கார்ப்பரேட் பகல் கொள்ளையில் இருந்து மின்துறையை பாதுகாப்போம்!


ந்தியாவிலேயே அதிகமான மின்சாரத்தை நுகர்கின்ற மாநிலங்களில் தமிழகம் உள்ளது. கடந்த மார்ச் 28ஆம் தேதி 17,106 MW மின்சாரத்தை தமிழக மக்கள் நுகர்வு செய்தனர். இது மின்வாரியம் தொடங்கிய நாளிலிருந்து உச்சபட்ச மின் நுகர்வு ஆகும் என்று மின்சார அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதத்துடன் அறிக்கை வெளியிட்டார்.

தமிழகத்தில் மட்டும் 50000 இடத்திற்கு மேல் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மின் வாரியம் இத்தகைய சாதனையை ஈட்டி உள்ளது என்பது கண்டிப்பாக கணக்கில் கொள்ளவேண்டியஅம்சமாகும்.

களப்பணியாளர்கள்,உதவியாளர்கள் கணக்கீட்டாளர்கள், அலுவலக பணியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் என்று அனைத்து வகைகளிலும் பணி இடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் எட்டு மணி நேர வேலை என்பது சாத்தியமே இல்லாமல் குறைந்தபட்சம் 10 மணி முதல் 12 மணி நேரம் வரை மின்வாரிய தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டு வருகின்றனர்.

இத்தகையசூழலில் பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்தம் 2021 தமிழகம், புதுச்சேரி உட்பட அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் மின் வாரியத்தை முற்றாக ஒழித்துக்கட்டி தனியாரிடம் ஒப்படைப்பதற்கே வழிவகை செய்கிறது.தற்போது ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ரூ9.06ஆகிறது.இதில் வீடுகளில் உள்ள நுகர்வோர்களுக்குயூனிட் ரூ 2.23 காசுகளுக்கும், விவசாயிகளுக்கு யூனிட் ரூ3.32 காசுகளுக்கும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.உற்பத்தி செலவில்மீதமுள்ள தொகை மின்வாரியத்திற்கு நட்டமாக மாறுகிறது.

மின் வாரியத்தை பொருத்தவரை தொழிற்சாலைகளுக்கு மட்டுமே உற்பத்தி செலவை விட அதிகமான தொகைக்கு மின்சாரத்தை விற்பனை செய்கிறது. இந்த தொகையை ஈடுகட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும்.ஆனால் தற்போது 2021 22 தமிழக பட்ஜெட்டில் ரூபாய் 13,108 கோடி வெட்கத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு அறிவித்ததைத் தாண்டிதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்(tangedco) பெற்றுள்ள பெரும் கடனில் ஒரு பகுதியை கூட மானியமாக வழங்குவது இல்லை.

இதன் காரணமாக 2011-12 காலத்தில் ஓரளவு தற்சார்புடனிருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 10 ஆண்டுகளில் ரூபாய் 1,34,119 கோடி கடனாளியாக மாறியுள்ளது.

இதுமட்டுமின்றி மின் வாரியத்திடம் மின்சாரத்தை வாங்கிக் கொள்வதற்கு பதிலாக தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும், உள்நாட்டு தொழிற்சாலைகளும் குறைந்த விலைக்கு மின்சாரத்தை வாங்கி கொள்வதன் மூலம் மின் வாரியத்தை நட்டம் அடையச் செய்து வருகிறது.

மின்சார உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே மின்சார வாரியம் இழுத்து வைத்துள்ள கம்பி வழித்தடங்களில் மூலமே மின்சாரத்தை நுகர்வாளர்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“உற்பத்தி விலைக்கே, சந்தையில் விற்பனை விலை” என்ற புதிய முழக்கத்துடன் மின் துறையை கைப்பற்ற களமிறங்கியுள்ள கார்ப்பரேட்டுகள்.

படிக்க:

 கார்ப்பரேட்- காவிகளின் பிடியில் ஊடகங்கள்! மாற்றாக சுதந்திர ஊடகத்தை உருவாக்குவோம்!

♦ மக்கள் போராட்டம் தோற்றதில்லை! கார்ப்பரேட்டுகள் தொடர்ந்து வெற்றி பெறுவதும் இல்லை!

சமையல்எரிவாயு,பெட்ரோல், டீசல் போன்றவற்றின் மானியங்களை தான் பெற்றுக்கொண்டு உற்பத்தி செலவை நேரடியாக நுகர்வோர் தலையில் கட்டி பல லட்சம் கோடிகளை விழுங்குவதற்கு தயாராக உள்ளது. எனவே, மின்சார சட்டத் திருத்த மசோதா 2021 கிழித்தெறிவோம்! மின்சாரம் தனியார்மயமாவதை எதிர்த்து போராடி தடுத்து நிறுத்துவோம்.

பா.மதிவதனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here