வங்கிகள் தனியார்மயம் தேசத்துரோக குற்றம்!


ந்தியாவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து நான்கு வங்கிகளாக மாற்றுவது என்ற அடிப்படையில் பாசிச பாஜகவின் கார்ப்பரேட் கொள்கை அமல்படுத்தப்படுகிறது.

சுமார் 160 லட்சம் கோடி ரூபாய் திரண்ட சொத்து மதிப்புள்ள தேசிய வங்கிகளை ஒன்றிணைப்பது மூலம் தனது எஜமானர்களான கார்ப்பரேட்டுகளுக்கு படையல் வைப்பதற்காக துடித்துக் கொண்டுள்ளது பாசிச பாஜக கும்பல்.

மூலதனத்தை ஒன்று திரட்டுகின்ற இந்த நடவடிக்கை எந்த வகையிலும் நாட்டு மக்களுக்கு பயனளிக்க போவதில்லை என்பது கல்வியாளர்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்ற அதிகார வர்க்கத்திற்கும், வங்கிகளில் பணி புரிகின்ற நடுத்தர வர்க்கத்தினருக்கும் நன்றாகவே தெரியும்.

5 மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்த பிறகு வங்கிகளை தனியார் மயமாக்குவது என்றார் தேசத்துரோக செயலில் விரைவாக இறங்கியுள்ளது பாஜக.

ஏற்கனவே இதற்கு பொருத்தமாக வங்கி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் வங்கி தேசியமயமாக்கல் சட்டம் ஆகியவற்றை திருத்தங்களைக் கொண்டு வந்துவிட்டது.

இனி சட்டப்பூர்வமாகவே வங்கிகளை தனியார் கொடுப்பதில் எந்த தடையும் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளனர்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அக்டோபர்-டிசம்பர் 2021 காலாண்டில் மட்டும் ரூபாய் 454 கோடி லாபம் ஈட்டியது.

படிக்க:

வங்கி ஊழியர்களின் போராட்டம் வெற்றி!

பொதுத் துறை வங்கிகளை காப்போம்! காவிகளின் கனவை கலைப்போம்!

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சென்ட்ரல் வங்கி அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 279 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது.

இந்த சென்ட்ரல் வங்கி கடந்த ஆண்டில் மட்டும் 69% வளர்ச்சி அடைந்துள்ளது என்று வங்கி ஊழியர் சம்மேளனங்கள் தெரிவிக்கின்றன.

நட்டத்தில் இயங்குவதாக கூறி முதல் சுற்றில் தேசியமயமாக்கப்பட்ட இருந்த 27 வங்கிகள் 12 வங்கிகளாக சுருக்கப்பட்டது அல்லது ஒன்றிணைக்கப்பட்டது.

அடுத்த சுற்றில் 12 வங்கிகளையும் 4 வங்கிகளாக மாற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி.

இவ்வாறு வங்கிகளை வைப்பதன் மூலம் அதில் திரண்டுள்ள கோடிக்கணக்கான சொத்துகளை கார்ப்பரேட்டுகளுக்கு வாரி கொடுத்து நாட்டை முன்னேற்றப் போவதாக பித்தலாட்டம் புரிகின்றனர்.

மற்றொருபுறம் 150 நாடுகளின் ஜிடிபி வருவாயை விட அதிக வருவாய் கொண்ட பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது.

எல்ஐசி சுமார் 39 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு உடையது.

2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் இந்திய நாட்டின் உழைப்பாளிகள் கடுமையாக உழைத்து உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், போக்குவரத்து, ரயில்வே உள்ளிட்ட தேசத்தின் சொத்துக்கள் அனைத்தும் எட்டு ஆண்டுகளுக்குள் கார்ப்பரேட்டுகள் கையில் வாரி வழங்கப்படுகிறது.

கார்ப்பரேட்டுகளின் அடக்குமுறை பாசிசமாக நாட்டு மக்களின் மீது திணிக்கப்படுகிறது.

வங்கிகள் தனியார்மயமாவது என்பது பிற துறைகள் தனியார்மயம் ஆவதைப் போல அவ்வளவு சாதாரண நடவடிக்கை அல்ல.

இவ்வளவுக்கும் பிறகு தொழிலாளி வர்க்கம் கார்ப்பரேட் ‘காட்டாச்சி’யை அனுமதிப்பது தமது எதிர்கால சந்ததிகளுக்கும், நாட்டுக்கும், வரலாற்றுக்கும் செய்யும் துரோகமாகும்.

சண்.வீரபாண்டியன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here