அக்னிபத் திட்டம்: 4 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் பக்கோடா விற்க வேண்டுமா?

இந்திய ராணுவத்தில் சேர கடந்த நான்கு ஆண்டுகளாக கடுமையாக உடற்பயிற்சி செய்து தயாராகி வருகிறார் பீகாரை சேர்ந்த ரோகித் குமார். விவசாயத்தை தொழிலாக கொண்டது அவருடைய குடும்பம்.

இராணுவத்திற்கு கட் ஆப் மதிப்பெண்கள் தேவையில்லை என்பதால் தான் சிப்பாயாக மாறுவதே சிறந்தது என நினைத்தார். ஆனால் மோடி அரசு அறிவித்த அக்னிபத் திட்டத்தால் தன்னுடைய திட்டத்தில் ஒன்றிய அரசு மண்ணை அள்ளிப்போட்டுள்ளது என்கிறார். அவரது இத்தனை வருட உழைப்பு வீணாய் போயுள்ளாதால் தனது வாழ்க்கை நிச்சயமற்றதாகி விட்டதாக கருதுகிறார்.

”புதிய திட்டத்தின்படி நான்கு ஆண்டுகள் ராணுவத்தின் பணிபுரிவேன். அந்த காலத்தில் ரூபாய் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் பெறுவேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படலாம். அதன் பிறகு நான் பக்கோடா விற்க வேண்டுமா? அதற்கு நான் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்வதே நல்லது” என thewire தளத்திற்கு ரோகித் குமார் தெரிவித்துள்ளார்.

அக்னிபத் திட்டத்தின்படி நான்காண்டு காலம் முடிந்தவுடன் நிரந்தரப் பணியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதில் அக்னிபத் திட்டத்தில் பணிபுரிந்தவர்கள் 25 சதவீதம் பேரே ஆயுதப்படைக்கு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படவர். அக்னி திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்வோருக்கு முதலாண்டில் 4.76 லட்சம் சம்பளமாகவும் நான்காம் ஆண்டில் 6.92 லட்சம் சம்பளமாகவும் மேம்படுத்தப்படும் என்கிறார்கள்.

பீகாரை பொறுத்தவரையில் ராணுவத்தில் சேர விரும்புவோர் அதிகம். அதற்காக பீகாரின் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் குழுக்களாக அதிகாலையிலிருந்தே உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். ராணுவத்தில் பணிபுரிவதை கௌரவமாகவும் நல்ல வருமானம் கிடைக்கும் என்பதாலேயே அதற்கு செல்கிறார்கள்.

தனியார் நிறுவனங்களில் என்ஜினியரிங் படித்து முடித்தவர்களுக்கே 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைப்பதில்லை. நிரந்தர வேலைக்கும் ஆப்படிக்கும் விதமாக ஆலைகளில் நீம்(NEEM) திட்டத்தை கொண்டு வந்துள்ளது மோடி அரசு. வேலை தேடும் இளைஞர்கள் வேறு எங்கு செல்வார்கள். இதுதான் பீகார் இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபத்தை உருவாக்கி உள்ளது.

சென்னையில் நடந்த போராட்டத்தில் பேசிய இளைஞர் ஒருவர் தாங்கள் 2020ஆம் ஆண்டு உடற்தகுதி தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த இரண்டு வருடமாக தேர்வு நடத்தாமல் தள்ளிப்போட்டு வந்ததாகவும், தற்போது அக்னிபத் திட்டம் அறிவித்ததன் மூலம் எங்கள் வாழ்க்கையை பறித்துள்ளது ஒன்றிய அரசு என கோபம் பொங்க பேசினார்.

சென்னையில் அக்னிபத்திற்கு எதிராக போராடும் இளைஞர்கள்

போராட்டம் பெரிய அளவில் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆளும் பாசிச மோடி அரசு பின் வாங்க மறுத்து வருகிறது. ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா; “அக்னிபத் திட்டத்தில் 4 வருடம் முடித்த பிறகு விமானப் போக்குவரத்துத் துறையில் வேலை வழங்குவேன் என்று கூறியுள்ளார். ஏர் இந்தியா விமானத்தை டாடாவிடமும், விமானநிலையங்களை அதானிடமும் விற்று வருவதை மறந்து பேசுகிறார் போலும்.

மற்றொரு பாஜக தலைவர் ஒருவர் அக்னிபத் வீரர்களுக்கு, பாஜக அலுவலகத்தில் பாதுகாவலர் வேலை வழங்குவேன் என்று கூறியுள்ளார். இன்னொருவர் அக்னிபத்தில் துணி துவைக்கவும், முடி திருத்தம் செய்யவும் கற்றுத்தருவோம் என்கிறார். இவ்வளவு தான் இவர்களின் தேசப்பற்று முகமூடி. இராணுவ வீரர்களை தங்கள் வீட்டு வேலை ஆட்களை போல் நினைக்கிறார்கள்.

லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி ” உயிர் தியாகம் செய்யும் அக்னி வீரர்களுக்கு 1 கோடி வழங்கப்படும்” என வீரர்களின் உயிருக்கு விலை பேசுகிறார்.

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்து வருகிறது மோடி அரசு. 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று அறிவித்த அடுத்த நாளே அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்களை ஒப்பந்த ஊழியர்களாக மாற்றி அவர்களின் வாழ்க்கையை சூறையாடி உள்ளது மோடி அரசு.

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக சட்டங்களை மாற்றுவதும் பணமாக்கல் திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது என தேச விரோத மக்கள் விரோத செயல்களை செய்து வருகிறது பாசிச மோடி அர.சு இளைஞர்களின் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் கடைசியாக இருந்த வாய்ப்பையும் மோடி அரசு தட்டிப் பறித்துள்ளதை பொறுத்துக் கொள்ளாமல் வெடித்த போராட்டமே!

இளைஞர்களே, மக்களே இதே நிலை தொடர்ந்தால் சொந்த நாட்டிலேயே நம்மை பிச்சைக்காரர்களாக்கிவிடும் பாசிச பாஜக அரசு. அதனை முறியடிக்க ஒன்றிணைந்து போராடுவோம். கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி மோடி அரசை வீழ்த்துவோம்.

  • நந்தன்

மூலம்: THEWIRE.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here