இந்தியாவை அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் பல்வேறு ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் காலனியாக மாற்றி வருகின்ற ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் போலியான தேசபக்தியை முன்வைத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
பாசிச பாஜகவின் பிதாமகர்களான ஆர்எஸ்எஸ் எப்போதுமே நாட்டுப்பற்றுடன் அந்நிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவோ, அன்னிய மூலதனத்திற்கு எதிராகவோ போராடியது கிடையாது என்ற போதிலும், இந்தியாவை மிகவும் நேசிப்பதாகவும், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ப்பதற்கு தாங்கள் பாடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் கதையளந்துக் கொண்டுள்ளனர்.
“போலி தேசபக்தி, அசலில் பாசிச பயங்கரவாதம்” இரண்டையும் உள்ளடக்கிய வீரிய ஒட்டு ரகமாக உருவாகியுள்ள மனித குலத்தின் எதிரிகளான ஆர்எஸ்எஸ் – பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் முதன்மையான குஜராத்தில் போலியான ரூபாய் நோட்டுகள் புழங்குவது என்பதில் துவங்கி போலியான நீதிபதிகள் நீதியை வழங்குவது என்பது வரை படிப்படியாக அம்பலமாகி நாறி வருகிறது.
போலிகளின் பன்முகத்தன்மை.
குஜராத்தின் மோர்பி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் ஒன்று ஏற்கெனவே அமைக்கப்பட்டு இருந்தது. இந்த டோல்கேட்டின் வழியாக பயணம் செய்யாமலிருக்க இந்த தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை வழிமாற்றி தனியார் நிலம் வழியாக வாகனங்களைத் திருப்பிவிட்டுள்ளனர்.
அவ்வாறு தனியார் நிலம் வழியாகச் செல்லும்போது அங்கு பிரத்யேகமாக போலியான டோல் கேட் ஒன்றை அமைத்துள்ளனர். அதன் வழியாக வாகனங்கள் செல்லும்போது ஏற்கெனவே இருக்கும் டோல் கேட்டில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து (அடடே) பாதிக் கட்டணத்தை வசூலித்துக்கொண்டு அன்றாடம் 2000 வாகனங்கள் வரை செல்ல அனுமதித்துள்ளனர்
அங்குள்ள தொழிற்சாலை உரிமையாளர் அமர்ஷிபட்டேல் என்பவர் தனது தொழிற்சாலை நிலத்தில் இது போன்ற ஒரு போலி டோல்கேட்டை நடத்தி வந்தது தெரிய வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் சுமார் ரூ.1.5 கோடி ரூபாய் அளவுக்கு வாகன ஓட்டிகளிடம் வசூலித்துள்ளனர். இந்த போலி டோல்கேட் வெளிச்சத்துக்கு வந்து ’குஜராத் மாடல்’ நாறிக் கொண்டுள்ளது
குஜராத்தில் சந்தீப் ராஜ்புத் என்ற கிரிமினல் பேர்வழி அதிகாரியாக போலியாக நடித்தது மட்டுமின்றி, சொந்தமாக போலி அரசு அலுவலகம் அமைத்து 4 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் தாஹோத் மாவட்டத்தில் அரசாங்க திட்டத்தின் மூலமாக செய்யப்பட்ட பணிகளைச் விசாரணை செய்த போதுதான் சந்தீப் ராஜ்புத் தஹோத் மாவட்டத்தில் ஐந்து மற்றும் தபோயில் ஒன்று என ஆறு போலி அலுவலகங்கள் மற்றும் போலி அதிகாரிகளை உருவாக்கியதாக தெரிய வந்தது.
2016 முதலே இயங்கி வந்த இந்த அலுவலகங்களுக்கு குஜராத் மாநில அரசே சுமார் 21 கோடி நிதி ஒதுக்கியது என்பதுதான் ’குஜராத் மாடலின்’ சாதனை. இதற்கு முன்னரே சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் உள்ள போடேலியில் போலியான அரசு அலுவலகம் கண்டு பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் தஹோத் மாவட்டத்தில் போலி அரசு அலுவலகம் மூலம் 21.15 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தீப் ராஜ்புத் ஒரு வழியாக கைது செய்யப்பட்டார்.
கடந்த மார்ச் 3ம் தேதி ஜம்மு காஷ்மீர் காவல்துறை குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிரண் ஜே பட்டேலை கைது செய்த போது குஜராத் மாடலின் வேறொரு பரிமாணம் அம்பலமாகியுது. அவர் நடத்திய மோசடிகள், கூறிய பொய்களை கேட்டபோது குஜராத் கிரிமினல்களின் ஹைடெக் மோசடிகள் கண்டு நாடே காரித் துப்பியது.
தன்னை பிரதமர் அலுவலகத்தின் இணை இயக்குனர் என்று கூறிக்கொண்டு அரசு பங்களாக்களில் ஆடம்பரமான வசதிகளை அனுபவித்து வந்த அவர். காவல்துறை தகவலின்படி, தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி கொண்டு இத்தகைய மோசடிகளை நடத்தியுள்ளார். அவரிடமிருந்து பத்து போலி விசிட்டிங் கார்டுகள் மற்றும் இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளது காவல்துறை.
அவர் அரசாங்கத்தின் குண்டு துளைக்காத வாகனங்களில் வலம் வந்தது முதல் காஷ்மீரின் அரசு பங்களாக்களை தனது குடும்பத்தினருடன் பயன்படுத்தியது வரை ’குஜராத் மாடல்’ பெற்றெடுத்த கிரிமினல்களின் முகம் அம்பலமானது. இதை தொடர்ந்து நடைப்பெற்ற காவல்துறை விசாரணையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டி. நினாமா மீதும் குற்றம் சாட்டப்பட்டது. நினாமா 2023 நவம்பர் 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
குஜராத்தில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாகம் (FDCA) நடத்திய சோதனையில், அகமதாபாத், வதோதரா, சூரத், புஜ் மற்றும் இடார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலி மருந்து தொழிற்சாலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அகமதாபாத்தில் உள்ள சங்கோதரில் உள்ள M/S Piecan Pharma Pvt Ltd என்ற மோசடி தொழிற்சாலையில் இருந்து ₹1.75 கோடிக்கு மேல் மதிப்புள்ள போலியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
M/S Piecan Pharma-ன் உரிமையாளர் நரேஷ் தன்வானியா, M/S Pharma Chem என பெயரிடப்பட்ட திவ்யேஷ் ஜகானியின் தொழிற்சாலையில் எந்தவித அங்கீகாரமும் இன்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உற்பத்தி செய்ய மற்றொரு நிறுவனமான Medicaman Organics இன் உரிமத்தைப் பயன்படுத்தினார்.
மொத்தம் ₹1.25 கோடி மாஸ் மிக்சர், இரண்டு கம்ப்ரஷன் மெஷின்கள், ஒரு கோட்டிங் மெஷின், மூன்று ப்ளிஸ்டர் பேக்கிங் மிஷின்கள், இரண்டு எண்கணித-லாஜிக் யூனிட் (ALU) பேக்கிங் மெஷின்கள், ஒரு காற்று கையாளும் அலகு (AHU), மூலப்பொருட்கள், பிற இயந்திரங்கள் மற்றும் மாத்திரைகள் FDCA ஆல் கைப்பற்றப்பட்டன.
உயிர் காக்கும் மருத்துவ உலகிலேயே போலி மருந்து மாத்திரைகளை உருவாக்கி கல்லா கட்டிய சமூக விரோத, மக்கள் விரோத கிரிமினல் கும்பல்களை உருவாக்கியது தான் ’குஜராத் மாடல்’.
இதன் உச்சக் கட்டமாக குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் (37). இவர் குஜராத் தலைநகர் காந்திநகரில் வாடகை கட்டிடத்தில் போலி நீதிமன்றத்தை உருவாக்கி உள்ளார். அசல் நீதிமன்றத்தை போன்று போலியான எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமித்து இருக்கிறார். நில விவகாரங்கள் சார்ந்த சிறப்பு தீர்ப்பாயத்தின் நீதிபதி என்று பொது அரங்கில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
பல்வேறு நீதிமன்றங்களில் நிலங்கள் சார்ந்து தொடரப்பட்ட வழக்குகளின் மனுதாரர்களை கிறிஸ்டியனின் போலி வழக்கறிஞர்கள் அணுகி உள்ளனர். சிறப்பு தீர்ப்பாயத்தில் விரைந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்து உள்ளனர். அரசுக்கு சொந்தமான 100 கோடி அதிகமான மதிப்புள்ள நிலம் மற்றும் இருப்பிடங்களை இந்த போலி நீதிபதி பதவியின் மூலமாக கொள்ளையடித்துள்ளார்.
’குஜராத் மாடல்’ என்று சங் பரிவார கும்பல் முன் வைப்பது இது போன்ற மோசடிகளைத் தான் என்பதும், குஜராத்தில் இது போன்று அனைத்து வகையான கிரிமினல் குற்ற மோசடிகளும் தலைவிரித்தாடுகிறது என்பதும்தான் இவர்கள் முன்வைக்கும் இராம ராஜ்ஜியத்தின் யோக்கியதையாகும்.
பார்ப்பன (இந்து) மதத்தின் பெயரால் படு பிற்போக்குத்தனமான, காட்டுமிராண்டித் தனமான பழக்கவழக்கங்களை அமுலாக்குவது, சாதிய அடக்குமுறைகளையும், மதச் சிறுபான்மையினர் மீது வெறுப்புணர்ச்சியை தூண்டி தாக்குதல், படுகொலைகள் நடத்துவது போன்ற பயங்கரவாத, கிரிமினல் கும்பலான ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் உண்மையான முகம் மேற்கண்ட சம்பவங்கள் மூலமாக படிப்படியாக அம்பலமாகி வருகிறது.
இதனால்தான் பாசிச பாஜக பிற கட்சிகளைப் போல மற்றொரு கட்சி அல்ல. அது பொய், போலித்தனம், மோசடி, கிரிமினல் குற்றங்கள் உள்ளிட்ட பயங்கரவாத வழிமுறைகளைக் கையாளும் பாசிச இயக்கம் என சொல்கிறோம்.
தமிழகத்தில் பாசிச பாஜகவின் தலைவர்களாக வலம் வரும் கருப்பு பார்ப்பனர்களான அண்ணாமலை, வானதி சீனிவாசன் முதல் அக்மார்க் பார்ப்பனர்களான எச் ராஜா, சாணக்யா பாண்டே, நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் பொதுவெளியில் கூச்சநாச்சமின்றி ’குஜராத் மாடலை’ உயர்த்திப் பேசுவதையும், நாட்டை பாதுகாக்க தாங்கள் அவதாரம் எடுத்துள்ளதாக பீற்றிக் கொள்வதையும் அம்பலப்படுத்தி முறியடிப்பது மட்டுமின்றி மேற்கண்ட சட்டவிரோத கிரிமினல்தனங்களின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அவர்களுக்குரிய ’மரியாதையை’ திருப்பிக் கொடுப்பதும் அவசியமாகும்.
பார்த்தசாரதி.