இந்துராஷ்டிரத்தில்”ஒரு நாள்!


ன்று ஜென்ரல் ஷிப்ட் என்பதால் கொஞ்ச நேரம் அதிகமாக தூங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 5:30 மணிக்கு பால்காரர் மணி அடிக்கவே அரக்கப்பரக்க எழுந்து பால் சொம்பை அவரிடம் நீட்டினேன். “சார் இந்த ஒன்னாம் தேதியிலிருந்து கோமியத்தின் விலை லிட்டர் 110 ரூபாய்! ஆத்துல மாமிகிட்டே சொல்லிடுங்கோ”பால்காரரும் பிராமண பாஷைக்குமாறி இருந்தார்.

கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த பெரிய மகனும் பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த மகளும் காலை டிபனுக்கு எருமை மாட்டு சாணிமேக் இன் இந்தியா உணவை சொமேட்டோ மூலம் ஆர்டர் செய்திருந்தனர்.பெரியவனுக்கு ஞாயிற்றுக்கிழமை முடியை ட்ரிம் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு முழ நீளத்திற்கு பாகவதர் போல முடி வளர்ந்திருந்தது.

வயிறு ஒருமாதிரியாக இருந்ததால் லைட்டாக எதாவது சாப்பிடலாம் என்று முடிவெடுத்து இருந்தேன். தொழிற்சாலைக்கு செல்லும் முன்பு பிரபலமாக இருந்த பிராமண போஜனம் கடையில் உள்ளே நுழைந்து“என்னப்பா இருக்கு” என்று கேட்டவுடன்,“இன்னைக்கு ஜெர்சி பசுவோட சாணி ஸ்பெஷல் சார்” என்றார்.அருகில் 2பிராமணர்கள் உட்கார்ந்து கொண்டு “இவா கடையில நமக்கு பிடிச்சது காராம் பசுவோட சாணிதான்” என்று சுவைத்து தின்று கொண்டிருந்தனர்.

படிக்க:

 ஆர்.ஆர்.ஆரா? ஆர்.எஸ்.எஸா?

சங்கிகளிடம் விவாதித்தால் எப்படியிருக்கும்?

நானும்“அரை பிளேட் காராம் பசு சாணி கொடுப்பா” என்று கேட்டுக் கொண்டேன்.“சார் அதெல்லாம் பஞ்சகச்சம் கட்டியவாளுக்கு மட்டும்தான்! நீங்க வெறும் கௌபீனத்துடன் இருப்பதால நம்மளவாளுக்கு வேற மாட்டு சாணிதான் கிடைக்கும்” என்றார் ஷ்டிரிட்டாக,“சரிப்பா இருக்கிறதை கொடு! ஒரு டம்ளர் கோமியம் மற்றும் வெதுவெதுப்பா சக்கரை கம்மியா போட்டு கொடு”என்றேன்.

கையில்தட்டுடன் வந்த சிப்பந்தி“சார் ரகசியமா ஒரு விஷயம் சொல்றேன் அடுத்த வாரத்திலிருந்து வேற வேற ஜீவராசிகளோட சாணியும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செஞ்சு எங்க ஹோட்டல்ல தரப்போகிறோம்! உங்களுக்கு மட்டும் சொல்றேன் சார்”அப்பாடா மனம் குதூகலித்தது!

சார் பேப்பர் என்ற பேப்பர் காரரின் சத்தம் தூக்கத்தைக் கலைத்தது.சீ! எல்லாம் கனவு தானா இந்து ராஷ்டிரம் வந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டே படுத்ததால் மாட்டுக்கறிக்கு பதிலாக மாட்டு சாணி, பாலுக்கு பதிலாக கோமியம்,பேண்ட் சட்டைக்கு பதிலாக பஞ்சகச்சம், கௌபீனம் என்று கனவில் வந்தது போலிருக்கிறது, பின் மண்டையில் தட்டி கொண்டு பல்லை துலக்ககிளம்பினேன்.

  • செல்வம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here