடைக்க முக்கியக் காரணம், விசாரணை தாமதமானது தான் என்று இந்த வழக்கின் யோக்கியதையை பிபிசி அம்பலப்படுத்துகிறது.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 527 சாட்சிகளில் இதுவரை சுமார் 140 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர். எனவே விசாரணைகள் விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை என்பதால் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் சட்டபூர்வமான உரிமை என்ற முறையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம்.

இந்த வழக்கில் ஒரு கொலைக் குற்றவாளியான சம்பாஞ்சே என்கிற மோகன் நாயக்கிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது, ஆனால் அரசுத் தரப்பு அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதற்குப் பிறகு, கே.டி. நவீன் குமார், அமித் திக்வேகர் மற்றும் சுரேஷ் எச்.எல் ஆகியோரும் ஜூலை 2024-இல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். அதன் பிறகு, பாரத் குமார், ஸ்ரீகாந்த் பங்கர்கர், சுஜித் குமார் மற்றும் சுதனா கோந்த்கர் ஆகியோர் செப்டம்பர் 2024-இல் ஜாமீன் பெற்றனர்.

வாக்மோர், யாத்வே உள்ளிட்ட 8 பேருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. ஆக மொத்தம் 16 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி), இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் கர்நாடகா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகிய விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய இந்திய தண்டனைச் சட்டம் எதுவும் அவர்கள் மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே சமயத்தில் தான் பீமா கொரகான் வழக்கில் கைதாகி சிறை படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு சிறையிலேயே அடைக்கப்பட்டு இருந்தனர் என்பதும், இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் மரணமடைந்த டாக்டர் சாய் பாபா கடந்த 10 ஆண்டுகளாக பிணை மறுக்கப்பட்டு குற்றுயிரும், கொலையுயிருமாக 7 மாதங்களுக்கு விடுதலை செய்யப்பட்டார் என்பதும் கவனிக்கத்தக்க அம்சங்கள் ஆகும்.

டிசம்பர் 9 கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட தினம்!

குறிப்பிட்ட வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவது என்பது பொதுவான வாடிக்கை என்ற போதிலும் ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படையினருக்கு அப்படிப்பட்ட ஜாமீன்கள் உடனுக்குடன் வழங்கப்படுவதும் பாசிச பாஜகவிற்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகளுக்கு நீண்ட காலத்திற்கு பிணை மறுக்கப்படுவதும் இந்திய நீதிமன்றங்களின் பாசிச கைக்கூலித்தனத்தை அம்பலப்படுத்துவதாகவே உள்ளது.

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பரசுராம் வாகமோர் மற்றும் மனோகர் யாத்வே இருவருக்கும் கடைசியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜாமீன் வழங்கப்பட்டவுடன் இந்த கொலை குற்றவாளிகள் இருவரும் இந்து மத சடங்கு சம்பிரதாயங்களின்படி புனிதமாக்கப்பட்டுள்ளார்கள் என்பது தான் சகிக்க முடியாத கொடூரமான செய்தியாகும்.

மனுதர்மத்தின் படி கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும், விதிவிலக்குகளும் சாதிக்கு தகுந்தவாறு வழங்கப்பட்டுள்ளது என்பதே இந்த இந்து மத சடங்குகளின் அடிப்படை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

மதச்சார்பற்ற அடிப்படை கொண்டதாக சொல்லிக் கொள்ளப்படும் சட்டத்தின் ஜனநாயக வரம்புகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு மனுநீதி அடிப்படையிலான நீதி அனைத்து நீதிமன்றங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது என்பதும், அதன் தொடர்ச்சியாக சமூகமே மெல்ல மெல்ல பாசிசமயமாகி வருவதை இந்த நிகழ்ச்சி போக்குகள் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றன.

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) தலைவர் கோவிந்த் பன்சாரே, அறிஞர் எம்.எம். கல்புர்கி ஆகியோரது கொலைக்கும் கெளரி லங்கேஷ் கொலைக்கும் தொடர்பு இருப்பது எஸ்.ஐ.டி விசாரணையில் தெரியவந்தது.

இவை அனைத்தையும் நடத்தியது ஆர்எஸ்எஸ் இன் கொலைகார குண்டர்படையான சனாதன் சாஸ்தா என்பது அம்பலமான பிறகும் அதனை தடை செய்யாமல், அதில் உள்ள உறுப்பினர்களுக்கு கௌரவம் வழங்கப்படுவதும், ஶ்ரீ ராம் சேனா, இந்து சேனா போன்ற சக குண்டர் படைகளின் மூலம் கொண்டாடப்படுவதும் புதிய போக்காக வளர்ந்து வருகிறது.

இவை அனைத்தும் பாசிச பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குண்டர் படையை நேருக்கு நேர் மோதி வீழ்த்துவதை தவிர வேறு வழியில்லை என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

  • பார்த்தசாரதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here