தமிழகத்தின் கல்விக் கட்டமைப்பைத் தகர்க்கும் பாசிச மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!
பாசிச மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு, மாநில உரிமை பறிப்புக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்! கல்வி உரிமையை நிலை நாட்டுவோம்!
பாசிச மோடி அரசு புதிய தேசிய கல்விக்கொள்கையை கடந்த 2020 ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலே அனைத்து மாநிலங்களிலும் அமுல்படுத்தி வருகின்றது. இந்த கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமுல்படுத்த முடியாது என்று தமிழக அரசும், தமிழக மக்களும் எதிர்த்து போராடி வருகின்றனர். மேலும் இந்தி திணிப்பை கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களும் எதிர்த்து போராடுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம், மாநில பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்தை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு செல்லும் வகையில் வரைவு விதிகள் வெளியிட்டது. இதன் மூலம் கல்வி துறையை கார்ப்பாரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது, அதற்கேற்ப சங்கிகளை துணை வேந்தர், இயக்குனர் உள்ளிட்ட தலைமை பொறுப்புகளில் நியமிப்பது பாடத்திட்டம் உள்ளிட்டவற்றை காவிமயமாக்குவது என்று அமுல்படுத்த முயல்கின்றது. இத்தகைய நடவடிக்கைகளை பல்வேறு மாநில அரசுகளும், ஜனநாயக சக்திகளும், மாணவர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வரும் நிலையில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 2150 கோடி நிதியின் ஒரு பகுதியை குஜராத்திற்கும், உபி க்கும் கொடுத்து தமிழக மாணவர்களின் கல்வியை பறிக்கும் வகையில் செயல்பட்டது பாசிச மோடி அரசு. அனைத்து மாநிலங்களையும் பி.எம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் கட்டாயமாக இணைய செய்வதன் மூலம் இந்தியை திணிப்பது என்று தனது சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறது பாசிச மோடி அரசு.
படிக்க:
♦ புதிய கல்விக் கொள்கையை கிழித்தெறிவோம்! கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரப் போராடுவோம்!
♦ புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் – தொடர் கட்டுரை!
இதனை எதிர்த்த தமிழ்நாடு முதல்வர் மோடி அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என விமர்சித்திருந்தார். அது குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை எனில் கல்விக்கான நிதியை கொடுக்க முடியாது, தமிழக அரசு ஒன்றிய அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால்தான் நிதி தர முடியும் என்று மிரட்டல் விடுக்கின்றார். ஒன்றிய அமைச்சரின் திமர்த்தனமான பேச்சை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, (RSYF) வன்மையாக கண்டிக்கின்றது..
மேலும் தமிழகத்தில் BJP தலைவர் அண்ணாமலை தமிழை படித்துவிட்டு மற்ற மாநிலங்களில் ‘’கழிவறைக்குக் கூட போக முடியாது’’ இந்தி தெரிந்தால்தான் அவர்கள் இந்தியர்கள் என்று தமிழக மக்களை மிகவும் இழிவாக பேசி வருகிறார். இத்தகைய பாசிச கும்பலை தமிழகத்தில் இனியும் அனுமதிப்பது அவமானம். எனவே ஜனநாயக விரோத, மக்கள் விரோத பாசிச RSS- BJP சங்கி கும்பலை ஆட்சி அதிராகரத்தில் இருந்து விரட்டியடிக்க, மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து மாணவர் அமைப்புகளும், ஜனநாயக இயக்கங்களும் ஒன்றிணைந்து போரட வேண்டும் என எமது புரட்சிக மாணவர்- இளைஞர் முன்னணி (RSYF) கோருகின்றது.
தோழமையுடன்
ச. அன்பு
மாநில பொதுச் செயலாளர்,
பு.மா.இ.மு. தமிழ்நாடு.