தோழர் மாசேதுங் நினைவுநாள் செப்டம்பர் 9 (1893- 2021)
தோழர் மாசேதுங் நினைவுநாளை ஒட்டி மக்களுக்குத் தொண்டு செய்க என்ற இந்த தலைப்பை ஒளி நாடா முறையில் வெளியிடுகிறோம்!
பொதுவாக கம்யூனிசத்தை ஆதரிப்பவர்கள் அனைவரும் கம்யூனிஸ்டுகள் ஆகிவிடுவதில்லை. கம்யூனிஸ்ட் களிலேயே பலவிதமான, பல ரகமான கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். சொல்லுக்கும் செயலுக்கும் முரணற்ற வகையில் வாழ்ந்து முன்னுதாரணமாக செயல்படும் கம்யூனிஸ்டுகளை மக்கள் எப் போதும் மதித்து நிற்கிறார்கள். ஆனால் ஊருக்கு உபதேசம் செய்து விட்டு சொந்த வாழ்க்கையில் அதற்கு நேரெதிராக வாழ்கின்ற இரட்டை வாழ்க்கை மனிதர்களை எப்போதும் சந்தேகத்துடன் தான் அணுகுகிறார்கள்.
இதனால் இவர்களின் தலைமையை ஏற்கவும் அவர்கள் வழிகாட்டுதலின் கீழ் இயங்கவும் மக்கள் தயாராக இருப்பதில்லை. இதை உணராமல் மக்களின் மீது குறை கூறிக்கொண்டு தன்னை மிகப்பெரிய தலைவர்களாக கருதும் தலைவர்களின் துரோகத்தனமும் அணிகளின் தியாகமும் கொண்டதுதான் இந்திய கம்யூனிச இயக்க வரலாறு. எனவே மக்களுக்கு தொண்டு செய்வதில் ஒரு கம்யூனிஸ்டின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த ஒளி நாடா!
கேளுங்கள்! பகிருங்கள்!
தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.