மக்கள் அதிகாரத்தின் முகநூல் பக்கம் இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு தடைசெய்து வைக்கப்பட்டுள்ளது.


Facebook என்ற meta என்ற Big tech நிறுவனம் உலகிலேயே ஐந்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக மக்களை சுரண்டிக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகள் தனது பயங்கரவாத செயல்களை ஒவ்வொன்றாக அமல் படுத்திக் கொண்டே வருகின்றனர்.

மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது துவங்கி தற்போது மசூதிக்குள் உள்ளே உள்ள கல்லறை பெயர்த்து அனுமன் சிலையை நிறுவுகிறார்கள்.

படிக்க:

♦  அனுமன் ஜெயந்தி : தர்காவில் சமாதியை இடித்து அனுமன்சிலை!

இவை அனைத்தும் லைவ் போல முகநூல் பக்கத்திலும், யூடியூப் சேனல்களிலும் வெளியாகிறது. ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்துடன் பார்ப்பன மத வெறியர்கள் இத்தகைய அட்டூழியங்களில் இறங்கி அதையும் பிரச்சாரம் செய்கின்றனர்.

இஸ்லாமிய பெண்களை ஆபாச வக்கிரமாக சித்தரித்து முகநூல் பக்கங்களிலும், இணையதளங்களிலும் பார்ப்பன மதவெறி மனநோயாளிகள் செய்திகளாக பரப்புகின்றனர்.

அன்றாடம் ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ எம்பிக்கள் அமைச்சர்கள் துவங்கி பிரதமர் வரை நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பார்ப்பன மேலாதிக்கத்தை நிபந்தனையின்றி ஏற்பது ஒன்றே தேசபக்தி என்று புழுதியைக் கிளப்புகின்றனர்.

இத்தகைய சூழலில் மக்கள் அதிகாரம் இதை அம்பலப்படுத்தி உண்மையான ஜனநாயகத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்ல முயற்சிக்கிறது. ஆனால் இந்த அடிப்படைகளை சிறிதும் புரிந்து கொள்ளாத meta எமது பிரச்சாரத்திற்கு இருபத்தி நான்கு மணிநேரம் தடை விதிக்கிறது.

“எதிரி உன்னை தாக்குகிறான் என்றால் நீ சரியாக இருக்கிறாய் என்று அர்த்தம்” என்பார் ஆசான் மாவோ. அந்த வகையில் எமது பணிகளை தொடர்ந்து கொண்டு செல்வோம்.
தடைகளுக்கு அஞ்ச மாட்டோம்.

ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here