ஒன்றியத்தில் மோடி ஆட்சிக்கு வந்ததும் பேரிடர் காலங்களில் தமிழ்நாடு கேட்கும் தொகைக்கும் ஒன்றிய அரசு ஒதுக்கும் தொகைக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமே இருந்து வந்துள்ளது.
2015 சென்னை மழை வெள்ளத்தின்போது 25,912 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்ட நிலையில் 1738 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது.
2016-17ம் ஆண்டு வறட்சியின்போது 39,565 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு சார்பில் கேட்கப்பட்ட நிலையில் 1748 கோடி ரூபாயை மட்டுமே மோடி அரசு ஒதுக்கியது. வர்தா புயலின்போது 22,573 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு கேட்ட நிலையில் ஒன்றிய அரசு ஒதுக்கியதோ வெறும் 266 கோடி ரூபாய்தான்.
2017-18 ஒக்கி புயலின்போது 9,302 கோடி ரூபாய் கேட்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு ஒதுக்கியது 133 கோடி ரூபாய்தான்.
கஜா புயலின்போது 17899 கோடி ரூபாய் கேட்கப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு கொடுத்தது 1,146 கோடி ரூபாய் மட்டுமே நிவர் புயல் பாதிப்பின்போது 3,758 கோடி ரூபய் கேட்கப்பட்ட நிலையில் ஒன்றிய பாஜக அரசு 63.14 கோடி ரூபாய்தான் கொடுத்தது.
கடந்த 2021ம் ஆண்டு மே 17ந்தேதி குஜராத்தை தாக்டே புயல் தாக்கியது. மே19ந்தேதி தானே நேரிடையாக சென்று பாதிப்புகளை ஆராய்ந்த பிரதமர் மோடி உடனடியாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க உத்தரவிட்டார்.குஜராத் கேட்ட முழுத்தொகையும் கொடுத்தார்!!
தற்போது தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயலுக்கு நிவாரணமாக 12000 கோடி கேட்டதற்கு இதுவரை 450 கோடி மட்டும் ஏற்கனவே கொடுக்கவேண்டிய மாநில பேரிடர் நிதியில் இருந்து கொடுத்துள்ளனர்!!
நன்றி.
ராஜீவ்காந்தி
டிவிட்டர் பதிவு