தை இதற்கு மேலும் நீள்கிறது. இந்திய மனங்களைக் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க உருவாக்கிய அமைப்பாகத் தங்களை வெட்கமின்றி மார்தட்டிக் கொண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ்.

பிரிட்டிஷ்காரர்களிடம் மன்னிப்புக் கேட்டும், ஓய்வூதியம் பெற்றும் வாழ்ந்தவர்கள்; அதற்காகப் ‘புல்புல்’ பறவை மீது ஏறித் தாய்நாடு வந்தவர்கள்; நாட்டு விடுதலைக்காகப் பாடுபடும் விடுதலை வீரர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள்; காந்தியைக் கொல்லப் பலமுறை முயன்று, இறுதியில் கொன்றே பழி தீர்த்தவர்கள்;

மதக் கலவரங்களைத் திட்டமிட்டு உருவாக்கி, அதில் இன்னும் குளிர்காய்ந்து கொண்டிருப்பவர்கள்; இந்துக்களைத் தவிர பிற மதத்தினர் இந்தியாவில் வாழும் நிலையைக் கேள்விக்குறியாக்கி, அவர்கள் எப்போதும் அச்சத்துடனேயே வாழும் நிலையைக் கொண்டு வந்தவர்கள்; கர்ப்பிணிகளையும், குழந்தைகளையும் பாலியல் வன்முறை செய்து கொடூரமாகவும் கொன்று தீர்த்த ராம, கிருஷ்ண பக்தர்கள்;

சாதியப் பிரச்சினைகளுக்கு எண்ணெய் ஊற்றிப், பெரிதாகத் தீபம் ஏற்றி, அதனால் விளையும் கலவரங்களுக்குத் தாங்கள் பலியாகாமல் பிற இந்துக்களை, நந்தனாரைப் போன்றும், வள்ளலாரைப் போன்றும் பலியாக்கத் துடிப்பவர்கள்; இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்திருப்பவர்கள்; நாட்டுக் கொடிக்கோ, நாட்டுப் பாடலுக்கோ எப்போதுமே மரியாதை தந்திராதவர்கள்;

சொல்லப்போனால் இந்தியச் சட்டத் தொகுப்பினில் (இ.பி.கோ.) உள்ள அத்தனைப் பிரிவுகளையும், குற்றங்களையும் செய்தவர்கள், செய்து கொண்டிருப்பவர்கள், நாளையும் இவற்றைச் செய்யும் பொழுது தங்களுக்கு மனுநீதி அளிக்கும் பாதுகாப்பை வேண்டி, மனுதர்ம ஆட்சி வேண்டும் என்று பேசுபவர்கள்; கடைந்தெடுத்த தேசத்துரோகிகள்; மனிதத் தன்மையே சிறிதுமற்ற இழிபிறவிகளான இவர்கள் நாட்டுணர்வைப் பற்றிப் பேசுவது கீழ்மையிலும் கீழ்மை தானே!

ஆர். எஸ். எஸ். அமைப்பு, அரசியல் சாசனத்தை மதிக்கும் அமைப்பு என்றும் அதன் செயலாளர் தத்தாத்ரேயா கூறியிருக்கிறார்.

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பில் சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய சொற்களை நீக்கிவிட வேண்டும் என்று போராடிக் கொண்டும், அதற்காகப் பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம், கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தும், ஊடகங்களில் அதைப் பற்றிப் பகிரங்கமாக அறிவித்தும் வரும் அமைப்பாகத் தங்களை வெளிப்படுத்திய பின்பும், அண்ணல் அம்பேத்கரை மதிக்கும் அமைப்பு என்று கூறிக் கொள்ளும் இவர்களுக்கு மானம் இருந்தால், பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே தூக்குப் போட்டுத் தொங்கி இருக்க வேண்டும். ‘மானம்’ என்ற சொல் ஆரியப் பண்பாட்டிலேயே இல்லை. ஆதலால், அதைக் கேட்டும், உணர்ந்தும் அறியாத ஆர்.எஸ்.எஸ்., பாராளுமன்றத்தின் உள்ளேயே சென்று விட்ட பி.ஜே.பி. மூலம் காய் நகர்த்தி வருகிறது. அதன் வெளிப்பாடு தான், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய சொற்களை நீக்கிவிட வேண்டும் என்று ஐந்து ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

தற்போது அதற்கும் மேலே சென்று இனி அரசியலமைப்புச் சட்டங்கள் தேவையில்லை. மனுநீதியின் சட்டங்களே இந்நாட்டை ஆளட்டும் என்று வெளிப்படையாக அறிவித்தும் விட்டனர்.

இந்தியா இனி ‘மனிதர்கள் வாழும் நாடு’ என்ற தகுதியை இழப்பதற்கான அடையாளம் தான் மனுநீதிக் கூட்டம் ஆளுகின்ற நிலை. மிருகத்தன்மையில் கூட ஓர் ஒழுங்கும், இயற்கை நியதியும் உண்டு. ஆனால் மதம், சாதி, மனுநீதி என்று ஒழுகும் இவர்களை ‘மனிதர்கள்’ என்று எப்படிச் சொல்வது? இவர்களை நாகரிகமாகத் திட்டுவதற்குக் கூட வார்த்தைகள் இல்லையே. அது மாதிரியான சொற்கள் உலகின் எந்த மொழிகளிலும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

அப்படியே கிடைத்தாலும் அவற்றை மொழியக் கூடாத சொற்களாகத் தடைபோடும் இழிபிறவிகள் ஆகிவிட்ட இவர்களிடம் தான் இந்த நாட்டின் இறையாண்மை மாட்டிக் கொண்டு குற்றுயிராய்த் திணறிக் கொண்டிருக்கிறது, குழந்தை ஆசிபாவைப் போல.

இத்தனை மூடத்தனங்களைக் கொண்டிருந்தும், மனித நாகரிகமற்ற போக்கினில் உழன்று கொண்டிருந்தும், இந்தியா முழுமையும் தங்களை மேலும் வளர்த்தெடுக்க, 2025 ஆம் ஆண்டை நூற்றாண்டு லட்சியமாகக் கொண்டு, அடுத்த கட்டத் தலைமுறையை வசப்படுத்தும் வகையில் செயலாற்றி வருவதாக ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டு ஊடகங்களின் முன்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் (2022) நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது தான் அவர் இப்படிக் கூறி இருக்கிறார். தமிழ்நாட்டில் தடம் பதிப்பதைத் தங்கள் வாழ்நாள் லட்சியம் என்றே அவர் பேசியுள்ளார். இதற்காகவே நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 1500 ஷாகாக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுக்க ஆர்.எஸ்.எஸ். நடத்தி வருகின்றது என்றும், மாநில முழுமையும் 600 இடங்களில் வாரச் சந்திப்புகளையும், 400 மாதாந்திரக் கூட்டங்களையும் நடத்தி வருவதாகவும் தத்தாத்ரேயா வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

சமூக நீதியும், மனிதத் தன்மையுமற்ற கருத்துகளைப் பொதுவெளியில் இத்தனை ஆங்காரமாக ஒருவர் பேசுவதை அனுமதிக்கும் இரத்தம் சுண்டிய மாநிலமாகத் தமிழ்நாடு மாறியிருப்பதைப் பார்க்க நமக்குப் பிரமிப்பு தான் ஏற்படுகிறது.

(ஆர். எஸ். எஸ். லோகோவில் டாக்டர் அம்பேத்கர். எப்பேர்ப்பட்ட ஏமாற்று வேலை!)

இதற்குப் பின்புலமாக எத்தனையோ திட்டமிடல்கள், ரகசியக் கூட்டங்கள், மாணவர்களைக் குறிவைத்த பயிற்சி முகாம்கள், ஆயுதப் பயிற்சிகள், தூண்டப்பட்ட கலவரங்கள், எதிர் பார்த்திராத ஆனால் திட்டமிட்ட குண்டு வெடிப்புகள் (மகாராட்டிரம், முன்னாள் ஆர். எஸ். எஸ். நிர்வாகி யஷ்வந்த் ஷிண்டேவின் நீதிமன்ற வாக்குமூலம்);

போராடத் தயாராக இல்லாத எதிரிகளைக் கொல்லுதல், குழந்தைகளைக் கொல்வதில் காட்டும் வெறித்தனம், மகளிரைக் கூட்டுப் பாலியல் வன்முறை செய்தல், வேற்று மதத்தினர் வழிபடுமிடங்களை இடித்தல், மத ஊர்வலங்களை நடத்துதல், அதில் கலவரங்களைக் கட்டாயமாக்குதல், கடவுளின் பெயரால் காலித்தனம் செய்தல்;

இதற்காகச் சமூக அமைப்பு, அரசாங்கத் துறைகள், காவல், ராணுவம் என்று அனைத்திலும் ஊடுருவுதல், ஒரு கட்டத்தில் அனைத்தையும் தன் வயத்தில் வைத்திருத்தல், நூறாண்டோ, எதுவோ வெறுப்பின் உச்சமாகப் பாசிசத்தை நடைமுறைப்படுத்துதல், காட்டு மிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்து விடும் மனுநீதியைச் சட்டமாக்குதல், திரேதா யுகத்தின் நீதி பரிபாலனம், அருவருப்பின் உச்சமான நால்வர்ணத்தை அனைவரும் ஏற்கச் செய்தல்;

மொத்தத்தில் மனிதத் தன்மை முற்றிலும் அழிந்த நாடாக இந்தியாவைக் கட்டமைத்தல் ஆகிய இவைதான் ஆர்.எஸ்.எஸ். இன் அஜெண்டா.  இதுதான் அவர்களின் நூற்றாண்டுக் கனவு.

இதுவே அவர்களின் நூற்றாண்டு வெறி. வெளியில் இருந்து வந்த வந்தேறி வெறி நாய்கள் பாயத் தொடங்கி விட்டன. பூர்வகுடி மக்களில் பாதிப்பேர் வெறிநாய்க்கடியுடன் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.


இதையும் படியுங்கள் :  ஒரு நூற்றாண்டு வெறி – பகுதி 1


மீதிக் குடிகள் போராடுவதா? வீழ்வதா?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான நம்

எதிரி வெளியே வந்து விட்டான்,

நாம் எங்கே இருக்கிறோம்

என்று தெரியவில்லை;

அவன் வாளைச் சுழற்றிக் காட்டுகிறான்,

இங்கு ஒரு புல் கூட அசையவில்லை;

அவன் நரசிம்ம அவதாரம் என்று,

அவனே சொன்ன கேடுகெட்ட மிருகமாய், அறை கூவல் விடுக்கிறான்,

இங்கு பூனை எழுப்பும் மெல்லிய

முனகல் கூடக் கேட்கவில்லை;

அவன் நம்மிடம் போரிட வரவில்லை, நம்

குழந்தைகளைக் கொல்ல வருகிறான், நம் பெண்களை

நடுவெளியில் துகிலுரித்துப்

பாலியல் வன்முறை செய்ய வருகிறான்,

அவன் காலில் விழாத ஆண்களின்

தலையைக் கொய்ய வருகிறான்,

அதையும் அறிவிக்கிறான்,

இங்கோ ஒன்றும் நடக்காதது போல் பஜனை பாடிக் கொண்டும்,

கொலு பொம்மைகள் அடுக்கிக் கொண்டும்,

சூரனை அழிக்கும் விழாக்களைக் கொண்டாடிக் கொண்டும்,

எவ்வுறுப்பும் அற்ற ஈனப் புழுக்களைப் போலத்

தமிழர்கள் மாறிப் போனதை நம்பத்தான் முடியவில்லை!

அவனுக்கு இரத்த வெறி தலைக்கேறி விட்டது.

அவன் விடுவதாக இல்லை.

நாம் மடிவதாய் இருந்தால் கூட,

மானத்தோடு மடிவது தானே நம்

இரண்டாயிரம் ஆண்டுக் காலத்து வழக்கமென்று

நம் இலக்கியங்கள் கூறுகின்றன.

நடத்துங்கள் போரை!

மானமுள்ள ஒவ்வொருவனும்

தன்னை அம்பேத்கர் ஆகவும்,

பெரியார் ஆகவும் நினைக்க வேண்டும்!

நடத்துவோம் போரை!

சாதி, மத, சனாதனங்களைத்

தகர்த்தழிப்போம்!

மீட்டெடுப்போம் நாட்டை!

 

(முற்றும்)

முனைவர் சிவ இளங்கோ

புதுச்சேரி.

முந்தைய பதிவு : ஒரு நூற்றாண்டு வெறி – பகுதி 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here