ஜெர்மன் ஹிட்லருக்கு யூதர்கள்! இந்தியா மோடிக்கு இசுலாமியர்கள்!


னது எதிரிகள் அனைவரையும் ஒழித்துக் கட்டுவதற்கு concentration camp என்ற பெயரில் நிரந்தர சிறைக் கூடங்களை நிறுவினார் ஹிட்லர்.

அதுபோல தனது எதிரிகள் அனைவரையும் ஒழித்துக் கட்டுவதற்கு திறந்தவெளி சிறைகளை கட்டிக் கொண்டிருக்கிறார் மோடி.

நிதி மூலதனத்தின் ஆகக் கேடான, இனவெறி பிடித்த கடிவாளமற்ற குதிரையாக வெறி பிடித்து அலைகிறது பாசிசம்.

ஜெர்மனியில் அது கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளாக யூதர்களுக்கு எதிரான பாசிச இனவெறியை முன்னிறுத்தி வளர்ந்தது.

இந்தியாவிலோ கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளாக முதல் சுற்றில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பாசிச மதவெறியை முன்வைத்து வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஜெர்மனியில் பாசிச கொடுங்கோலன் ஹிட்லர் யாரை  வெறுத்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் சிறப்பு சேவை மூலம், அனைத்து பிரிவினரையும் சிறைக் கொட்டடியில் கொண்டுவந்து ஒழித்துக் கட்டுவது அவனது வழிமுறை!

கம்யூனிஸ்டுகள், யூதர்கள், தொழிற்சங்கவாதிகள், சோசலிஸ்டுகள், பாதிரியார்கள் என்று அனைவரையும் ஒவ்வொருவராய் அடையாளப்படுத்தி சிறப்பு சிறையில் சித்திரவதை செய்து கொலை செய்தல் அவனது வாடிக்கை.

அந்த வழியில் பாசிஸ்ட் ஜெர்மனியின் ஹிட்லரையும் மிஞ்சிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சியின் இன அழிப்பு அரசியல்.

நாட்டில் 18 கோடி மக்கள் தொகை கொண்ட இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாகவும், தேச பக்தி இல்லாதவர்களாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து பொது சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தி இனஅழிப்புக்கு தயாராகிவருகிறது.

பாபர்மசூதி இடிப்பை ஒட்டி 1992 மற்றும் 93 ஆம் ஆண்டுகளில் எழுந்த வன்முறை வெறியாட்டங்களில் மும்பையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் உடமை பறிக்கப்பட்டு உயிர் கொலை செய்யப்பட்டனர்.

இந்துத்துவத்தின் சோதனைச்சாலையான குஜராத்தில் 2002ஆம் ஆண்டு ஒரே நாள் இரவில் 2000 இஸ்லாமியர்களை படுகொலை செய்து அவர்களின் பிணங்களின் மீது ஏறி பிரதமர் பதவியில் அமர்ந்தார் மோடி.

00000

“இனி ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று பகிரங்கமாக அறிவித்த ஹிட்லர் யூதர்களை அடியோடு அழிக்கவேண்டும் என்று முடிவு செய்து தினமும் சராசரியாக 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் விஷ வாயு கொடுத்து கொல்லப்பட்டனர்.

ஹிட்லரின் இன சுத்திகரிப்பு மற்றும் இன அழிப்பு அரசியலில் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் 60 லட்சம் பேர். ஹிட்லரின் படைப்பிரிவில் யூதர்களை கொள்வதற்கென்றே தனியாக ஒரு இலாகாவை உருவாக்கி ஐக்மன் என்ற கொலைவெறியனை நியமித்ததைப்போல், இந்தியாவில் அமித் ஷா மற்றும் ஆதித்யநாத் வகையறாக்கள் நியமிக்கப்பட்டு அந்த வேலையை கச்சிதமாக செய்து வருகிறார்கள்.

2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 8 ஆண்டுகளில் இஸ்லாமியர்களின் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது மாட்டுக்கறி உண்ணத் தடை என்பதில் துவங்கி மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று கொல்லப்பட்ட அக்லாக் முதல் ஜஹாங்கீர்புரியில் வீடு இடிக்கப்பட்டு நடுத்தெருவில் வீசப்பட்ட இஸ்லாமியர்கள் ஈறாக தனக்கு எதிராக அரசியல் பேசினார் என்ற ஒரே காரணத்திற்காக வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஆப்ரின் பாத்திமா வரை இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்து இனவெறித் தாக்குதல்கள், இனப்படுகொலை செய்வது அதிகரித்து கொண்டே வருகிறது.

படிக்க:

பாசிச பயங்கரவாதம் ஒரே நேரத்தில் அனைவர் மீதும் பாய்வது கிடையாது. வரலாற்றில் பல்வேறு அனுபவங்களை பெற்று நிலையாக தன்னை வளர்த்துக் கொண்டு வரும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கேடுகெட்ட இனவெறி பிடித்த, ஆக பிற்போக்கான பாசிசம் கம்யூனிஸ்டுகளையும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறுபான்மை மதத்தவர் மற்றும் இனத்தவரை எதிரிகளாக சித்தரித்து ஒழித்துக் கட்டுவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.

அந்த வகையில் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் நாத்திகர்கள், பார்ப்பன இந்திய தேசியத்தை எதிர்த்துப் போராடும் பல்வேறு தேசிய இனங்களைச் சார்ந்த மக்கள் அனைவரும் அவர்களது அழிப்பு பட்டியலில் வருகிறார்கள்.

பார்ப்பன (இந்து) மதத்தில் பார்ப்பன கும்பலின் மேலாதிக்கத்தை நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ள மறுக்கும் சூத்திரர்கள், பஞ்சமர்கள் மற்றும் பல்வேறு இந்துமத சீர்திருத்தவாதிகள் வழியை கடைபிடிக்கும் அனைவரையும் அடுத்தடுத்து பட்டியலில் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

“சேதமில்லா ஹிந்துஸ்தானம்தனை தேசமென்று கும்பிடடி பாப்பா” என்று பாடினான் பாரதி.

“பார்ப்பன மேலாதிக்கத்தை நிபந்தனையின்றி ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே இந்த தேசத்தின் குடிமகன்கள்” என்று கூச்சல் போடுகின்றனர் ஆர்எஸ்எஸ்-பாஜக பயங்கரவாதிகள்.

இது பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் முதல் சுற்று.

இந்தப் போராட்டத்தில் இன அழிப்புக்கு பலியாகிக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களுடன் துணையாக நின்று ஒன்றிணைந்து போராடாவிட்டால் அடுத்தடுத்து பலிகளுக்கு நாட்டை காவு கொடுக்கும் துரோகிகளின் பட்டியலில் நாமும் இணைந்து விடுவோம்.

எனவே வரலாற்றை மீண்டும் படித்து புரிந்து கொள்வோம் பாசிசத்தின் வளர்ச்சியை அதன் துவக்க கட்டத்திலேயே கருவறுக்க தயாராவோம். நமது ஒற்றுமையை (solidarity) இலட்சக்கணக்கில் திரண்டு பாசிசத்தை வீழ்த்த “மக்கள் மக்கள் மட்டுமே மகத்தான உந்து சக்தி” என்ற நம்பிக்கையை உருவாக்குவோம்.

  • சண்.வீரபாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here