ஜெயமோகனுக்கு கண்டனம்!


முக நூலை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தேன். ஜெ.மோகனை ஆனந்தவிகடனுக்காக ஒரு பட்டிமன்ற பேச்சாளர் நேர்காணல் செய்கிறார்.அவர், தமிழ்ப் பேராசியராக இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை.நேர்காணலில் வழக்கம்போல், ஜெயமோகன் தமிழர்கள் மீது வன்மத்தைக் கக்கிக் கொண்டிருந்தார்.அவரது நேர்காணலின் சாராம்சத்தை ஓரிரு வரிகளில் சொல்லிவிடலாம்.

உலகத்திலேயே அதிகமாக முட்டாள்தனங்களை Youtube-ல் ஏற்றியிருப்பது தமிழர்கள்தான்" - ஜெயமோகன் | KWP | parveen sulthana interviews jeyamohan on KWP

தமிழர்களுக்கு வரலாற்று அறிவில்லை. தமிழர்கள் தங்கள் பண்பாடு, வரலாறு, இலக்கியம் குறித்து மிகையுணர்வுப் பெருமிதம் கொண்டிருக்கிறார்கள்.சங்க இலக்கிய காலம் குறித்து தமிழ் அறிஞர்கள் மிகையாக குறிப்பிடுகிறார்கள்.அவை பொய்யானவை.சங்க இலக்கியங்கள் கி பி மூன்றாம் நூற்றாண்டில் (பல்லவர்கள் காலத்தில்) எழுதப்பட்டவையே.இப்படி நீண்டது அவ்வுரையாடல்.

தமிழ், குறித்து பேசும்போது அவரது முகத்தில் ஒருவித வெறுப்பை, ஏளனத்தை கவனித்தேன்.எவ்வித ஆதாரங்களும் இல்லாத வெற்று அவதூறுகளை அள்ளிவீசும் ஜெ.மோவிடம், inter act செய்யத் துணிவற்று, அவர் சொல்வதையெல்லாம் ஆமோதிக்கும் தாழ்வு மனப்பான்மை நேர்காணல் செய்தவரிடம் தெரிந்தது.

ஆ.விகடன் போன்ற கருத்துருவாக்க பீடங்கள், ஜெ.மோ போன்றவர்களை ஆளுமைகளாகக் காட்ட விரும்புவதும், அதன்வழி தமிழர்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்க ஆவல் கொள்வதும் அப்பட்டமாகத் தெரிந்தது.ஜெ.மோ ஒரு மலையாளி. மலையாளத்தில் எழுதலாம். ஏன் பிற்போக்கான தமிழ் வெளியில் இயங்குகிறார்?

மலையாளத்தைவிட தமிழ்ப்பரப்பு பரந்தது. இதன் சந்தை பெரியது.
சினிமா வணிகம் வளமானது.பார்த்துக் கொண்டிருந்த பிஎஸ்என்எல் வேலைக்கு விஆர்எஸ் கொடுக்குமளவு இங்கு எழுத்தை வைத்துப் பிழைப்பு நடத்த முடியும். ‘தெய்வத்திண்டே திர’ என சமீபத்தில் மலையாள சினிமா குறித்து ஒரு நூல் எழுதியிருந்தேன். அந்நூலில் மலையாளிகளின் கலை அழகியலை வெகுவாகப் பாராட்டியே எழுதியிருந்தேன்.

படிக்க:

பத்திரிகையாளர்கள் மீது பாயும் பார்ப்பன பாசிச பயங்கரவாதிகள்!

எனக்கு ஜெ.மோ மலையாளியாக இருப்பதோ, அவர் தமிழில் எழுதுவதிலோ எவ்விதக் காழ்ப்புணர்வும் இல்லை. அதேவேளை தமிழர்களின் பெருமிதத்தை , அவர்களது வளமான வரலாற்றுணர்வை அழித்து , அவர்களிடம் தாழ்வுணர்வைத் திணிக்கும் வேலையை ஜெ.மோ செய்வதைதான் ஆபத்தானதாகப் பார்க்கிறேன்.

ஜெ.மோ குறித்து இலக்கியப் புலம் சார்ந்து செயல்படும் தமிழ் இளைஞர்கள் எச்சரிக்கையடைய வேண்டிய காலம்!

கரிகாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here