எச். ராஜாவுக்கு சவால்

மோடியின் எட்டாண்டு கால சாதனைகளை விளக்குவதற்கு நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது என்று கூறிக்கொள்கிறார்கள்.

“எட்டாண்டு காலத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு எவ்வாறு வகைவகையாக சேவை செய்தோம்! விவசாயிகளை விவசாயத்தை விட்டு துரத்துவதற்கு வேளாண் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்தோம்! மீனவர்களை கடலிலிருந்து விரட்டுவதற்கு கடல் மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்தோம்! பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் பல்வேறு கனிம வளங்களை சூறையாடுவதற்கு எவ்வாறெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி கொடுத்தோம்! வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி இளைஞர்களை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளோம்! அமைதியாக இருந்த இந்தியாவில் சாதி, மதக் கலவரங்களை அன்றாடம் தூண்டி பிளவுபடுத்தி வருகிறோம்! மூலையில் முடங்கிக் கிடந்த மதப் பண்டாரங்கள், கார்ப்பரேட் சாமியார்கள் தினவெடுத்து தெருவில் திரிவதற்கு எவ்வாறெல்லாம் அனுமதி கொடுத்துள்ளோம்” என்று உண்மையை பேசாமல், பாஜகவின் ‘ஹைகோர்ட்’ புகழ் எச்ச ராஜா தேனியில் நடந்த கூட்டத்தில் வேறு எதையோ பேசி பிதற்றி உள்ளார்.

அறநிலையத்துறையில் 10 லட்சம் கோடி ஊழல் நடந்து விட்டதாகவும், மதுரை ஆதீனத்தை திமுக மிரட்டுவதாகவும், ஆதீனத்தின் மீது கை வைத்தால் திமுகவில் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள் என்று கூறிவிட்டு, முத்தாய்ப்பாக அனைவரும் பாஜகவிற்கு வந்துவிடுவார்கள் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

படிக்க:

♦  மோடியின் அரபிக் குத்து!
♦  மோடியின் புதிய (அதானி) இந்தியா!

எட்டாண்டு காலம் மோடி செய்த சாதனைகளை மேடையில் பேச துப்புகெட்ட எச்ச ராஜா பிரதமர் வந்தபோது ஸ்டாலின் எப்படி பேசி இருக்க வேண்டும் என்று வகுப்பு நடத்துகிறார்.

என்னதான் இருந்தாலும் ‘வர்ணமாம் பிராமணே குரு’ அல்லவா சொல்லிக் கொடுப்பதற்கான தகுதி பார்ப்பானுக்கு மட்டுமே உள்ளது என்பதுதான் மனுநீதி!

எச் ராஜா போன்ற பீகாரி பார்ப்பனர்கள் தமிழகத்திலுள்ள அண்ணாமலையின் தலைமையில் செயல்படும் சூத்திர அடிமைகளுக்கு எவ்வாறு செயல்பட வேண்டும்; எவ்வாறு கலவரத்தை தூண்டும் வகையில் பேசவேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறார்.

ஆளுங்கட்சியை விமர்சிக்கிறேன் என்ற போர்வையில் மூன்றாம் தர பேச்சாளர்களை விஞ்சும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்.

சாதாரண மக்கள் இதுபோன்று பேசிக்கொண்டால் உடனடியாக அவர்கள் மீது வழக்கு பாய்கிறது ஆனால் எச்ச ராஜா மீது உள்ள “ஹைகோர்ட்டை” கூட புடுங்க முடியவில்லை.

  • செல்வம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here