- நிலைமைகள் சதா சர்வமும் மாறிக்கொண்டிருக்கின்றன. நமது சிந்தனையை புதிய நிலைமைக்கு இசைவாக்க வேண்டுமானால் நாம் பயில வேண்டும். மார்க்சியத்தை ஒப்பீட்டு வகையில் நன்கு கிரகித்து தமது பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்பவர்கள் கூட பயின்று கொண்டே இருக்க வேண்டும். புதியவற்றை கிரகித்துக் கொள்ள வேண்டும். புதிய பிரச்சனைகளை ஆராய வேண்டும்.
- உலகில் விடயங்கள் சிக்கலானவையாகவும், பல்வேறு கூறுகளால் நிர்ணயிக்கப் படுபவையாகவும் இருக்கின்றன. எனவே பிரச்சனைகளை நாம் ஒரு அம்சத்திலிருந்து மட்டுமல்ல. பல்வேறு அம்சத்திலிருந்தும் நோக்க வேண்டும்.
- ஒரு மகத்தான புரட்சிகர இயக்கத்துக்கு வழிகாட்டும் எந்த ஒரு அரசியல் கட்சியும் புரட்சிகர தத்துவம், வரலாற்று அறிவு, நடைமுறை இயக்கம் பற்றிய ஒரு ஆழ்ந்த விளக்கம் ஆகிய வெற்றி இல்லாவிட்டால் அதை வெற்றிக்கு வழி நடத்துவது சாத்தியமாகாது.
- சரியான கடமை, சரியான கொள்கை, சரியான வேலைகள் ஆகியன ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொதுமக்கள் கோரிக்கைகளுடன் எப்போதும் இசைவாக இருக்கும். பொதுமக்களுடன் நமது தொடர்பை பலப்படுத்துவதாக இருக்கும். தவறான கடமை, தவறான கொள்கை, தவறான வேலை ஆகியவை குறிப்பிட்ட சமயத்தில் குறிப்பிட்ட இடத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு எப்பொழுதும் பொருந்தாமல் இருப்பதோடு அவர்களிடமிருந்து நம்மை தனிமைப்படுத்தியும் விடும். வரட்டுவாதம், அனுபவவாதம், கட்டளை வாதம், வால்வாதம், இருமை வாதம், அதிகார வாதம், வேலையில் செருக்கு மனோபாவம் ஆகியவை எப்பொழுதும் தீமையானவை, சகிக்க முடியாதவை இந்த நோய்களால் பாதிக்கப்பட்ட எவரும் அவற்றை திருத்திக் கொள்ள வேண்டும் காரணம் இது பொதுமக்களிடமிருந்து நம்மை தனிமைப்படுத்தி விடும்.
- கட்சிக்குள் பல்வேறு விதமான கருத்துகளுக்கு இடையிலும் இடையறாது எதிர்ப்பும் போராட்டமும் நிகழ்கின்றன. இவை சமுதாயத்தில் வர்க்கங்கங்களுக்கு இடையிலும், புதியவை-பழையவை இரண்டுக்கும் இடையிலும் உள்ள முரண்பாடுகள் கட்சிக்குள் பிரதிபலிப்பதே ஆகும். கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லாவிட்டால் அவற்றை தீர்ப்பதற்கான சித்தாந்த போராட்டங்கள் இல்லாவிட்டால் கட்சியின் வாழ்வு நின்றுவிடும்.
– மாவோ.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்
ஒன்பதாவது மத்தியக் குழுவின்
முதலாவது பிளீனக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
ஏப்ரல்–28, 1969
பாகம்-3.
மற்றவர்களும் கூட நம்மை தாக்கக் கூடும். ஆனால் நமது எல்லையைத் தாண்டி நாம் போரிடக் கூடாது. நமது எல்லையை தாண்டி நாம் போரிட மாட்டோம். நம்மை யாரும் எரிச்சலூட்ட முடியாது என்று சொல்கிறேன். நீங்கள் எம்மை ‘வா’ என அழைத்தாலும் நாங்கள் வரமாட்டோம். ஆனால் நீங்கள் வந்து எம்மை தாக்கினால் நாங்கள் தகுந்த பதிலடி கொடுப்போம். நீங்கள் எம்மை எந்த அளவுக்கு தாக்குகிறீர்கள் என்பதை பொறுத்து எங்கள் பதிலடி இருக்கும். சிறிய அளவிலா? பெரிய அளவிலா? சிறிய அளவிலான தாக்குதல் எனில் நாங்கள் எல்லைப்புறத்திலேயே நின்று போரிடுவோம். அதுவே பெரிய அளவிலான தாக்குதல் எனில் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
சீனா ஒன்றும் சிறிய நாடல்ல. சீனாவில் எடுப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் அவர்கள் நம்மைத் தாக்க வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நாம் இந்த உலகம் முழுமைக்கும் தெளிவாக தெரிவிப்போம் – நமது மண்ணுக்கான உரிமை நமக்கு இருக்கின்றது என்பதையும், அவர்கள் நமது மண்ணை ஆக்கிரமிப்பாளர்கள் எனில் அதுவே நமது பெரும் சாதகமான நிலையாக இருக்கும், அப்போது நாம் உரிமையோடு சாதகமான நிலையிலும் இருப்போம். அவர்கள் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டிருப்பார்கள், அவர்களுடன் போரிடுவது எளிதாக இருக்கும். விமானங்கள், டேங்குகள், கவச வாகனங்கள் – இவற்றை சமாளிப்பது கடினமானதல்ல என்று எல்லா இடங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற வேண்டுமெனில் நமது பக்கம் அதிகமான மனித சக்தி வேண்டும் என்பது உண்மை இல்லையா? அனைத்து தரப்பு மக்களையும் திரட்டுவோம். அவர்கள் எந்த மலைச்சிகரத்தில் இருந்தாலும் சரி, எந்த மாகாணத்தில் இருந்தாலும் சரி, வடக்கே இருந்தாலும் சரி, தெற்கே இருந்தாலும் சரி. எது சரியானது? அதிகமான மக்களை ஒன்று திரட்டுவதா? குறைந்த மக்களை ஒன்று திரட்டுவதா? அதிகமான மக்களை ஒன்று திரட்டுவதே எப்போதும் சிறந்தது. சிலருக்கு இதில் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் இது எதிரிக்கும் நமக்குமான உறவு குறித்த பிரச்சனை அல்லவே! மிக கறாரான சொற்களில் சொல்ல வேண்டுமெனில் யாங் டே- சிக்கும், வாங் சியாவோ-யுவுக்கும் இடையிலான உறவு பின்னர் குறிப்பிட்ட உறவு வகையைச் சேர்ந்தது என நான் கருதவில்லை. உங்கள் இருவருக்குமான உறவு என்பது எமக்கும் எதிரிக்குமான உறவா அல்லது மக்களுக்குள்ளேயே இருக்கின்ற உறவா? எனது கருத்து என்னவெனில் அது மக்களிடையே நிலவும் வெறும் வாக்குவாதம் என்பது தான். மையம் கூட அதிகார வர்க்கத் தன்மையுடன் தான் நடந்து கொள்கிறது. உங்களைப் பற்றி போதுமான கவனம் செலுத்தவில்லை நீங்களும் விஷயத்தை மையத்தின் கவனத்திற்கும் கொண்டு வரவில்லை. ஷான்டுங் ஒரு பெரிய மாகாணம். அங்கேயும் மக்களுக்கிடையே முரண்பாடுகள் நிலவுகின்றன. இது பற்றி பேசுவதற்கு இதுவே நல்ல தருணம் என்று உங்களுக்கு தெரியவில்லையா? கிழக்கு சீனாவிலும் கூட மக்களிடையேயான முரண்பாடுகள் என்ற பிரச்சனை இருப்பதாகவே நான் நினைக்கின்றேன். இதே நிலைமைதான் நீங்கள் ஒரு கோஷ்டியை ஆதரிக்கின்றீர்கள், நான் ஒரு கோஷ்டியை ஆதரிக்கின்றேன்.
படிக்க:
ஆனால் இந்த இடைவிடாத சண்டைக்கு என்ன அவசியம் வந்தது. யுனானிலும், க்லீசெள, செசுவான் ஆகிய பகுதிகளிலும் பிரச்சனை உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனை உள்ளது. ஆனால் நிலைமை கடந்த வருடத்தையும், அதற்கு முந்தைய வருடத்தையும் விட சிறப்பாகவே உள்ளது. தோழரே, உங்களை சுஷி-யு என்று அழைக்கின்றார்கள் இல்லையா? கடந்த வருடத்திற்கு முந்தைய வருடம் நாம் ஷாங்காயில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இருந்த போது நிலைமை சற்றே முன்னேறியுள்ளது. நான் ஒட்டுமொத்த நிலைமையையும் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றேன். உங்கள் நான்கிங்கில் ‘சிவப்பு தலைமையகம்’ என்ற ஒன்று தலைதூக்கியது. வேலைகளில் இறங்கினோம் அதன் பலனாக அவர்கள் ஒத்துழைப்பதாக முடிவு செய்தார்கள், இல்லையா? ‘ஆகஸ்ட் 27’, ‘சிவப்புத் தலைமையகம்’ ஆகியன இறுதியில் ஒத்துழைப்பு தரவில்லையா?
முக்கியமான பிரச்சனை என்பது நமது வேலைகள் குறித்து தான் என்று நான் நம்புகிறேன். இதற்கு முன்பே நான் இந்த இரண்டு வாக்கியங்களை கூறியிருக்கின்றேன் அல்லவா? உள்ளூர் பிரச்சனைகளுக்கான தீர்வு இராணுவத்திடம் உள்ளது. இராணுவத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வு அரசியல் வேலைகளில் தான் உள்ளது. வாழ்விலும் சாவிலும் தீர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கான தீவிர பகைவர்கள் அல்ல நீங்கள். அப்படி இருக்க ஏன் வருந்துகின்றீர்கள். தனிப்பட்ட நன்றியுணர்வோ, வெறுப்புணர்வோ, எதுவாயினும் அதற்கு அத்தனை முக்கியத்துவம் தர அவசியமில்லை.
நீங்கள் நிரந்தரமான எதிரிகளாக இருப்பதற்கு உங்கள் கடந்த கால வாழ்க்கையிலோ இன்றைய வாழ்க்கையிலோ எந்த காரணமும் இல்லை என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஏதோ சண்டையிட்டுக் கொண்டீர்கள், உங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தது. உங்களை சிலர் விமர்சித்தார்கள் அல்லது எதிர்த்தார்கள். நீங்கள் எதிர் தாக்குதல் நடத்தினீர்கள். விளைவு முரண்பாடு தலைதூக்கியது. உங்களுக்கு எதிரானவர்கள் எல்லோரும் மோசமானவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. “இவர்களை தூக்கியெறிய வேண்டும்” என்று பீகிங் விரும்பியவர்களின் ஷீஃபூ-சியும் ஒருவர். இவர் பின்னர் இவ்வழியை பின்பற்றினார். தன்னை தூக்கியெறிய விரும்பிய அமைப்புகளிடம் அவர் கூறினார். “உங்களிடம் எந்த தவறும் இல்லை. மேலும் என்னை ஆதரிப்பவர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை!.”
நான் சொல்வது எல்லாம் முன்பே சொன்னதுதான் – மாபெரும் வெற்றிகளை அடைய வேண்டுமெனில் ஒற்றுமையை கட்டுங்கள். இதில் உறுதியான உள்ளடக்கம் உள்ளது. நாம் என்ன செய்யப் போகின்றோம்? உறுதியான வெற்றிகள் என்று எதைச் சொல்கின்றோம்? மக்களை ஒன்றுபடுத்த என்ன செய்யப் போகின்றோம்?.
– தொடரும்…
புதிய ஜனநாயகம் தினசரி







