இதுதான் ஆகமம்!

ஆகம வழிமுறையில் கட்டப்பட்ட எந்த ஒரு கோயிலும் பாமர பொது ஜனங்களுக்காக எழுப்பப்பட்டவை அல்ல.

கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் மூல விக்கிரகம் மன்னனுக்கு நல்லதே விளைவிக்கும் என  வைதிகர்களால் தெரிவு செய்யப்பட்ட தேவர்களை மந்திரங்களால் வசியப்படுத்தி அத் தேவர்களை கற்சிலைகளுக்குள் ஆவாஹனம் செய்து வைக்க பெரும் பொருட் செலவு செய்து கட்டுவித்தவர்கள் மன்னர்கள்.

தாங்கள் குடியிருக்க பெரிய மாட மாளிகை, அரண்மனை இல்லாது போனாலும் பெரிய பெரிய கோயில்களை மன்னர்கள் எழுப்பியதற்கு அவர்களின் சுயநலமே கராணம்.

இக் கோயில்களில் உள்ள மூர்த்திகளை வணங்கினால் அவை மன்னனுக்கே நல்லது விளைவிக்கும் என ஆகம நூல்களில் எழுதப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கது.

இதில் பொதுமக்களின் நலன் என்பது நாமாக கற்பனை செய்து கொள்வதே தவிர, கோயில்கள் கட்டப்பட்டது மக்களுக்காக இல்லவே இல்லை.

ஒவ்வொரு கோயிலும் ஒரு specific purpose ற்காக எழுப்பப்பட்டவையே தவிர பாமர மக்களுக்காக அல்ல.

கோயிலைக் கட்டும் ஸ்பதிகளுக்கும்,பொருளுதவி செய்த மன்னர் வகையறாக்களுக்கும், அவர்களை ஆட்டுவிக்கும் கூட்டத்திற்கு மட்டுமே இவ்வுண்மை வெளிச்சம்.

இக் கோயில்களில் மக்கள் வழிபடுகிறார்கள் என்றால் அவர்கள் தம் மன்னரையே வழிபடுகிறார்கள் என்றே பொருள்.

தினகரன் செல்லையா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here