கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம்!

ள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கோரியும், பள்ளி நிர்வாகத்தின் குற்றங்களுக்கு எதிராக போராடியவர்களையும் விடுதலை செய்யக் கோரியும் கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்க கோரியும் மக்கள் அதிகாரம் சார்பாக விழுப்பும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் அருகே போலீசின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் இன்று 11.8.22 காலை 11 மணிக்கு நடைபெற்றது.

தலைமை ஏற்று தோழர் ஏழுமலை நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையிடம் மூன்று முறை அனுமதி கேட்டும் அனுமதி மறுத்த நிலையில் தடை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதலில் சிறிது தூரம் ஊர்வலமாக முழக்கமிட்டதோழர்களை போலீசு அடாவடியாக தடுத்தது. பிறகு முழக்கமிடவும், பேட்டி கொடுக்கவும் தடுத்தது. போலீசின் அராஜக செயலை கண்டித்து சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

 

இதன் பிறகு போலீசு சில நிமிடங்களே பேச அனுமதித்தது பிற கட்சிகளுக்கு பொதுக் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளித்த நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்புக்கு மட்டும் ஜனநாயக விரோதமாக அனுமதி மறுக்கிறது என்றும் மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் குற்றத்தை மூடிமறைக்க போலீசு, மாவட்ட நிர்வாகம் கூட்டு சேர்ந்து நடத்திய சதிதான் கலவரத்திற்கு அடிப்படை காரணம்.

அமைதியாக போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பல அப்பாவிகளை சிறையிலடைத்து ஒடுக்குகிறது. அவர்களை வழக்கிலிருந்து அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென தோழர் காளியப்பன் கண்டித்து பேசினார். பல தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்து போலீசு கைது செய்தது. தோழர்கள் கொடி பதாகைகளை ஏந்தி கோரிக்கை முழக்கமிட்டனர். பிறகு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில துணைச் செயலாளர் தோழர் செழியன் தலைமை குழு உறுப்பினர் தோழர் மோகன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் விழுப்புரம் மாவட்ட செயலாளர் தோழர் ஏழுமலை பல்வேறு தோழர்கள் முன்னிலை வகித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தகவல்
தோழர் மோகன்
தலைமைக்குழு உறுப்பினர்.
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here