வங்கிகள் தனியார் மயமாகுவதை எதிர்த்து நாடு தழுவிய வங்கி ஊழியர்களின் போராட்டம் வெற்றி!

2021-22 ஆம் ஆண்டு நிதி அறிக்கையில் மத்திய நிதியமைச்சர், கார்ப்பரேட் கைக்கூலியான நிர்மலா சீதாராமன் இந்தியாவில் இருக்கின்ற பொதுத்துறை வங்கிகளில் 2 வங்கிகளை தனியார் மயமாக்குவதாக அறிவித்திருந்தார்.

அதை அமல்படுத்துகின்ற வகையில் வங்கிகள் சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது பாசிச பாஜக அரசு.
இதனை எதிர்த்து அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் சங்கம் ஒருங்கிணைத்து இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது.

1969 க்கு முன்னர் இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்தும் தனியார் கையிலேயே இருந்தது.

1969ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியில் 13 வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அதன் பிறகு பத்தாண்டுகளில் ஏழு வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டது. ஆக மொத்தம் இந்தியாவில் 20 வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளாக செயல்பட்டு வந்தன.

சுமார் 157 லட்சம் கோடி சேமிப்பு உள்ள இந்த இருபது வங்கிகளை பாசிச மோடி அரசுக்கு வந்த பிறகு 12 வங்கிகளாக ஒன்றிணைத்தது.

அதிலும் குறிப்பாக தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளை தனியார்மயமாக்க முடிவெடுத்திருக்கிறது.

இதனை எதிர்த்து 16 மற்றும் 17 ஆகிய இரண்டு தினங்களில் இந்தியாவில் உள்ள சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ஐக்கிய அமைப்பு (UFBU) தலைமையில் ஒன்று திரண்டு போராடினார்.

கார்ப்பரேட்- காவி பாசிச மோடி அரசின் தனியார் மயமாக்கல் கொள்கைக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடிய வங்கி ஊழியர்களின் இந்த போராட்டம் வெற்றியை பெற்றிருக்கிறது.

நாட்டில் எங்கே எழுச்சி உருவாகிக் கொண்டிருக்கிறது என்று பேசிக்கொண்டு அவநம்பிக்கையை கிளப்பிவிடும் சோம்பேறிகளின் வெட்டிப்பேச்சுகளை இந்த போராட்டம் தட்டி எழுப்பியுள்ளது.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.

வீடியோ லிங்க்

https://fb.watch/9Zh4XnohGY/

1 COMMENT

  1. வங்கி ஊழியர்களின் போராட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது !அதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் வெற்றி பெற்றது கார்ப்பரேட் காவி பாசிச அடக்குமுறைகளை எதிர்த்து மக்கள் ஒன்றுபட்டு நிற்பதை பார்க்கும் போது புது நம்பிக்கை பிறக்கிறது சங்கிகள் செம கடுப்புல இருப்பானுங்க! அதை நினைச்சு பாக்கும்போதுதான் ரொம்ப மகிழ்ச்சி! நன்றி “செய்திகட்டுரை” சிறப்பாக அமைந்துள்ளது புகைப்படங்களும் சிறப்பாக அமைந்துள்ளது தோழர்களுக்கு ஆசிரியர் குழுவிற்கு வாழ்த்துக்கள் தோழர் .மணிகண்டன்.( மாவட்ட பொருளாளர்) கடலூர்🔥❤️❤️🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here