தேசத்துரோகி: விலைவாசிகள் தொடர்ந்து உயர்ந்துவருகின்றன. வரும் நாட்களில் தேவையான பொருட்களை வாங்குவதே இன்னும் கடினமாக இருக்கும். விலைவாசி பிரச்னையில் மக்கள் விழித்துக்கொண்டு அரசுடன் போராடவேண்டும்.

சங்கி: இந்துக்கள் இங்கு ஆபத்தில் உள்ளனர் நீங்கள் விலைவாசியைப்பற்றி பேசுகிறீர்கள். இந்துக்களாகிய நாம் ஆயுதம் ஏந்தவேண்டும். அவர்கள் நம்மை தாக்கப்போகிறார்கள். விழித்துக்கொள்ளுங்கள் இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்.

தேசத்துரோகி: துணிகளுக்கான வரியை அதிகப்படுத்தி அதன்விலைகளும் அதிகமாகிவிட்டதே. துணிகளின் விலைஉயர்வுபற்றி உங்களுக்கு கவலை இல்லையா? அவை விலை உயர்ந்தால் நீங்கள் என்ன அணிவீர்கள்?

சங்கி: நாம் இந்து ஆடைகளை மட்டுமே அணியவேண்டும். அவர்கள் ஹிஜாப் அணியக்கூடாது. இது இந்துக்களுக்கு எதிரானது. இது இந்துதேசம். அவர்கள் எப்படி ஹிஜாப் அணியலாம்?

தேசத்துரோகி: எண்ணெய், தானியங்கள், பருப்பு போன்ற உணவுப்பொருட்களின் விலைஉயர்வு பற்றி உனக்கு கவலையே இல்லயா? விலைவாசி இப்படியே போய்க்கொண்டிருந்தால் இந்துக்களுக்கும் உணவு உண்பது கடிமாகிவிடாதா?

சங்கி: அவர்கள் ஹலால் இறைச்சியை உண்கின்றனர். அவர்கள் ஹலால் இறைச்சியை உண்ணக்கூடாது. இது எங்கள் உணர்வுகளை புண்படுத்துகிறது. முஸ்லிம் இறைச்சிகடைகளை புறக்கணிக்கவும். முஸ்லிம் பழவியாபாரிகளை புறக்கணிக்கவும். முஸ்லிம் காய்கறி விற்பனையாளர்களை புறக்கணிக்கவும்.

தேசத்துரோகி: ஐயா நான் விலைவாசியைப் பற்றி பேசுகிறேன். ஆடை, உணவுபழக்கம் பற்றிஅல்ல. என்ன உடுத்துவது, சாப்பிடுவது என்பது அவரவர் சொந்தவிருப்பம்.

சங்கி: நம்மை பின்பற்றாமல் எப்படி நம்நாட்டில் அவர்கள் வாழலாம்?அவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லட்டும். நாங்கள் கோவில் கட்டுவோம். அவர்களால் எங்களைத் தடுக்கமுடியாது. அவர்கள் பாங்குஓதுவதை தடுப்போம்.

படிக்க:

♦ சங்கி என்ற சொல்லை எவ்வாறு பயன்படுத்துவது.?

தேசத்துரோகி: அவர்கள் அவர்களுடைய கடவுளையும், நீங்கள் உங்கள் கடவுளையும் தாராளமாக வழிபடுங்கள்? அவர்கள் பாங்கு ஓதுவதை ஏன் தடுக்கவேண்டும்? அவர்களின் வழிபாட்டு உரிமையை நாம் மதிக்கவேண்டாமா?

சங்கி: இல்லை. அவர்கள் இந்து கோவில்களுக்கு அருகில் எங்கும் இருக்கக்கூடாது. கோவில்களுக்கு அருகில் கடைகள் வைக்கமுடியாது.

தேசத்துரோகி: வாழ்வாதாரத்திற்காக யார் எங்கு வேண்டுமானாலும் கடைகளை வைக்கலாம் இதில் மதம் எங்கே வந்தது? மசூதிக்கு அருகில் இந்துக்கள் கடைகள் வைக்கவில்லையா?

சங்கி: கோவில்கள் இந்துக்களுக்கானது. அவர்கள் எப்படி தங்கள் கடைகளை இங்கு வைக்கிறார்கள்?

தேசத்துரோகி: நீங்கள் பேசுவது அபத்தமாக இல்லையா?

சங்கி: இந்தியா இந்துக்களுக்கானது. அவர்கள் ஹல்திராம்பாக்கெட்டில் உருதுமொழியில் எழுதுகிறார்கள். உருதுமொழியில் எழுதி பலவிஷயங்களை மறைக்கிறார்கள்.

தேசத்துரோகி: இதில் என்ன பிரச்சனை. உங்கள் பாபாராம்தேவ் கூட தனது நெய்பாக்கெட்டில் உருது மொழியில் தயாரிப்பு விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

சங்கி: அவர்கள் உணவு ஜிஹாத் செய்கிறார்கள். பிரியாணி மற்றும் உணவுப் பொட்டலங்களில் உருது மொழியில் எழுதி கொடுக்கிறார்கள். லவ்ஜிஹாத், செக்ஸ்ஜிஹாத், ஐஏஎஸ் ஜிஹாத்செய்கிறார்கள். இதை நாம்தடுத்து நிறுத்தவேண்டும். இந்துக்கள் ஆபத்தில் உள்ளனர். தேசத்தை காப்பாற்றுங்கள்.

தேசத்துரோகி: நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களால் உணரமுடியவில்லை. நீங்கள் வளர்க்கும் வெறுப்பு யாருக்கும நல்லது செய்யப்போவதில்லை, யாருக்காக நீங்கள் இதைச் செய்கிறீர்களோ அவர்களுக்குக்கூட நல்லது செய்யப்போவதில்லை.இதை உடனே நிறுத்திக்கொள்ளுங்கள். வேலையின்மை உங்களுக்குப் பிரச்சினையில்லையா?

சங்கி: இல்லை அவர்கள் தான் பிரச்சனை. அதனால்தான் விராட இந்துராஜா இந்துக்களைக் காக்க வந்திருக்கிறார். இந்துக்களைக் காக்க 22 மணிநேரமும் உழைக்கிறார்.

தேசத்துரோகி: இந்த பைத்தியக்காரத்தனம் உங்களை எங்கேயோ கொண்டுபோய் விடப்போகிறது.அதற்கு முன்னாள் உணர்ந்து கொண்டால் நல்லது.

ஒரு இந்திய குடிமகன்

countercurrents.org

தமிழில்: செந்தழல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here