தைத் தொடர்ந்து வருபவைதான் ஆன்மிகத்தைப் போதிக்கின்ற இந்துத்துவ வாதிகளால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகள். குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை, பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் படுகொலைகள், பிற மதத்தவரிடம் நாட்டின் குடியுரிமைச் சீட்டு கேட்டு வலியுறுத்தல், பிற மதத்தினர்க்கு அரசு பணியும், பிற சலுகைகளும் மறுப்பு, உணவு, உடைகளில் கட்டுப்பாடுகள், இந்துவாகவே இருந்தாலும் வருண, சாதி அமைப்பில் சிறுமைப்படுத்தி, அடிமைப்படுத்துதல், எல்லாரும், எல்லா வகையிலும் பார்ப்பனியத்திற்கு அடிவருடிகளாக ஆக்குதல் என்று முற்றிலும் தலைகீழான, சாத்தியம் இல்லாத சமூகத்தைக் காட்சிப்படுத்திக் கந்தலாக்குவது, இவற்றையெல்லாம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டி மனரீதியாகவும் ஒடுக்குவது, இதற்குப் பக்கபலமாகக் கலை வடிவங்களை கைக்கொள்வது, இசை வடிவில் இஸ்லாமிய ஒழிப்பையும், ஆங்கிலேயர் ஆதரவையும் கொண்டாடும் ‘வந்தே மாதரம்’ பாடல், திரை வடிவில் காஷ்மீர் கோப்புகள், ராக்கெட்ரி, ஆனந்தமடம் போன்ற மனுதர்மம் போதிக்கும் திரைப்படத் தொகுப்புப் போர் வியூகங்களைச் சாமானிய மக்கள் மீது திணித்தல் ஆகியவை.

தற்போதைய இந்தியாவின் வளர்ச்சி மட்டுமே குறுகலாக இல்லை; அதன் சிந்தனை, அறிவு, மூளை எல்லாமே குறுகல்தான் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ரொமீலா தாப்பர்

இரண்டாவதாகப் பொருளாதார ரீதியில் அனைத்து மக்களையும் நலிவடையச் செய்தல்.

அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் கட்டுக்கடங்காத விலை ஏற்றம்; அனைத்துப் பொருட்களுக்குமான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு; வங்கி நடைமுறைகளில் தீவிரக் கட்டுப்பாடும், சேவைக் கட்டணங்களும்; பொதுமக்களின் அனைத்துக் கடன்களுக்கும் ஏறும் வட்டி விகிதம்; அம்பானி, அதானி, மெகுல் சோக்ஷி, சந்தீப், விஜய் மல்லையா, ஜதின் மேத்தா உள்ளிட்டோருக்கு 68 ஆயிரம் கோடி கடன் ரத்து; அதானி, டாட்டா, எஸ்ஸார் மின் உற்பத்தி நிறுவனங்களின் 35 ஆயிரம் கோடி கடன் ரத்து என்று உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஒப்புகை;

கோடிகளில் கடன் ரத்து

“ஒருவன் ஒருவன் முதலாளி” என்றால் அவன்தான் அதானி, “உலகில் மற்றவன் தொழிலாளி” (அடிமை) என்றால் அவன்தான் இந்தியக் குடிமகன்; இந்தியப் பண முதலைகளுக்கு லட்சம் கோடிகளில் கடன் ரத்து, மாணவர்களுக்குக் கல்வி கடன் ரத்து இல்லை; நீதிமன்றங்களில் வெளிப்படையான ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்; தீர்ப்புகளில் மனுதர்மம் கோலோச்சுதல்; ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்படுதல்; சங்கிக் குற்றவாளிகளுக்கு விடுதலை என்று இப்படியாக அனைத்து அரசுத் துறைகளிலும், அனைத்து வகையிலும் இந்து ராஷ்ட்ரியக் கோட்பாட்டைச் செயலாக்குதல்;

மக்களைக் குழப்பி, சமுதாய இணக்கத்தைக் காலில் போட்டு மிதித்துக் கலவரங்களை ஏற்படுத்தல்; அனைத்து மக்களையும் மன, உடல் ரீதியாக எப்போதும் ஒடுக்கி வைத்தல்; இந்நிலையைத் தொடர்ந்து நீடிக்கச் செய்தல் இவையே ஆர்.எஸ்.எஸ். இன் நூற்றாண்டுக் கொண்டாட்டக் கனவுகளாக அவர்களின் அறிவிப்பில் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் படியாக அதற்கான அரசியலமைப்பைத் தயாரிக்கும் திட்டத்தைக் கடந்த பிப்ரவரி மாதம் பிரயாக்ராஜில் நடைபெற்ற தர்ம சம்சாதில் (தர்ம சபை) ஆர். எஸ். எஸ். அறிவித்திருக்கிறது. அதன்படி முப்பது ஆர். எஸ். எஸ். மத வெறியர்கள் (அறிவு ஜீவிகள்), அந்த அரசியலமைப்பைத் தயாரித்து முடித்துள்ளனர்.

அகண்ட பாரதம் என்னும் பெயரில் இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான கொள்கை விளக்கங்களாக, 750 பக்கங்களில் இதைத் தயாரித்திருப்பவர்கள் எல்லாம் சாம்பவி மடம், இந்து ராஷ்டிரிய நிர்மான் சமிதி போன்ற முக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள். இதில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும், பாதுகாப்புத் துறை நிபுணர்களும் அடக்கம். இந்த வரைவு அரசியலமைப்பு, 2023 ஆம் ஆண்டு, சனவரியில், அலகாபாத்தில் நடைபெற உள்ள அடுத்த மகாமேளா தர்ம சம்சாதில் முன்வைக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி ‘வாரணாசி’ (காசி) இந்தியாவின் தலைநகரம் ஆக்கப்படும். புதிய பாராளுமன்றம் ஒன்று காசி வாரணாசியில் கட்டப்படும். அது ‘தர்மசபை’ என்று அழைக்கப்படும். தற்போதையக் கல்வி முறை ஒழிக்கப்பட்டுக் குருகுலக் கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் இருக்க மாட்டார்கள். ‘மத’ப் பிரதிநிதிகள் தான் இருப்பார்கள். மூச்சு முட்டுகிறதா? இன்னும் இருக்கிறது.

இந்தியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாழலாம். ஆனால் அவர்கள் தேர்தல்களில் பங்கு கொள்ள முடியாது. ஏன், வாக்களிக்கக் கூட முடியாது. இந்துக்களில் பதினாறு வயது முடிந்தோர்க்கு வாக்குரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படும்.

இந்த அரசியலமைப்பு வரைவின் முகப்பு, அகண்ட பாரதத்தின் வரைபடத்தைக் கொண்டிருக்கிறது. அகண்ட பாரதம் என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மியான்மர் ஆகியவை இணைந்த பகுதியாகும் (டைம்ஸ் ஆப் இந்தியா, மும்பை, 13. 8. 2022).

மொத்தத்தில் திரேதா யுகம், துவாபர யுகங்களில் இருந்த சட்டங்களின் அடிப்படையிலேயே நீதிப் பரிபாலனங்கள் நடைபெறும். நான்கு வர்ணங்களின் அடிப்படையிலான மனுதர்மம் முதலாக அனைத்தும் சட்டத்தின் தகுதியைப் பெறும்.

முட்டாள்களிலும் கேடுகெட்ட முட்டாள்கள் கூடச் சதுர்யுகம், சாஸ்திரங்களைப் பற்றிப் பேச மாட்டார்கள் என்று அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் எத்தனையோ சொல்லி விட்டுச் சென்றார்கள். அவர்கள் இல்லாத இந்தியாவுக்கு இவை எல்லாம் உரைகல்.

தமிழ் நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிடவில்லை (இதுதான் சங்கிகள் ஆதரவு நிலை).

இந்து ராஷ்ட்ரம் ஏற்படுத்த ஓர் சனாதன அரசியலமைப்பு உருவாக்கப் பட்டுள்ளதையும், அதன் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் கூறும் ஆர். எஸ்.எஸ். அமைப்பினர், தங்களைச் சமத்துவ வழியில் பணியாற்றும் சமூக நீதி போற்றும் அமைப்பாகக் கூறிக் கொள்கின்றனர்.


இதையும் படியுங்கள்: அகண்ட பாரத கட்சிக்கு வந்த ‘சத்திய சோதனை’!


நான்கு வர்ணங்களின் வழியே இச்சமுதாயம் நடக்க வேண்டும் என்பதை ஒரு பிரகடனமாகச் செய்யும் அமைப்பு, ‘சமூகநீதி’ என்று சொல்லை உச்சரிக்கும் தகுதி கூட இல்லாதது. இந்நாடு, காட்டு மிராண்டிகள் வாழும் சமுதாயமாக மலர வேண்டும் என்பதைக் கொஞ்சம் கூட வெட்கமின்றிக் கூறுவது மட்டுமல்ல, அதுவே தங்களின் எதிர்கால இலட்சியமாகவும் அறைகூவல் விடுத்துள்ளனர்.

இந்து என்ற போர்வையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு பெரியார், அம்பேத்கர் சிலைகளைச் சேதப்படுத்தும் நால்வர்ண அடிமைக் கூட்டங்கள் இப்போது கூட விழிப்புணர்வு பெறவில்லை என்றால் வேறு எப்போது? இத்தனை ஆண்டுக் காலமாகச் சூத்திரர் என்றும், அவர்ணர் என்றும், இவர்கள் அனைவரும் தாசி மக்கள் என்றும் மனுநீதி மற்றும் பிற சாஸ்திரங்கள் வழி பேசியும், எழுதியும் வந்தும் மானம் இன்றி வாழ்ந்து வந்த கூட்டங்கள் பெரியார், அம்பேத்கரால் தான் உண்மை தெரிந்து, சுயமரியாதை, சமதர்மம், சமூக நீதி என்ற கோட்பாடுகளைப் புரிந்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகக் கல்வி அறிவு பெற்ற சமுதாயமாக மாறி வந்துள்ளனர்.

“கற்றதற்குப் பிறகு புரட்சி செய், ஒன்று சேர்” என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதையும், “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்று பெரியார் சொன்னதையும் மறந்து, எவன் தன் தாயைப் புனிதம் இல்லாதவனாக ஆக்கினானோ அவன் காலில் விழுந்து சரணம் என்று அடிவருடும் கூட்டத்தைக் காட்டுமிராண்டிக் கூட்டம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

காட்டுமிராண்டிக் காலத்து இனக்குழுக்கள் போன்று விதவிதமான வண்ணக் கோடுகளை நெற்றியிலும், உடம்பிலும் பட்டை பட்டையாகப் பூசிக் கொள்வதன் காரணம், தாங்கள் இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்ளும் காட்டுமிராண்டித் தனம்தானே?

( தொடரும் )…

முனைவர் சிவ இளங்கோ

முந்தைய பதிவுஒரு நூற்றாண்டு வெறி – பகுதி 1

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here