மிஸ்டர் ஜெகதீஷ் வாசுதேவ் டவுசர் கிழியுது ரிலாக்ஸ் ப்ளீஸ்!

தமிழக கோவில்கள் அனைத்தையும் இந்துக்களின்(பார்ப்பனர்களின்) கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அஜண்டாவை கையில் எடுத்து வியாபாரம் செய்தார் ஜக்கி வாசுதேவ்.

ண்மையில் பிபிசி நிருபர் எடுத்த பேட்டி ஒன்றில் வெள்ளியங்கிரி மலையை சுற்றி ஜெகதீஷ் வாசுதேவ் ஆக்கிரமித்து வைத்துள்ள ஈஷா யோக மையம் பற்றி கேள்விகளை எழுப்பிய போது ஜெகதீஷ் டென்ஷனாகி ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார்.

“ஆக்கிரமிப்பை அகற்றுவது பற்றி தட்டிக் கேட்பதும், சுற்றுச் சூழல் அனுமதி பெறாதது பற்றி நடவடிக்கை எடுப்பதும் அரசின் வேலை மீடியாக்கள் அதைப்பற்றி கேள்வி கேட்கக் கூடாது என்று டென்ஷன் தோன்றுவதை கட்டுப்படுத்துவதற்கு தனியாக யோகா பயிற்சி உள்ளது என்று அடித்து விடும் ஜெகதீஷ் படு டென்ஷனுடன் அமர்ந்திருந்தார்.

பிபிசி நிருபருடன் ஜக்கி வாசுதேவ்!

இந்த ஜெகதீஷ் வாசுதேவ் மைசூர் பகுதியில் பிறந்து தமிழகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வனத்துறைக்கு சொந்தமான 4 லட்சத்து 27 ஆயிரத்து 700 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ஹாக்கா என்ற அமைப்பிடம் அனுமதி பெறாமல் பல்வேறு கட்டிடங்களை எழுப்பி உள்ளார்.

ஈஷா யோக மையத்திற்கு அரசாங்கத்தின் அனுமதி பெறாமல் சமிஸ்கிருதி என்ற வேத பாடசாலையைச் நடத்தி வருகிறார்.

படிக்க:

♦  ஈஷா யோகா ஜக்கி: மலை முழங்கி மகாதேவன்!
  ராத்திரி.. சிவ ராத்திரி!

காவிரி கூக்குரல் என்ற பெயரில் பிரபல சினிமா நடிகை, நடிகர்களையும் தொழில் அதிபர்களையும் கூட்டி வைத்து காவிரியை பாதுகாப்போம் என்று சவடால் அடித்து 10 ஆயிரத்து 676 கோடி வசூல் செய்தார் அந்த வசூல் செய்த தொகையை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார் என்று கர்நாடக நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.

இந்த மண்ணின் பூர்வ குடிகளான பழங்குடி மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் நிலத்தை அவர்களிடமிருந்து புடுங்கி ஆதியோகி சிலை என்ற பெயரில்  112 அடி உயரம் கொண்ட 100 டன் அடி தளத்துடன் கட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவில்கள் அனைத்தையும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பிடியில் இருந்து எடுத்து இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை வைத்து புதிய வியாபாரம் ஒன்றை செய்து பார்த்தார் ஜெகதீஷ் வாசுதேவ்.

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலங்களை கபளீகரம் செய்வதற்கு ஆசைப்படுகின்ற இந்த கார்ப்பரேட் சாமியார் மன அமைதி, யோகா என்று சரடு திரிப்பதும் படித்த முட்டாள்கள் தின்ற சோறு செரிக்காமல் வெள்ளியங்கிரி மலையை சுற்றி வருவதும் பார்ப்பதற்கு கண்றாவியாக உள்ளது.

மேற்கண்ட வனநிலங்களை ஆக்கிரமித்தது, பழங்குடி நிலங்களை பிடுங்கியது, காவிரி கூக்குரல் வசூலில் ஊழல் செய்தது,  இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை விழுங்க பார்ப்பது என்ற பல ஜகத் ஜால வித்தைகளை செய்து வரும் ஜெகதீஷ் வாசுதேவை அவரது சிஷ்ய கோடிகள் ஜக்கி என்று அழைக்கின்றனர்.

இந்த நாட்டின் பிரதமரே தனது பிரதான சீடராக இருக்கின்றபோது பூர்வகுடி மக்களும், தமிழர்களும் எதிர்த்துப் போராடினால் தன்னை அசைத்து விட முடியாது என்ற திமிர் தனத்துடன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளான் ஜெகதீஷ். அந்த திமிருக்கு ஆதரமான ஈஷா யோகா மையம் இருக்கும் காட்டு நிலத்தை மீட்கவும்‌ ஜக்கி அணிந்துள்ள கண்ணுக்குத் தெரியாத காக்கி டவுசைரயும் கழற்றியெறிய தொடர்ந்து போராடுவோம்.

  • சண்.வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here