மிழகத்திலும் சரி! இந்தியாவிலும் சரி! நெல், கோதுமை மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு அடுத்தபடியாக கூடுதலாக பருத்தி விளைவிக்கப்படுகிறது.

இந்தியாவின் முக்கியமான தொழில்களில் ஒன்றாக நூற்பாலை மற்றும் பின்னலாடை உள்ளிட்ட ஜவுளி தொழில் விளங்குகிறது. இதற்கு ஆதாரமாக உள்ள பருத்தி விளைச்சல் தேவைக்கு குறைவாகவே இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டி வெளிநாடுகளில் இருந்து தாராளமாக இறக்குமதி செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் அனுமதி கொடுத்துள்ளது.

இந்த அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீதம் வரி விலக்கு என்ற அறிவித்தது. அந்த அடிப்படையில் இந்தியப் பருத்தி சந்தையின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக இந்திய ஒன்றிய அரசு தகவல்களை வெளியிட்டு வருகிறது.

தமிழகத்தை ஆளத் துவங்கியிருக்கும் பாசிச கோமாளியான விஜய், பருத்திக்கு 11 சதவீதம் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், அதனை பரிசீலித்த ஒன்றிய அரசு உடனடியாக அங்கீகாரம் கொடுத்து பருத்திக்கு 11 சதவீதம் வரி விலக்கு என்று அறிவித்துள்ளது. இதன் மூலமாக முந்தைய திமுக அரசின் மோடி அரசுடனான பகைத் தன்மையை மாற்றியுள்ளது. இது  தமிழக வெற்றிக் கழகத்தின் சாதனை என்று அதன் தொண்டர்கள் கொண்டாட துவங்கி உள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளியாகி சில தினங்களுக்குள் டெல்டா மாவட்டத்தில் விலைகின்ற பருத்தியின் விலை கிலோ ரூ 90லிடுந்து ரூ 55-க்கு  வீழ்ச்சி அடைந்துள்ளது என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பருத்தி இறக்குமதி நடப்பது என்ன?

இந்தியாவில் முக்கிய தொழிலாக உள்ள ஜவுளி தொழில் உற்பத்திக்கு தேவையான பருத்தி விளைவிப்பதில் இந்திய விவசாயிகள் குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதிக பரப்பளவில் விவசாயம் செய்வது கடந்து சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது என்பதும், தென்னிந்திய பகுதிகளில் அதிகரித்து வருகிறது என்பதும் சமீபத்திய புள்ளி விவரங்கள் ஆகும்.

எடுத்துக்காட்டாக பருத்தி விளைச்சலில் முன்னிலையில் உள்ள குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பருத்தி விளைச்சல் செய்யும் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு நேர் மாறாக தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பருத்தி விளைச்சல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

பருத்திக்கு போதிய கட்டுப்படியான கொள்முதல் மற்றும் ஆதார விலை இல்லை என்ற காரணத்தினால் பருத்தியிலிருந்து வேறு பணப்பயிருக்கு தாவுகின்ற போக்கு அதிகரித்து வருகிறது என்ற சூழலில் இந்தியாவின் பருத்தி சந்தைக்கு தேவையான பருத்தி கிடைப்பதில்லை என்பதுதான் உண்மையான நிலவரம் ஆகும். இவ்வாறு பற்றாக்குறை ஏற்படுகின்ற காரணத்தினால் பருத்தியின் விலை கேண்டிக்கு இவ்வளவு என்று சதவீதக் கணக்கில் அதன் விலை அதிகரித்துள்ளது என்பது கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையை சரி செய்வதற்கு தமிழகத்தை ஆண்டு வருகின்ற பாசிச கோமாளி விஜய்யின் ஆட்சி ஒன்றிய அரசுக்கு கீழ்கண்டவாறு தனது பரிந்துரை கடிதத்தை அனுப்பி வைத்திருந்தது.

“கடந்த இரண்டு மாதங்களில் பருத்தியின் விலை ஒரு கேண்டிக்கு ரூ. 54,700-லிருந்து ரூ. 67,700 ஆக, அதாவது 25% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், நூலின் விலை ஒரு கிலோவுக்கு ரூ. 301-லிருந்து ரூ. 330 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், இறக்குமதி மூலமாக மட்டுமே மூலப்பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய முடியும். இருப்பினும், பருத்தி மீது 11% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது,” இதனை இந்திய ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதே சமயம் பருத்தி விளைச்சல் சாகுபடிப் பரப்பு குறைந்திருந்தாலும், அதிக மழைப்பொழிவு ஒரு கவலையாக இருந்தாலும், 2025-26 ஆம் ஆண்டில் (அக்டோபர் மாதம் தொடங்கும்) இந்தியாவின் பருத்தி உற்பத்தி , தலா 170 கிலோ எடை கொண்ட 312 முதல் 335 லட்சம் பேல்கள் வரை இருக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. சாகுபடிப் பரப்பு குறைந்தபோதிலும், இந்த  காலக் கட்டத்தில் பருத்தி விளைச்சல் உள்ள முக்கிய மாநிலங்களில் புதிய  அறுவடைக்கான கச்சாப் பருத்தி வரத்து அதிகரித்தது;  இந்தக் காலத்தில் தினசரி வரத்து 1 லட்சம் பேல்களைத் தாண்டியது என மதிப்பிடப்பட்டது. இருப்பினும், தேவை குறைவாக இருப்பதால் கச்சாப் பருத்தியின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அளவிற்குக் கீழே செல்கிறது. 2025-26 ஆம் பருவத்திற்கான கையிருப்பு, ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த 39.19 லட்சம் பேல்களை விட அதிகரித்து, 60.59 லட்சம் பேல்களாக மதிப்பிடப்பட்டுள்ளது — இந்த அதிகரிப்பு பெரும்பாலும் அதிக இறக்குமதிகளால் ஏற்பட்டது என்று ஒன்றிய அரசு தெரிவித்தது.

ஏற்கனவே, இந்தியாவின் உணவு மற்றும் கச்சாப் பொருள்களின் தாராள இறக்குமதி என்பதை ஒரு கொள்கையாக வைத்துள்ள இந்திய ஒன்றிய பாசிச பாஜக அரசாங்கமானது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வெளிநாடுகளில் இருந்து தாராளமாக பருத்தி இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கின்ற வகையில் 11% வரிவிலக்கு என்று அறிவித்தது.

படிக்க:

 பருத்தி, நூல் விலை உயர்வு! அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையின் விளைவே!

 இந்திய விவசாயிகளை ஒழிக்க வரும் இந்திய அமெரிக்க வணிக ஒப்பந்தம்!

இவ்வாறு, ’காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாக’ ஒன்றிய அரசு அறிவித்த வரிவிலக்கு தனது முதல்வர் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தற்குறிக் கும்பல் கூச்சலிட்டுக் கொண்டுள்ளது.

உண்மையில் இந்தியாவிற்கு ஜவுளித் துறைக்கு பருத்தியின் தேவையைப்  பொருத்து விளைச்சலை அதிகரிப்பதற்கு இந்திய ஒன்றிய அரசாங்கத்திடம் எந்த விதமான திட்டமும் இல்லை; மாறாக புதிய விவசாயக் கொள்கை என்ற பெயரில் கார்ப்பரேட் விவசாயத்தை ஆதரிப்பது; அதிலும் முக்கியமாக பணப்பயிர் உற்பத்தி என்ற முறையில் ஏற்றுமதிக்கான உற்பத்திக்கு முன்னுரிமை தருவது; இந்திய மக்களின் தேவையிலிருந்து விவசாயத்தை நடத்துவதை புறக்கணிப்பது என்பது ஒரு நிரந்தரக் கொள்கையாக மாறி வருகிறது.

இதனால்தான் தேவை எவ்வளவு என்பதை கணக்கிட்டு திட்ட வகையிலான விவசாயக் கொள்கையை அமல்படுத்துவதற்கு மாறாக லாபம், லாபம் மேலும் லாபம் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்ட பணப்பயிர் மற்றும் ஏற்றுமதிக்கான பயிர்களை உற்பத்தி செய்வது என்பது முன்னுரிமை கொடுத்து வருகிறது பாசிச ஆர்எஸ்எஸ் பாஜக அரசு.

இதனால் இந்தியாவின் பருத்தி விவசாயிகளுக்கு கட்டுப்படியாகின்ற விலை கிடைக்காமல் போவதால் தனது விளைச்சல் பரப்பை ஒவ்வொரு ஆண்டும் சுருக்கி கொண்டே வருகின்றனர். அது மீண்டும் பற்றாக்குறையை ஏற்படுத்தி நிரந்தரமாக இறக்குமதி செய்வது தான் தீர்வு என்ற நிலையை நோக்கி இந்திய விவசாயத்தையும், குறிப்பாக பருத்தி விவசாயிகளில் வாழ்க்கையையும் கொண்டு சென்றுள்ளது.

இதன் விளைவாகவே 11 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்பட்டவுடன் இந்திய பருத்திக்கு விலை படிப்படியாக குறைந்து பருத்தி விவசாயிகள் கடுமையான போராட்டத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது..

தான் உற்பத்தி செய்த பொருளுக்கு விலை நிர்ணயிக்கின்ற உரிமை மற்றும் அதிகாரத்தை விவசாயிகள் பெறுகின்ற வரை இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமாக தீர்வு காண முடியாது; இத்தகைய விலை நிர்ணயிக்கின்ற உரிமையை, அதிகாரத்தை வழங்குவது, கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்திய பிறகு உருவாக்க இருக்கின்ற ஜனநாயகக் கூட்டரசு ஒன்றின் மூலமாகவே உறுதி செய்யப்படும்.

அதுவரை, “பருத்திக்கு கட்டுபடியாகின்ற விலை நிர்ணயம் செய்! பருத்தி இறக்குமதியை தடை செய்!” என்ற முழக்கங்களுடன் வி வசாயிகளுடன் இணைந்து வீறுகொண்டெழுந்துப் போராடுவோம்.

  • மாசாணம்

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here