இந்த உரையானது புதிய ஜனநாயகப் புரட்சி நடந்து முடிந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தோழர் மாவோ ஆற்றிய உரையாகும். புதிய ஜனநாயகப் புரட்சி என்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நாட்டின் விடுதலையையும்,, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக மக்களின் விடுதலையையும் நோக்கமாக கொண்டது. அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு கொண்ட தேசியப் புரட்சி, நிலப்பிரபுத்துவ உறவுகளை அறுத்தெறியும் ஜனநாயகப் புரட்சி இரண்டையும் உள்ளடக்கியதுதான்.
சீனாவைப் போன்ற அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பை கொண்ட இந்தியாவில் இன்னமும் புதிய ஜனநாயகப் புரட்சி நடந்தேறவில்லை. அதற்கு முக்கிய முன் நிபந்தனையாக நாடு தழுவிய அளவில் ஒரு கட்சித் தலைமையின் கீழ் செயல்பட வேண்டியது அவசியமாகின்றது. அதனை சாதிப்பதற்கு இன்னமும் பல மைல் தூரம் செல்லவேண்டியுள்ளது.
அதற்கு மாறாக ஒரு மாநிலத்தில் ஒரு குழுவாக செயல்படுகின்ற சிலர் மார்க்சிய லெனினிய சொல்லாடல்களை வீரியமாக பேசுவதன் மூலமாகவே தாங்கள் ‘புரட்சியாளர்கள்’ என்று அகநிலையில் கருதிக் கொள்கின்றனர்; செஞ்சட்டை அணிவது; வீர தீரமாக முழக்கங்கள் போடுவது; இரங்கல் கூட்டங்களிலும் உரைவீச்சுகளில் தெறிக்க விடுவது போன்றவை தான் புரட்சிகர நடவடிக்கை என்று தங்களையும் ஏமாற்றிக்கொண்டு, சொந்த அணிகளையும் ஏமாற்றித் திரிகின்றனர்.
ஒரு எடுத்துக்காட்டாக சில தினங்களுக்கு முன்பு மதுரையில் இயற்கை எய்திய முன்னாள் ம.க.இ.க தோழர் கதிரவன் இறப்பில் கலந்து கொண்டு உரையாடிய சில அதிமேதாவிகள் உண்மைக்கு எதிராகவும், பொய்களை சரம் சரமாக திரித்தும் பேசினர்.
அதிகார வர்க்கத் திமிருடன் சொந்த அணிகளை பல்வேறு முத்திரை குத்தி நடவடிக்கை எடுத்து தெருவில் விட்ட ஒரு சிறு கும்பலின் அதிகார வெறி- பதவி வெறி தமிழகத்தில் 40 ஆண்டு காலம் பிளவுபடாத அமைப்பில் பிளவை உருவாக்கியது.
இதை புரிந்து கொள்ள முடியாத சிலர் தனிப்பட்ட முறையில் சில பேரிடம் அபிமானம் கொண்டு பின்னால் சென்றதும், தற்போது அவர்கள் முன்வைக்கின்ற பித்தலாட்டமான கருத்துக்களை ஏற்றுக் கொண்டு செயல்படுவதும், சாவு வீட்டில் அமர்ந்து கொண்டு நடந்த வரலாற்று நிகழ்வுகளை திரித்து அரசியலாக பேசுவதையும் கூட ‘புரட்சிகரமான தன்மை’ கொண்டது என்று கருதுகிறார்கள்.
ஒரு பொய்யை மீண்டும், மீண்டும் சொல்வதன் மூலம் அதை உண்மையாக்கி விட முடியும் என்ற பாசிச கோயாபல்ஸ் பாணியில் அமைப்பில் நடந்த பிளவை பற்றி பல்வேறு பித்தலாட்டங்களை கட்டவிழ்த்து விடுவதும், நடந்த உண்மைகளை சொந்த அணிகளுக்கு மறைத்து எய்த்துக்கொண்டு திரிவதும், அரசியலற்ற, சித்தாந்தமற்ற லும்பன் கும்பல் தங்களைத் தாங்களே ‘புரட்சியாளர்கள்’ என பொதுவெளியில் அறிவித்துக் கொண்டு வலம் வருவதும் அதிகரித்துள்ள சூழலில் கட்டுரையின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
படிக்க:
♦ செப்டம்பர் 9: தோழர் மாவோ நினைவு தினத்தில் உறுதி ஏற்போம்!
♦ மக்களுக்கு தொண்டு செய்க! – தோழர் மாவோ.
இந்த உரையில் முக்கியமாக தோழர் மாவோ முன்வைக்க முன்வருவது, புரட்சிக்கு பின்னர் 20 ஆண்டுகள் கழித்த பின்னரும் சோசலிசத்தை நோக்கி முன்னேறி செல்வது என்பது பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் பரந்து விரிந்த மக்கள் திரளை ஒற்றுமைப் படுத்த வேண்டும் என்பதை உத்தரவாதப்படுத்துவதை நோக்கி செல்கிறது.
ஆனால் இங்கே செயல்படுகின்ற பல குட்டி முதலாளித்துவ அற்பவாத தலைவர்கள் மற்றும் குறுங்குழுவாத மனநிலையைக் கொண்ட கம்யூனிச பிழைப்புவாதிகள் ஒரு குழுவுக்கு தலைமை தாங்க துவங்கிய உடனே ஒட்டுமொத்த நாட்டிற்கும், புரட்சிக்கும் தலைமை தாங்கி விட்டதாக தலைக்கனத்துடன் திரிகின்றனர்.
நாடு தழுவிய அளவில் பாசிச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்ற சூழலில் கம்யூனிசத்தை ஒழித்துக் கட்டுகின்ற எதிர்ப்பு புரட்சி சித்தாந்தமான ஏகாதிபத்திய முதலாளித்துவம் இந்திய ஒன்றிய மண்ணில், ஆரிய-பார்ப்பனியம் என்று முன் நிறுத்தப்படுகின்ற பார்ப்பனப் பாசிசம் தலைவிரித்தாடுகின்ற சூழலில் பாசிச எதிர்ப்பு என்பதை மிகவும் வெட்டி சுருக்கி ஒரு கும்பலின் தலைமையிலான செயல்பாடுகள் தான் பாசிச எதிர்ப்பு-புரட்சிகர நடவடிக்கை என்பது போல மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்வது; சமூக ஊடகங்களில் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்வது ஆகியவற்றின் மூலம் சொந்த அணிகளை பிரமையில் ஆழ்த்துகின்றனர்.
142 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய துணைக்கண்டமான இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மாநிலங்களில் செயல்படுகின்ற மார்க்சிய லெனினிய அமைப்புகளில் சரியான கண்ணோட்டத்தில் செயல்படுகின்ற குழுக்களிடையே சித்தாந்த ஒற்றுமையை உருவாக்குவதும், குறைந்தபட்ச செயல் திட்டத்தின் கீழ் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கட்டியமைப்பதும், அதன் மூலம் கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டத்தை கட்டியமைப்பதும் தான் உடனடி கடமையாக உள்ளது.
படிக்க:
♦ கம்யூனிசத்தின் பெயரால் நடக்கும் பிழைப்புவாதம்!
♦ ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினனுக்கு இருக்க வேண்டிய எட்டு முக்கிய அம்சங்கள் | லியூ ஷாவோகி
இவ்வாறு பாசிச எதிர்ப்பு முன் வைக்கப்படுவதாலேயே புதிய ஜனநாயகப் புரட்சியை கைவிட்டு விட்டார்கள் என்ற ‘அதி தீவிர இடதுசாரிகளின்’ விமர்சனங்களும், ஆளும் வர்க்கத்துடன் கூட்டு சேரத் தயாராகி விட்டார்கள்; இனி புரட்சியை நடத்தப் போவதில்லை என்றெல்லாம் அகநிலை கருத்துடன் செயல்படுகின்ற கட்சி சார்ந்த, சாராத குறுங்குழுவாத போக்குடைய, பல்வேறு கம்யூனிசப் போர்வையில் உலவுகின்ற சித்தாந்த ஓட்டாண்டிகளை புரிந்துக் கொள்வதற்கும் இந்தக் கட்டுரை உதவும் என்பதால் இதனை தொடர் கட்டுரையாக வெளியிடுகிறோம்.
000
நான் சொல்லப் போவது எல்லாம் பழைய விசயங்களே, நீங்கள் அறிந்தவையே. எதுவும் புதிதல்ல. ஒற்றுமை பற்றியே நான் பேசப் போகின்றேன். ஒற்றுமையை கட்டுவது என்பது மேலும் பல மகத்தான வெற்றிகளை பெறுவதற்காகவே.
சோவியத் திரிபுவாதிகள் இப்போது நம்மை தாக்குகின்றார்கள். டாஸ் (TASS) இல் ஒலிபரப்பாகும் சில நிகழ்ச்சிகளோ மற்றவையோ, வாங் மிங்கின் கட்டுரை, கொம்யூனிஸ்ட் இல் வெளியான நீண்ட சொற்சித்திரம்-இவையாவும் ‘நமது கட்சி இனி மேலும் ஒரு பாட்டாளி மக்கள் கட்சி அல்ல என்றும், குட்டி முதலாளித்துவ கட்சி’ என்றும் கூறுகின்றன. நாம் ஊடுருவ இயலாத கெட்டித் தன்மையிலான ஒரு ஆட்சி முறையை திணித்து விட்டதாகவும், தொடக்க காலத்துக்கு திரும்பி விட்டதாகவும்-அதாவது நாம் பின்னோக்கிப் போய் விட்டதாகவும் கூறுகிறார்கள்.
கெட்டித்தன்மையிலான ஆட்சி முறை என்று அவர்கள் எதை கூறுகிறார்கள்? அது இராணுவ அதிகார வர்க்க ஆட்சி என்று கூறுகிறார்கள். ஜப்பானிய மொழியில் அது ஒரு ‘முறை’, சோவியத் மொழியில் ‘இராணுவ அதிகார வர்க்க சர்வாதிகாரம்’ என்று பொருள். நமது அரசு ஊழியர்களில் பல இராணுவ வீரர்களை காணும் அவர்கள் நம்மை ‘இராணுவம்’ என்கிறார்கள். ‘அதிகார வர்க்கம்’ என்ற சொல் எதைக் குறிக்கின்றது. என்-லாய். காங் ஷெங், சென் போ-டா, நான் உட்பட்ட ‘அதிகார வர்க்கத்தினரை’க் குறிப்பதாக நான் நினைக்கின்றேன். ஒரு சொல்லில் சொல்ல வேண்டுமெனில் இராணுவத்தினர் அல்லாத நீங்கள் அனைவரும் அதிகார வர்க்க கூட்டணியை சேர்ந்தவர்கள் என்றும், ஒட்டுமொத்தமாக நாம் அனைவரும் ‘இராணுவ அதிகார வர்க்க சர்வாதிகாரம்’ என்றும் சொல்கிறார்கள்.
படிக்க:
அவர்கள் பேசட்டும். அவர்கள் விரும்புவதையெல்லாம் பேசட்டும். ஆனால் அவர்கள் சொற்களில் ஒரு குணாதிசயம் உண்டு; அவர்கள் நம்மை முதலாளித்துவ கட்சி என முத்திரை குத்துவதை தவிர்க்கிறார்கள். அதற்கு பதிலாக ‘குட்டி முதலாளி வர்க்க கட்சி’ என்று சொல்கின்றார்கள். நாம் என்ன சொல்கின்றோம்? அவர்களுடையது முதலாளித்துவ சர்வாதிகாரம் என்றும், அவர்கள் முதலாளித்துவ சர்வாதிகாரத்தை மீண்டும் நிறுவுகிறார்கள் என்றும் சொல்கின்றோம்.
வெற்றியைப் பற்றி நாம் பேச வேண்டுமெனில் அது வெற்றியை அடையும் வண்ணம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் பரந்து விரிந்த மக்கள் திரளை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்பதை நாம் உத்தரவாதப்படுத்த வேண்டும். புரட்சியை மேலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த புரட்சியில் இன்னும் முற்று பெறாத இன்னும் முன்னெடுத்த்ச் செல்லப்பட வேண்டிய விசயங்கள் பல இருக்கவே செய்கின்றன; உதாரணமாக போராட்டம்-விமர்சனம்-மாற்றம். இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு நாம் வேறு ஒரு புரட்சியை நடத்த வேண்டியது இருக்கலாம்.
நமது மூத்த தோழர்களில் பல தொழிற்சாலைகளுக்கு சென்று நேரடியாக பார்வையிட்டார்கள். எதிர்காலத்தில் உங்களுக்கான வாய்ப்புகள் வரும் போது நீங்களும் கீழ்மட்டங்களுக்கு சென்று நேரடியான அனுபவம் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். பல்வேறு தொழிற்சாலைகளில் பிரச்சனைகளை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும். மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியை தொடர்ந்து நடத்த வேண்டியது அவசியம் என்பது தெரிகின்றது. நமது அஸ்திவாரம் இன்னும் உறுதிப்படவில்லை. எனது சொந்த அனுபவம் என்னவெனில் ஓரளவு பெரும்பான்மையான தொழிற்சாலைகளில், அனைத்து தொழிற்சாலைகளிலும் அல்ல, ஆக பெரும்பான்மையான தொழிற்சாலைகளிலும் அல்ல, தலைமை என்பது உண்மையான மார்க்சியவாதிகளின் கைகளில் இல்லை. பாட்டாளி மக்களின் கைகளிலும் இல்லை. கடந்த காலத்தில் தொழிற்சாலைகளில் தலைமைப் பொறுப்புகளில் நல்ல மனிதர்களுக்கு பஞ்சமில்லை.
நல்லவர்கள் இருந்தார்கள். கட்சிக்குழுச் செயலாளர்களில், உதவிச் செயலாளர்களில் குழு உறுப்பினர்களில் நல்ல மனிதர்கள் இருந்தார்கள். கிளைச் செயலாளர்களிலும், நல்ல மனிதர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் லியு ஷாவோகியின் பழைய பாதையைத்தான் பின்பற்றினார்கள். அவர்கள் பொருளாதார நலன்களுக்காகவே இருந்தார்கள். லாபத்தையே முதன்மை நோக்காகக் கொண்டவர்கள், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்கள் வளர்க்கவில்லை. ஆனால் போனஸ் போன்ற நலன்களை முன்வைத்து இயங்கினார்கள். இப்போது சில தொழிற்சாலைகள் இவர்கள் விடுதலை செய்கின்றன. அடிப்படையிலான தலைமை பொறுப்பில் இவர்களையும் சேர்க்கின்றன. சில தொழிற்சாலைகள் இந்த வேலையை இன்னும் செய்யவில்லை. ஆனால் தொழிற்சாலைகளில் மோசமானவர்கள் இருக்கின்றார்கள். உதாரணமாக “பிப்ரவரி 7 தொழிற்சாலை”. இது சாங் சின் டீயனில் உள்ள ரயில் எஞ்சின் பெட்டிகள், பராமரிப்பு தொழிற்சாலை. இதில் 8000 தொழிலாளர்கள் கொண்ட மிகப்பெரிய தொழிற்சாலை. இவர்களது குடும்பத்தினரையும் சேர்த்தால் மேலும் பல்லாயிரக்கணக்கானவரை கணக்கிட வேண்டும். கடந்த காலங்களில் கோமிங்டாங்குக்கு அங்கே ஒன்பது மாவட்டக் கிளைகள் இருந்தன. சான்மின் சூ-யி இளைஞர் சங்கத்திற்கு மூன்று அமைப்புகளும், “சிறப்பு வேலைகளுக்கு” என்று சொல்லப்பட்ட அமைப்புகள் எட்டும் இருந்தன. ஆயினும் இதில் கவனமான பகுப்பாய்வு தேவை. ஏனெனில் காலகட்டத்தில் கோமிங்டாங்கில் இணைய மறுப்பது இயலாத ஒன்றாக இருந்தது!. இவர்களில் சில மூத்த தொழிலாளர்கள்.
மூத்த தொழிலாளர்கள் அனைவரையுமே விலக்கி வைக்க முடியுமா? அது நடக்காது! மோசமான நிகழ்வுகளை சாதாரண நிகழ்வுகளில் இருந்து வேறுபடுத்தி பாருங்கள். ஒரு சிலர் கோமிங்டாங்கில் பெயரளவுக்குத்தான் உறுப்பினராக இருந்தார்கள். அவர்கள் சில கட்டாயத்தின் பேரில் கட்சியில் சேர்ந்தவர்கள். இது போன்றவர்களிடம் நாம் பேசுவது அவசியம். அதிகம் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இருந்தார்கள். கூடவே கழுத்து வரை மூழ்கி போனவர்கள் சிலரும் இருந்தார்கள். மோசமான செயல்களில் இறங்கியவர்களும் இருந்தார்கள். அவர்களது மாறுபட்ட சூழ்நிலைகளை நீங்கள் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். மோசமான செயல்களை செய்தவர்களையும் கூட வேறுபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது. அவர்கள் வெளிப்படையாக இருந்தால் நாம் தாராளமாகவே நடந்து கொள்ளலாம். கடுமையாக நடந்தால் நாமும் கடுமையாக தான் நடந்துக் கொள்ள வேண்டும். சரியான சுய விமர்சனத்தில் அவர்கள் இறங்கினால் அவர்களது பணியை தொடர அனுமதிப்போம். ஆயினும் தலைமைப் பொறுப்புக்கு பொறுப்புகளில் அவர்களுக்கு இடம் தரக்கூடாது. அவர்களது வேலையை தொடர நாம் அனுமதிக்காவிட்டால் அவர்களது வீடுகளில் என்னதான் செய்வார்கள்? அவர்களது மகன்களும், மகன்களும் என்னதான் செய்வார்கள். மேலும் மூத்த தொழிலாளர்கள் பலர் திறன்மிகு அனுபவம் உள்ளவர்கள். அவர்களின் திறமை உயர்வானது என்று சொல்ல முடியாது என்றாலும் கூட
– தொடரும்.
புதிய ஜனநாயகம் தினசரி






