அனுமன் ஜெயந்தி : தர்காவில் சமாதியை இடித்து அனுமன்சிலை!
தலைநகர் தில்லியில் இருந்து நூறுகிமீ தூரம். அரியானா மாநிலத்தில் பிவானி மாவட்டம். முசுலீம்களின் வழிபாட்டுத் தலமான தர்காவில் நுழைந்து சமாதியை உடைத்தெறிந்துவிட்டு, அனுமன் சிலையை வைத்திருக்கிறார்கள்.
இதை செய்தது ஆஎஸ்எஸ்சின் ஒரு பிரிவு விசுவ இந்து பரிசத். அதன் இளைஞர் பிரிவு தான் பஜ்ரங் தள் என அழைக்கப்படும் வானரப்படை. ஆ.எஸ்.எஸ் சொல்லும் கலவரங்களை செய்வதற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்ட கொலைகார குண்டர்படை.
2018ல் அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ விஷ்வ இந்து பரிசத்தையும், பஜ்ரங் தள்ளையும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகள் என அறிவித்தது. சரியாகத்தான் கணித்திருந்தது. வரலாறு நெடுக செய்த கலவரங்களின் பட்டியல் நீளமானவை.
இந்தியாவின் நான்கு திசைகளிலும் அனுமன் ”காத்து” நிற்கவேண்டும் என ஏற்கனவே இமாச்சலில் ஒன்று. குஜராத்தில் இப்பொழுது. மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் நிறுவ திட்டமிட்டிருக்கிறார்கள். கலவரப் பட்டியலின் வரிசையில் பிள்ளையாருக்கு அடுத்து அனுமனையும் சேர்த்திருக்கிறார்கள். கவனமாய் இருப்போம்.
சாக்ரடீஸ்