திருச்சியில் சனாதனம் எனும் பார்ப்பன பாசிச பயங்கரவாதத்தை ஒழித்து கட்டுவோம்!

சனாதனத்தை எதிர்த்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நேரலை வீடியோ!

 

 

திருச்சியில் இன்று மாலை 5 மணி அளவில் ரயில் நிலையம் அருகே உள்ள காதி கிராப்டில் மனிதர்களிடையே பிறப்பால் பாகுபாட்டை நிறுவுகின்ற சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டம் மகஇக தலைமையில் நடைபெற இருந்தது.

தமிழக காவல்துறை இன்று நண்பகல் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி கடிதம் தந்து விட்டனர்.

தோழமை அமைப்பின் சார்பில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து போராட்டத்தை தடையை மீறி தொடர்வோம் இந்து முன்னணி போன்ற சங்கிகளும் சனாதனம் வேண்டும் என்று அதே இடத்தில் போராட்டம் நடத்த மிரட்டல் விடுத்திருந்தனர் அதன் அடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பு சார்ந்த தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறை போராடிய தோழர்களை கடுமையாக தாக்கி ஆபாச வார்த்தைகள் பேசி ரோட்டில் தரதரவென இழுத்து வந்து கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது.

தற்போதைய தமிழக முதல்வர் சங்கிகளுக்கும் காவிகளுக்கும் சாதகமான ஆட்சியை நிறுவியிருக்கிறார் என்பதை தான் இது உணர்த்துகிறது. மாற்று என்று சொல்லி மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த தவெக தலைவர் விஜயின் ஆட்சியும் இடதுசாரிகளுக்கு எதிராக இருக்கிறது என்பதை தான் இது உணர்த்துகிறது.

தோழர்களின் உறுதிமிக்க போராட்டத்தில் கலந்துக் கொண்டு கைதாகி மண்டபத்தில் இருக்கின்றனர். இப்போராட்டத்தில் தோழர்கள் கோவன், செல்வராசு, ஜீவா, திருச்சி செழியன், லோகநாதன், மணியரசன், அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கைதாகி மண்டபத்தில் உள்ளனர்.

போராட்ட காட்சிகள்!

தகவல்:

தோழர் மணியரசன், மாநில செயற்குழு உறுப்பினர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

3 COMMENTS

  1. சனாதனம் கோலோச்சத் துடிக்கும் இத் தருணத்தில் மகஇக, புமாஇமு, புஜதொமு,
    விவிமு, ம.அ‌…. உள்ளிட்ட அமைப்புகள் தலைமை தாங்கி – திருச்சியில் சனாதனம் எனும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிரான வீரம் செறிந்த போராட்டத்தினை தோழர்கள் முன்னெடுத்து சென்ற பொழுது காவியில் கரைந்து போன விஜய்யின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை சங்கிகளின் ஏவல் துறையாக மாறி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கெட்ட வார்த்தைகளால் பேசி கடுமையான அடக்கு முறையை ஏவிவிட்ட கொடும் செயலை வன்மையாக கண்டிப்போம்! சனாதனத்திற்கு எதிரான கூர்மையான போராட்டங்களை ஒன்றிணைப்போம்;! எம்ஜிஆர் காலத்தில் தேவாரம் மோகன் தாஸ் போன்ற போலீஸ் அதிரடிப்படை போட்ட ஆட்டங்களை போல் தற்போது விஜய்யின் ஆட்சிக்காலத்தில் அதே அடக்குமுறைகளை கையாளத் துவங்கி விட்டன. ரூட் மாஃபியா, விரிச்சுவல் வாரியர் உள்ளிட்ட எளிதான ஊடக வடிவங்களில் Fake News இடை விடாது பரப்பி அனைத்துவித போராட்டங்களையும், அதன் கூர்மை களையும் மக்களிடமிருந்து மறைத்து மழுங்கடிக்கப் பார்க்கின்றன.

    விஜய் தேர்தல் வெற்றியை – சினிமா மோக பொறுக்கி அரசியலை, ஆட்சி கட்டிலில் ஏற்றியதே இவ்வித Fake News பரப்புரைகள் மற்றும் ஆர்எஸ்எஸ் பாஜக காவி(லி)க் கும்பலின் பின்புலத்தில் தான்!

    கடுமையான காலச் சூழல் இது! எதிரிகள் ஏந்துகின்ற அனைத்துவித ஆயுதங்களையும், உபாயங்களையும் நாமும் ஏந்துவோம்! செயல்முறைப் படுத்துவோம்!

    பெயருக்குத்தான் தவெக விஜய் ஆட்சி!
    நடப்பதோ பாஜக ஆர் எஸ் எஸ் பெற்றெடுத்த பிள்ளைகளின் (விஜய் – லாட்டரி கும்பல் ஆதவ் – மார்ட்டின் – லீமா ரோஸ்) ஆட்சிதான்! சமூக மாற்ற விரும்பிகளுக்கு கடும் சுமையான பணிகள் தான் காத்துக் கிடக்கின்றன!
    அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களை விழித்தெழச் செய்து, விடியலை ஏற்படுத்தித் தர வேண்டிய பொறுப்பும் கடமையும் நம்முடையதுதான்! பரந்து – விரிந்த ஐக்கிய முன்னணியைக் கட்டுவோம்! போர்முனையை கூர்மைப் படுத்துவோம்! அனைத்து வகைகளிலும் களம் காண்போம்! வெற்றி வாகை சூடுவோம்!

    திருச்சி போராட்டத்தில் தியாகப்பூர்வமாக கலந்து கொண்ட இருபால் அனைத்துத் தோழர்களுக்கும் எமது வீர வணக்கங்கள்!
    வாழ்த்துக்கள்!

  2. சனாதனத்திற்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கும் நடிகர் விஜய் அரசில் ‘சமூக நீதி’ அமைச்சராக பங்கேற்றுள்ள விசிக-வின் வன்னியரசும், முட்டுக்கொடுக்கும் ‘எழுச்சித் தமிழர்’ தொல் திருமாவும் இதற்கு என்ன வினை ஆற்றுகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்!

  3. தோழர்களின் வீரமிக்க போராட்டத்தை பாராட்டுகிறோம் சனாதன ஒழிப்பு குறித்து மக்களிடத்தில் புரியும்படி இன்னும் வீச்சாக பரவலாக கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உணர்கிறோம்

    பாசிச எதிர்ப்பு சனாதன ஒழிப்பு கொள்கையில் உள்ள கட்சிகள் அமைப்புகள் ஜனநாயக சக்திகள் ஒன்றாக திரட்ட வேண்டிய அவசியம் இந்த காலகட்டத்தில் தேவையாக உள்ளது என்பதை உணர்கிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here